இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் மன அழுத்த பிரச்சனையால் அவதி படுகின்றனர். மன அழுத்தம் காரணமாக சிலர் தற்கொலை வரைக் கூட செல்வதுண்டு. உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதே போல ஒரு மனிதனுக்கு மனநிலை ஆரோக்கியமும் மிக முக்கியம்.
மன இறுக்கம் அல்லது மன அழுத்தம் நம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது தெரிந்ததே. இது நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை குறைத்து விடுகிறது. இந்த மன அழுத்தம் நோய்களை வாவென்று அழைக்கும் அளவிற்கு நம்மைப் பாதிக்கிறது. நம் உடலில் பல நோய்கள் ஏற்பட முதல் காரணம் இந்த மன அழுத்தம் தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த மன அழுத்த பிரச்சனையை சரி செய்வது எப்படி என்பது பலரின் கேள்வியாக உள்ளது. ஒரு சிலர் உணவு முறையை மாற்றி மன அமைதியை பெறுவார்கள். இன்னும் சிலர் அவர்களுக்கு பிடித்த புதிய ஊர்களுக்கு டூர் செல்வார்கள். இந்த நிலையில் நறுமணத்தை வைத்து மன அழுத்த பிரச்னையை சரி செய்யலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது அரோமாதெரபி என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: மகிழ்ச்சியாக வாழ உதவும் முக்கியமான 10 பழக்கங்கள்!
அரோமாதெரபி:
ஒருவரின் சிந்தனை ஓட்டமானது அவரின் மனதை அழுத்தினால், நறுமணத்தை நுகர வேண்டும். எவ்வளவு தான் கடினமான சூழ்நிலை இருந்தாலும், இந்த பயிற்சி நம் மன குழப்பத்தையும், சிந்தனையையும் மாற்றி நாம் ஈடுபட்டுள்ள வேலையின் மீது முழுக் கவனத்தைச் செலுத்த உதவும்.
அரோமாதெரபி என்று கூறப்படும் நறுமண முகர்தல் பயிற்சி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நன்மை அளிக்கும். லாவண்டர், எலுமிச்சை, சந்தனம் போன்ற எண்ணெய்கள், நறுமண ஊதுவத்திகள், நறுமண மெழுகுவர்த்திகள் போன்றவற்றை முகர்ந்து சுவாசித்தால் மன அழுத்தம் குறையும் என்று கூறப்படுகிறது. ஆனால், இவைகளை சரியான முறையில் உபயோகிக்க வேண்டும்.
அரோமாதெரபி செய்வது எப்படி?
இரு கண்களையும் மூடிக்கொண்டு ஒரு மலை உச்சியிலுள்ள பாறை மீது உட்கார்ந்து கொண்டு கீழே ஓடிக் கொண்டிருக்கும் நீரோடையைப் பார்ப்பதாக கற்பனை செய்து கொள்ளவும். இப்பொழுது உங்களுக்கு பிடித்த நறுமண எண்ணெய்யை முகர்ந்து நன்கு சுவாசித்து மூச்சை உள்ளிழுக்கவும். சலசலவென்று ஒடிக்கொண்டிருக்கும் நீரோடையின் சத்தத்தை கேட்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.
அதே போல நறுமண எண்ணெய்யை ஒரு காட்டன் உருண்டையில் நனைத்து உங்கள் ஆபீஸ் அறையில் அல்லது வீட்டின் படுக்கை அறையில் வைக்கலாம். உங்களைச் சுற்றி நறுமணம் இருக்கும்போது மனநிலை அமைதியாக இருக்கும்.
எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்?
கிளாரி சேஜ், ஆரஞ்சு, பெர்கமாட், லவாண்டர், லெமன்கிராஸ் போன்ற எண்ணெய்கள் நம் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த உதவுகிறது. லாவண்டர் எண்ணெய் பல விதங்களில் சிறந்தது. அதன் நறுமணம் மன அமைதியைத் தந்து, நம் சிந்தனை சக்தியையும் தெளிவாக்கி மேம்படுத்த உதவும். லெமன் கிராஸ் எண்ணெய் உடலின் ஆற்றல் சக்தியை வலுப்படுத்தி நம்மை நன்கு செயலாற்ற தூண்டும். மேலும் ஆரஞ்சின் மணம் நம் உணர்ச்சிகளை தட்டியெழுப்பி மனதிற்கு ஒரு அமைதியையும் சந்தோஷத்தையையும் தருகிறது.
மேலும் படிக்க:உடலுக்கு சக்தியை கொடுக்கும் சந்திர பேதன பிராணயாமம்
இந்த அரோமாதெரபி செய்வதன் மூலம் கோபம், மன அழுத்தம், மனக்கவலை, பதட்டம் போன்றவற்றை நீக்கி மன அமைதியுடன் வாழ முடியும் என்று கூறப்படுகிறது.
Image source:
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation