herzindagi
pregancy women smell

Early Signs of Pregnancy: சுவை மற்றும் சில வாசனைகளால் கர்ப்பிணிப் பெண்கள் அவதிப்படுகிறீர்களா... அதை கட்டுப்படுத்த சில வழிகள்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பொதுவான அறிகுறி சுவை மற்றும் வாசனையின் உணர்வில் ஏற்படும் மாற்றம். அது ஏன் நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
Editorial
Updated:- 2023-07-24, 21:07 IST

கர்ப்ப காலத்தில் பெண்கள் பல மாறுதலை சந்திக்க வேண்டி இருக்கும். மேலும் அவற்றைப் பற்றி அறிந்திருப்பது உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். திடீர் எடை அதிகரிப்பு, உடல்வலி, வித்தியாசமான உணவுப் பசி, குமட்டல், தூக்கமின்மை, பெண்கள் அனுபவிக்கும் பொதுவான அறிகுறிகளின் பட்டியல். சுவை மற்றும் வாசனை உணர்வில் மாற்றம் பெண்கள் அதிக சிரமங்களை சமளிக்கும் காலகட்டமாகும். 

கர்ப்பம் ஒரு பெண்ணின் சுவை மற்றும் வாசனை உணர்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பற்றி விளக்கமாக பார்க்கலாம். ஒப்-ஜின் கிளவுட்னைன் குழும மருத்துவமனைகளின் மூத்த ஆலோசகர் டாக்டர் மது ஜுனேஜா கூருகையில் கர்ப்பம் ஒரு பெண்ணின் சுவை மற்றும் வாசனையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விளக்கமாக சொன்னார். கர்ப்பத்தின் ஒன்பது மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் இந்த மாற்றங்களைக் காணலாம். இருப்பினும் முதல் மூன்று மாதங்களில் அவை பொதுவானவை.

 

இந்த பதிவும் உதவலாம்:  கர்ப்ப காலத்தில் பெண்கள் ஏன் வெள்ளரிக்காய் சாப்பிட வேண்டும்?

சுவை மீது கர்ப்பத்தின் தாக்கம்

pregancy women smell

 

  • கர்ப காலத்தில் பெண்கள் பெரும்பாலும் கசப்பான அல்லது உலோகச் சுவையை அனுபவிக்கிறார்கள். இந்த மாற்றங்கள் பொதுவாக கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகின்றன. வாயில் இரத்த ஓட்டம் அதிகமாகி துர்நாற்றம் வீசுகிறது.

 

  • கசப்பான அல்லது உலோகச் சுவையை தவிற்க செய்ய வேண்டியவை

 

  • பாப்பிங் மிட்டாய்கள் சுவையை சமாளிக்க உதவுகிறது. நெல்லிக்காய், ஆரஞ்சு மற்றும் இஞ்சி மிட்டாய்கள் கர்ப்ப காலத்தில் குமட்டலை  கவனித்துக்கொள்ள உதவுகின்றன. 

 

வாந்தி மற்றும் குமட்டலை சமளிக்க குறிப்புகள் 

pregancy women smell

 

  • வினிகர், புளிப்பு சட்னிகள், சாஸ்கள் மற்றும் ஊறுகாய் போன்ற உணவுகள் வாயில் உள்ள உலோகச் சுவையை கட்டுப்படுத்த உதவுகின்றன.

 

  • அன்னாசி, கிவி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை உண்பது உலோகச் சுவையைப் போக்க உதவும்.

 

  • நிறைய தண்ணீர் குடிப்பது அல்லது ஒரு கிளாஸ் தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்ப்பது கசப்பான சுவைக்கு உதவும்.

 

  • வலுவான மற்றும் சாதகமற்ற புகை மற்றும் நாற்றங்களைத் தவிர்க்கவும்.

 

  • விரும்பத்தகாத வாசனையைக் கடக்க உதவும் காபி பீன்ஸ்.

 

இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப காலத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் தீர்க்கனுமா? இதோ சரியான தீர்வு!

வாசனை மற்றும் சுவை உணர்வில் ஏற்படும் இந்த மாற்றங்கள் மிகவும் இயல்பானவை மற்றும் பிரசவத்திற்குப் பிறகு தீர்க்கப்படுகின்றன. இருப்பினும், இந்த உணர்வுகள் தாயை மிகவும் தொந்தரவு செய்தால் மகப்பேறு மருத்துவரிடம் பேச தயங்கக்கூடாது. எளிய உதவிக்குறிப்புகள் மற்றும் சில குறிப்புகள் குழந்தையின் வரவை நோக்கி எதிர்பார்க்கும் அம்மா இந்த பொதுவான மாற்றங்களை தீர்க்க உதவும்.

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால், பகிரவும். மேலும் இதுபோன்ற கதைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com