தற்போதைய நவநாகரீக காலத்தில் 35 வயதை கடந்தவர்களுக்கும் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருப்பதில்லை. குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் உட்பட முதியவர்கள் வரை பலருக்கும் உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதாக பல்வேறு மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன . குறிப்பாக இளைஞர்களிடையே கொலஸ்ட்ரால் பிரச்சனை பெரும் உடல்நல கவலையாக மாறி வருகிறது.
உங்கள் கொலஸ்ட்ரால் அளவை எப்பவாவது பரிசோதித்து இருக்கிறீர்களா? அதிக கொலஸ்ட்ரால் உண்மையில் பலருக்கும் கவலை அளிக்கும். கெட்ட கொலஸ்ட்ரால் மாரடைப்பு, பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம் போன்ற கடுமையான உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என மருத்துவ ரீதியான ஆய்வுகள் கூறுகின்றன.
கொலஸ்ட்ரால் என்பது இரண்டு வகையாக உள்ளது ஒன்று நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு. உடலில் உள்ள கெட்ட கொழுப்பு காலப்போக்கில் அதிக உடல் பிரச்சினைகள் ஏற்படுத்தி உடலில் தமனிகளை சேதப்படுத்தும். குறிப்பாக இதய நோய்க்கு பங்களிக்கும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. கொலஸ்ட்ரால் என்பது நமது உடலில் உயிரணுக்களில் காணப்படும் ஒரு மெழுகு போன்ற பொருளாகும்.
நல்ல கொலஸ்ட்ரால்
எல்டிஎல் LDL (குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம்) என்பது குறைந்த அடர்த்தி கொலஸ்ட்ராலாகும் இது கெட்ட கொழுப்பு என்று அழைக்கப்படுகிறது. எல்டிஎல் கொலஸ்ட்ரால் உங்கள் உடலில் தமனிகளில் உருவாகி மெழுகு படிவுகளை உடலில் உருவாக்கும்.
கெட்ட கொலஸ்ட்ரால்
ஹெச்டிஎல் HDL (உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம்) உயர் அடர்த்தி கொலஸ்ட்ரால். இது நல்ல ஆரோக்கியமான கொலஸ்ட்ராலாகும். இது உங்கள் தமனிகளில் இருந்து அதிகப்படியான கொழுப்பை உங்கள் கல்லீரலுக்கு கொண்டு செல்கிறது. கல்லீரல் உடலில் இருந்து கொலஸ்ட்ராலை நீக்குகிறது. தற்போது அதிகம் பரவி வரும் கொலஸ்ட்ரால் அளவை வீட்டில் அன்றாடம் இருக்கும் எளிய பொருட்களை வைத்து எளிதில் கட்டுப்படுத்தலாம்.
அதிக கொலஸ்ட்ரால் அளவை குறைக்க எளிய வீட்டு வைத்தியங்கள்
மஞ்சள்
மஞ்சள் இல்லாத வீட்டு சமையலறைகளை நம்மால் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு மஞ்சள் நமது ஆரோக்கியமான வாழ்க்கை முறையோடு ஒன்றிப் போய் உள்ள ஒரு மூலிகை பொருளாகும். நமது முன்னோர்களில் இருந்து தற்போதைய நவீன கால மருத்துவர்கள் வரை மஞ்சளை மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். ஒரு ஸ்பூன் மஞ்சளை வெதுவெதுப்பான நீரில் கலந்து நாம் தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை சீராக குறைக்க முடியும்.
கிரீன் டீ
தற்போதைய நவநாகரீக காலத்தில் கிரீன் டீ அனைவருக்கும் பிடித்த பானமாக உள்ளது. இந்த கிரீன் டீயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகம் உள்ளன. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவும். கேடசின் கலவைகள் இருப்பதால் கிரீன் டீயை தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை நம்மால் எளிதில் குறைக்க முடியும்.
பூண்டு
பூண்டு நம் அனைவரின் வீட்டிலும் எப்போதும் இருக்கும் ஆரோக்கியமான மூலிகை பொருளாகும். பூண்டில் அதிக அளவு அல்லிசின் உள்ளது. எனவே தினசரி காலை இரண்டு பச்சை பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால் நமது இரத்தத்தில் கொழுப்புகள் படிவதை குறைக்க உதவும்.
ஆளி விதைகள்
இதில் அதிக அளவு ஆல்பா லினோலெனிக் அமிலம் உள்ளது. இது கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டிற்கு சரியான தேர்வாகும் என மூத்த மருத்துவர் நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே ஆளி விதைகளை சரியான விகிதத்தில் நாம் பயன்படுத்தினால் கொலஸ்ட்ரால் அளவை நம்மால் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
கொத்தமல்லி
தினசரி நாம் சமைக்கும் பெரும்பாலான உணவுகளில் கட்டாயம் கொத்தமல்லி இருக்கும். அந்த அளவிற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொத்தமல்லி கொண்டுள்ளது. இதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இதில் போலிக் அமிலம் வைட்டமின் சி, ஏ மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது. எனவே அதிகாலையில் கொத்தமல்லி தண்ணீரை தினசரி குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க முடியும்.
நார்ச்சத்து உணவுகள்
கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவு பட்டியலில் சேர்க்கத் தொடங்குங்கள். தானியங்கள், ஓட்ஸ், நட்ஸ், பழங்கள் ஆகியவை கெட்ட கொலஸ்ட்ராலில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும். எனவே முடிந்த அளவு அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.
கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த கட்டாயம் மருத்துவரைத்தான் அணுக வேண்டும் என்பது இல்லை. ஏனென்றால், தற்போதைய காலத்தில் 35 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் அதிகம் வருகின்றன. எனவே நமது உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பது நம் கடமையாகும். அதனால் சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும், வழக்கமான உடற்பயிற்சி, புகை பிடிப்பதை விட்டு விடுதல் ஆகியவை கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும். எனவே கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த மேல் காணும் எளிய வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ கற்றுக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க:கொலஸ்ட்ராலை குறைக்க பூண்டை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
முக்கிய குறிப்பு
இவை அனைத்தும் பொதுவான வீட்டு வைத்தியங்கள் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக மேற்காணும் வீட்டு வைத்தியங்களை ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து நீங்கள் பின்பற்ற வேண்டும். அனைத்தையும் தினசரி நாட்களில் பின்பற்றுவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமல்ல. உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு உள்ளது என்பதை நீங்கள் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு தொடர்ந்து கொலஸ்ட்ரால் அளவு உயர்ந்து கொண்டே இருந்தால் உடனடியாக நீங்கள் மருத்துவரை சந்திப்பது நல்லது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation