சமீப காலங்களாக அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்; பாதுகாப்புடன் இருக்க செய்ய வேண்டியது?

வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறையவில்லையென்றால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப் பெறுவது நல்லது

viral fever treatment..
viral fever treatment..

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் கடந்த ஒரு மாத காலங்களாகவே காய்ச்சல் பாதிப்பால் மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர். அதிலும் கடந்த 10 நாட்களாக காய்ச்சலின் பாதிப்பு தமிழகத்தைப் பொறுத்தவரை தீவிரமாகிவருகிறது. காலநிலை மாற்றம், கடும் வெயில் போன்ற பல காரணங்களால் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். சாதாரண காய்ச்சல் தான் என மக்கள் அலட்சியமாக இருப்பதால் தீவிர காய்ச்சலாக உருமாறுகிறது. இதனால் எந்த வேலையும் சரியாக செய்ய முடியாமல் தங்களின் வாழ்க்கையை மக்கள் முற்றிலும் இழந்து விடுகின்றனர். எனவே காய்ச்சல் வந்த ஒரிரு நாட்களுக்குக் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது. இந்நிலையில் வைரஸ் காய்ச்சலைத் தவிர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்த சில டிப்ஸ்கள் உங்களுக்காக..

viral fever symptoms

வைரஸ் காய்ச்சலைத் தடுக்கும் வழிமுறைகள்:

கைகளை சுத்தமாக வைத்தல்:

காய்ச்சல் பாதிப்பைக் குறைக்க வேண்டும் என்றால் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். சாப்பாடு, ஸ்நாக்ஸ் போன்றவற்றை எப்போது சாப்பிட்டாலும் கைகளை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். வைரஸ் தொற்று எங்கிருந்து வேண்டுமானாலும் பரவலாம் என்பதால் கைகளை அடிக்கடி கழுவுவது நல்லது. மேலும் வீட்டின் சுற்றுப்புற சூழலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டினுள் குப்பைகளை சேகரித்து வைக்கக்கூடாது.

பொது இடங்களைத் தவிர்த்தல்:

திருமணம் போன்ற விசேச வீடுகள், ஊர் திருவிழாக்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், சந்தை போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். நெரிசலான இடங்களுக்குச் செல்லும் போது வைரஸ் பாதிப்பின் தாக்கம் அதிகமாக இருக்கும். பாதிப்பைக் குறைக்க வேண்டும் என்றால் பொது இடங்களுக்குச் செல்வதைத்தவிர்க்கவும். ஒருவேளை கட்டாயம் செல்லும் சூழல் ஏற்பட்டால் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். ஒருவேளை உங்களுக்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் தனிமையில் இருப்பது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்லது.

தண்ணீர் அதிகம் குடித்தல்:

உடலில் நீர்ச்சத்துக்கள் குறைவாக இருக்கும் போது பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும். எனவே எப்போதும் உடல் நலத்தைப் பாதுகாக்க தினமும் 2 லிட்டர் வரையாவது கட்டாயம் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் பழச்சாறுகள், சூப்கள் போன்றவற்றை உணவு முறையில் சேர்த்துக் கொள்வது நல்லது.

ஊட்டச்சத்துள்ள காய்கறிகள்:

உடலில் வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்றால், நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டும். குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த பழங்கள்,நெல்லிக்காய், ஆரஞ்சு, பச்சைக் காய்கறிகள், புரதச்சத்து நிறைந்த பயறு வகைகள் போன்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

fever symptoms

மருத்துவ பரிசோதனை:

மேற்கூறியுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினாலும் காய்ச்சல் பாதிப்பு குறையவில்லையென்றால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப் பெறுவது நல்லது. இரத்தப் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை போன்றவற்றை மேற்காள்வதால் தீவிர உடல் நல பாதிப்பைத் தடுக்க முடியும்.

Image source - Google
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP