herzindagi
uses of cumin big

உங்கள் வீட்டு சமையலறையில் உள்ள இந்த மகத்தான உணவுப்பொருள் குணப்படுத்தும் 4 பிரச்சனைகள்

சீரகம் குணப்படுத்தும் நான்கு பிரச்சனைகளை படித்தறிந்து பயன் பெறலாம் வாருங்கள்.
Expert
Updated:- 2022-11-09, 11:00 IST

நமக்கு வரக்கூடிய உடல்நல பிரச்சனைகளை போக்க வீட்டிலேயே தீர்வு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்படிப்பட்ட ஒரு உணவுப்பொருள் குணப்படுத்தும் 4 முக்கிய பிரச்சனைகளை தான் நாம் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கும் ஒரு அற்புதமான உணவுப்பொருள் தான் சீரகம். இந்த உணவுப்பொருள் இந்தியாவில் மட்டுமே பிரபலமானது கிடையாது. மத்திய கிழக்கு, வடக்கு மெக்சிகன், மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவிலும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த குட்டியான பழுப்பு நிற விதை தனித்துவமிக்க வாசனை மற்றும் சுவையை கொண்டுள்ளது. இது சுவையை தருவதோடு பலவித நற்குணங்களையும் கொண்டிருக்கிறது. சீரகத்தில் தாமிரம், இரும்புச்சத்து, ஆக்சிஜனேற்ற பண்பு, வைட்டமின் - A, வைட்டமின் - C, துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை நம்முடைய உடலில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.

வயிறு சம்பந்தமான பல பிரச்சனைகள் முதல் மாதவிடாய் வலி வரை என தாய்ப்பால் அதிகரிப்புக்கும் சீரகம் உதவுகிறது. இப்போது சீரகத்தின் சிறப்பான 4 பண்பினை இந்த பதிவில் நாம் பார்ப்போம் வாருங்கள். இந்த தகவலை நமக்கு ஆயுர்வேத டாக்டர் ஐஸ்வர்யா சந்தோஷ் அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வாய்வு பிரச்சனைக்கு சீரகம்

uses of cumin

வயிற்று உபாதைகளுக்கு சீரகம் உதவுகிறது. சீரக தண்ணீரில் உள்ள இன்றியமையா எண்ணெய் உமிழ் நீர்ச் சுரப்பியை தூண்டுகிறது. இதனால் உணவு செரிமானம் அடைகிறது. வாய்வு தொல்லைக்கான மகத்தான மருத்துவமாக சீரகம் பார்க்கப்படுகிறது.

தேவையான பொருட்கள்

  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • சுக்கு - ½ டீஸ்பூன்
  • கல் உப்பு - ¼ டீஸ்பூன்

செய்முறை

  • தேவையான பொருட்கள் அனைத்தையும் அரைத்துக்கொள்ளவும்
  • உணவுக்கு சற்று முன்பாக வெதுவெதுப்பான நீருடன் இந்த பொடியை எடுத்துக்கொள்ளவும்

அஜீரண கோளாறுக்கு சீரகம்

uses of cumin

சீரகம் செரிமானத்துக்கு உதவும். மலம் கழிப்பதில் ஏற்படும் சிரமத்தை போக்கும். வாயுத்தொல்லைக்கு சிறந்த மருந்தாக அமையும். ஒருவேளை உங்களுக்கு அஜீரண கோளாறு இருக்குமெனில், சீரகத்தை வறுத்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

  • சீரகம் - 20 கிராம்
  • தண்ணீர் - 200 மிலி

செய்முறை

  • கடாயில் சீரகத்தை வறுத்துக்கொள்ளவும்
  • தண்ணீரை சேர்க்கவும்
  • 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்
  • பிறகு வடிகட்டி, ஒரு நாளைக்கு இருமுறை வெதுவெதுப்பாக குடிக்கவும்

மாதவிடாய் வலிக்கு சீரகம்

uses of cumin

மாதவிடாய் வலியா? ஆனால், மருந்து எடுத்துக்கொள்ள விருப்பம் இல்லையா? எனில், சீரகம் உங்களுக்கு உதவும். இதனில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மிகுதியாக உள்ளது. இது வலியில் இருந்து நமக்கு நிவாரணம் அளிக்கிறது.

தேவையான பொருட்கள்

  • சீரகம் - 50 கிராம்
  • வெல்லம் - 25 கிராம்

செய்முறை

  • சீரகத்தை வறுத்து பொடியாக்கி கொள்ளவும்
  • இதனோடு வெல்லம் சேர்த்து மாத்திரை போல உருட்டி கொள்ளவும்
  • இம்மாத்திரையை மாதவிடாயின் 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பாக எடுத்துக்கொள்ளவும்

தாய்ப்பால் அதிகரிக்க உதவும் சீரகம்

uses of cumin

தாய்ப்பால் குறைவாக சுரக்கிறதா? சீரகம் உங்களுக்கு உதவலாம். இந்த ரெசிபி மிகவும் பயனுள்ளதாக எனக்கும் இருந்தது என்கிறார் டாக்டர். ஆம், சீரகத்தை நீங்கள் உண்ணும் உணவில் சேர்க்கும்போது, அது தாய்ப்பால் சுரப்புக்கு பெரிதும் உதவுமாம். இதனில் உள்ள இரும்புச்சத்து, தாய்ப்பால் அளிக்கும் அம்மாக்களுக்கு உதவியாக உள்ளது.

தேவையான பொருட்கள்

  • வெதுவெதுப்பான பால் - 1 டம்ளர்
  • சர்க்கரை மிட்டாய் - சுவைக்கு
  • சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை

  • இதற்கு முதலில் சீரகத்தை வறுத்துக்கொள்ளவும்
  • பிறகு சூடான பாலில் சீரகத்தையும், சர்க்கரை மிட்டாயையும் கலக்கவும்
  • இதனை சில நாட்களுக்கு எடுத்துக்கொள்ளவும்

சீரகத்தின் உதவியுடன் இந்த 4 பிரச்சனைகளில் இருந்து நம்மால் வெளிவர முடிகிறது. வேறு ஏதேனும் உடல் பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால், இவற்றை எடுத்துக்கொள்ளும் முன்பு மருத்துவர் ஆலோசனை அவசியமாகிறது.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com