Jewelry Benefits: பெண்கள் நகைகள் அணிவதால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய ரகசியம்!

பெண்கள் அதிகமாக  நகைகள் அணிவதில் ஆர்வம் கட்டுவார்கள். இதில் இருக்கும் ரகசியம் நகைகள் மீது இருக்கும் மோகம் ஒருபுறம் என்றாலும், அணிவதால் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கிறது

Health benefits of wearing jewelry

பெண்கள் அணியக்கூடிய அணிகலன்களுக்கு ஆன்மீக வழியாக பல பலன்கள் கூறப்பட்டாலும் உடல் சார்ந்த பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. இதனால் பெண்கள் நகைகளை ஏன் அணிய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். பாரம்பரியமாக பெண்கள் நகைகள் அணிவது வழக்கம். நகைகள் அழகுக்காக மட்டும் அணியப்படுவதில்லை உடல் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கவும், ஆன்மீக பலன்களும் நகைகளுக்கு உண்டு. ஒவ்வொரு நகைகளுக்கு அறிவியல் ரீதியாகச் சம்பந்தங்கள் உண்டு. பெண்கள் அணியக்கூடிய முக்கியமாக சில நகைகளை பற்றி பார்க்கலாம்.

நகைகள் உடலில் இருக்கும் வர்ம புள்ளிகளைத் துண்ட உதவுகிறது. நகைகள் உடலுடன் இருக்கும் நிலையில் உடலின் தட்பவெப்ப நிலை சீராக இருக்க உதவுகிறது. இதனுடன் சேர்த்து அழகும் கூடுதலாக வலு சேர்க்கிறது. தங்கத்தை மகாலட்சுமிக்குச் சமமாக கருதப்படுகிறது. தங்கம் மட்டும்தான் பெண்கள் அணிய வேண்டுமா என்றால் இல்லை. அவர்களுக்கு வசதிக்கு ஏற்ற நகைகளை அணியலாம். வெள்ளி, செப்பு மற்றும் இரும்பு போன்ற பொருட்களால் செய்யப்பட்ட நகைகளை அணியாலாம். நகைகள் அழகுக்கு மட்டுமில்லாமல் உடல் சார்ந்த பிரச்சனைகளைச் சரிசெய்ய உதவுகிறது. இருந்தாலும் இந்தியப் பெண்களுக்குத் தங்க நகைகள் என்றால் வலிமை மற்றும் பலத்தைத் தரக்கூடியது. ஏனென்றால் தங்கள் ஒரு முதலீட்டுப் பொருளாக உள்ளது. அதனால் பெண்கள் தங்கத்து மேல் அதிகம் ஆசை கொள்கிறார்கள். தொழில் சார்ந்த பிரச்சனைகள், வீட்டு மனை, கடன் மற்றும் வீடு கட்டுதல் இதுபோன்ற பல பிரச்சனைகளுக்குத் வீட்டில் இருக்கும் தங்கம் தான் உதவி சேர்க்கிறது. இதனால்தான் அனைத்து வீடுகளிலும் தங்கம் பொக்கிஷமாக கருதப்படுகிறது. நகைகள் அணிவதன் பலன்களைப் பற்றிப் பார்க்கலாம்.

காதணிகள் பலன்களைப் பார்க்கலாம்

earing inside``

பெண்கள் நகை அணிந்துகொண்டே இருக்கக்கூடிய பகுதிகளில் முக்கியமானது காதணி. சிறு வயதிலிருந்தே காதுகளில் பெண்கள் அணியத் தொடங்குவார்கள். காதில் நகைகள் அணிவதால் முக்கிய நரம்புகள் சீராகச் செயல்பட உதவியாக இருக்கிறது. நல்ல பார்வை மற்றும் கர்ப்பப்பை நரம்புகளைத் துண்டும் சக்தி இதற்கு உண்டு. மாதவிடாய் சார்த்த வலிகளைக் குறைக்க உதவுகிறது. இது அனைத்துக்கு மேல் மூளைக்கு, காதுக்குச் செயல்படும் நரம்புகள் சீராக இருக்க உதவுகிறது. நல்ல ஞபாக சக்திக்கு உதவுகிறது.

மூக்குத்தி

மூக்கில் இருக்கும் சில நரம்புகள் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுடன் தொடர்புடையது. கருப்பப் பையில் சீராக இயக்க மூக்குத்தி பலன்தருகிறது. சுவாசிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளை மூக்குத்தி அணிவதால் சரிசெய்ய முடியும். இந்த சின்ன புள்ளியில் பெரிய நன்மைகள் அடங்கியுள்ளது.

வளையல்

bangles inside

வளையல் அணிவதால் உடலில் வெள்ளை அணுக்கள் உற்பத்தி செய்ய உதவுகிறது, ஹார்மோன் செயல்பாடுகள் சரியாக இயங்க உதவுகிறது. உள்ளங்கைக்கு வலுசேர்க்க உதவுகிறது. கர்ப்ப காலத்தில் வளையல் அணிவதால் தாய்க்கு, குழந்தைக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

கொலுசு

மேலும் படிக்க: பெண்களுக்கு அதிகமாக பயத்தை கொடுக்கும் கருப்பை புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள்

பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை கொலுசு அணிவார்கள். வெள்ளி பொருட்களுக்கு நமது ஆயுளை அதிகரிக்கக் கூடிய சக்திகள் உண்டு. கொலுசு அணிவதால் கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, மற்றும் சிறுநீரக போன்ற வாயிரு சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவுகிறது. மூளையுடைய இயக்கத்தைச் சமமாக வைத்திருக்க உதவுகிறது.

மோதிரம்

hand ring inside

விரல்களில் மோதிரம் அணிவதால் மூளைக்கும், இதயத்திற்கும் செல்ல நரம்புகளுக்கு உதவுகிறது, இதனால் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ஹார்மோன்கள் தூண்டப்படுகிறது. மோதிரம் அணிவதால் மனம் அமைதியாக இருக்க உதவுகிறது. அதீத கோவத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP