herzindagi
Stress & Skin

Stress Affects The Skin: மன அழுத்தத்தால் ஏற்படும் சரும பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா?

மன அழுத்தம் நம் சருமத்தை மிக பெரிய அளவில் பாதிப்படைய செய்கிறது. அது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
Editorial
Updated:- 2023-06-07, 09:24 IST

நாம் மன அழுத்தத்தில் இருக்கும்போது நமது மனநலம் சரியாக இருக்காது அது நம் சருமத்தையும் பாதிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில் சருமத்தை கவனித்துக்கொள்வது கடினமாகிறது, இதன் காரணமாக பல பிரச்சினைகள் ஏற்படலாம்.

மனநலம் பற்றி பேசினால் மன அழுத்தத்தால் நம் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி நிச்சயமாக பேசியே ஆகவேண்டும். இன்னும் மனநலம் சார்ந்த பிரச்சனைகளால் ஏற்படும் சரும பிரச்சனைகளை நம் முக்கியத்துவமாக எடுத்துக்கொள்ளவில்லை. மன ஆரோக்கியம் நம் உடலை நேரடியாக பாதிக்கிறது. 

 

Stress life

உடலில் எங்காவது காயம் ஏற்பட்டால், வலி, காய்ச்சல் மற்றும் வயிற்றில் தொல்லை உடனே அதில் கவனம் செலுத்துகிறோம். ஆனால் மறுபுறம் நாம் மன உளைச்சலில் இருக்கும்போது அதைப் பற்றி யாரிடமும் பேசத் தயங்குகிறோம். மக்கள் பெரும்பாலும் மனநலத்தால் ஏற்படும் பாதிப்புகளை புறக்கணிக்கிறார்கள். நீண்ட நேரம் மன அழுத்தத்தில் இருப்பது உடலுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் மனநலம் பேணுவது ரொம்ப முக்கியம்.

நீங்கள் இதைப் பற்றி அறியாமல் இருக்கலாம் ஆனால் நாள்பட்ட மன அழுத்தம் நமது செரிமானம், இதய ஆரோக்கியம், சிந்திக்கும் சக்தி, உடல் ஆற்றல் மற்றும் சருமத்தையும் பாதிக்கிறது. சரும ஆரோக்கியத்திற்கும் மன அழுத்தத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி ஆயுர்வேத மருத்துவர் நித்திகா கோஹ்லியின் கருத்து என்ன என்பதை உங்களுக்கு பகிர்கிறோம்.

 

இந்த பதிவும் உதவலாம்: மன அழுத்தத்தை குறைக்க உதவும் எளிய வழிகள்!!!

 

மன அழுத்தத்துடன் தொடர்புடைய சரும ஆரோக்கியம் 

 

Stress with Skin

 

  • வல்லுநர்களின் கூற்றுப்படி நீங்கள் ஏதேனும் உங்கள் தோல் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக உங்கள் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
  • மன ஆரோக்கியம், மன அழுத்தம் மற்றும் தோல் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு இடையே நேரடி தொடர்பு உள்ளது. மன அழுத்தம், பதட்டம், தோல் குணப்படுத்துதல் போன்ற செயல்முறை மெதுவாகவே செயல்படுத்த முடியும். 
  • நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது உங்கள் சரும ஆரோக்கியத்தை புறக்கணிப்பது மிக பெரிய தவறாகும்.
  • மன அழுத்தம் காரணமாக சருமத்தின் பாதுகாப்பு பலவீனமடையத் தொடங்குகிறது. அதாவது, தோல் நோய்த்தொற்றுகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது. இதனால்தான் தோல் சம்பந்தமான நோய்கள் வர ஆரம்பிக்கின்றன.
  • உண்மையில் மன அழுத்தம் தொடர்பான அறிகுறிகள் உடலில் தெளிவாகத் தெரியும். மன அழுத்தம் காரணமாக உடல் எரிச்சலை உணரப்படலாம்.
  • நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது தவறான உணவுப் பழக்கங்களையும் பின்பற்றுகிறீர்கள், அதன் காரணமாக சருமம் பாதிக்கப்படலாம்.
  • மன அழுத்தம் ஹார்மோன் சமநிலையையும் பாதிக்கிறது, இதன் காரணமாக தோல் மோசமடைவதால் பருக்கள் போன்ற பிரச்சனையை உண்டாக்கும்.
  • மன அழுத்தம் காரணமாக உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.ஏனெனில் மன அழுத்தம் காரணமாக பல நேரங்களில் நாம் அதிகமாக சாப்பிடுகிறோம்.
  • மன அழுத்தம் காரணமாக மக்கள் அடிக்கடி மிகவும் வருத்தமாகவும் சோர்வாகவும் உணர்கிறார்கள். அவர்கள் எந்த தோல் பராமரிப்பு வழக்கத்தையும் பின்பற்றுவதைக் கூட உணர மாட்டார்கள். இதனால் அவர்களின் சரும ஆரோக்கியம் பாதிப்படைகிறது.

 

இந்த பதிவும் உதவலாம்: முகப்பரு வராமல் இருக்க என்ன சாப்பிட வேண்டும் ? 

 

உங்களுக்கு ஏதேனும் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் கட்டுரையின் கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப் பெட்டியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். எங்கள் கட்டுரைகள் மூலம் உங்கள் சிக்கலை தீர்க்க முயற்சிப்போம்.

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் பகிருங்கள். மேலும் இதுபோன்ற கட்டுரைகளை படிக்க herzindagi-யுடன் இணைந்திருங்கள்.

 

Image credits- freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com