
தற்போது கோடை காலம் ஆரம்பித்துள்ளது. கோடை காலம் என்றாலே உடல் உஷ்ணத்திற்கு அடுத்தபடியாக பெரிதும் பாதிக்கப்படுவது வாய்ப்புண்,வயிற்றுப்புண், நாக்கு புண், குடல் புண் மற்றும் தொண்டைப்புண். குறிப்பாக கோடை காலத்தில் டீ காபி குடித்தால் கூட நாக்கு வெந்து போன உணர்வு தோன்றும். மனித உடலின் வெப்பநிலை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. குறிப்பாக மழைக்காலம், குளிர்காலம் மற்றும் கோடை காலங்கலில் மாறிக்கொண்டே இருக்கும்.
மேலும் படிக்க: இந்த அறிகுறிகள் இருந்தால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும் - இந்த சாற்றை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்
கூடுதலாக, ஒவ்வொரு நாளும், நாம் சாப்பிடுவதைப் பொறுத்து நமது வெப்பநிலை உயர்கிறது அல்லது குறைகிறது. இது ஒரு இயற்கையான செயல். ஆனால் உடல் வெப்பநிலை அதிகரித்து சில நாட்கள் அப்படியே இருந்தால், அது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உதாரணமாக, உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது, வாய்ப்புண் வயிற்றுப்புண் நாக்கு புண்களை உருவாகின்றன.இதற்கான தீர்வுகள் இங்கே எளிதாக விளக்கப்பட்டுள்ளன.

மாசிக்காய், தேங்காய் பால் இவை இரண்டையும் சேர்த்து தயாரிக்கும் மாசிக்காய் எண்ணெயை காலையில் 10ml, மற்றும் இரவு தூங்குவதற்கு முன் 10ml சாப்பிட்டதற்கு பின், வாயில் ஊற்றி நன்கு கொப்பளித்து விழுங்கி விட வேண்டும். இதனை தொடர்ந்து செய்ய வேண்டும். இதனால் எந்த பக்க விளைவுகளும் இருக்காது. இதனைத் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் வாய் புண் வயிற்றுப்புண் நாக்குப்புண் குடல்புண் இரைப்பை புண் தொண்டைப்புண் உள்ளிட்ட அனைத்து புண்களும் குணமாகும்.
மேலே உள்ளவை புண்களிலிருந்து தற்காலிக நிவாரணம் அளிக்கும், ஆனால் நிரந்தர தீர்வுக்கு, நீங்கள் பின்வரும் வைத்தியங்களைப் பயன்படுத்தலாம்.
-1741455843407.webp)
சுத்தமான தேங்காய் எண்ணெய், தேங்காய் பால் அல்லது தேங்காய் நீர் பயன்படுத்தலாம். தேங்காய் தண்ணீர் குடிப்பது உடலை குளிர்வித்து வலி மற்றும் வீக்கத்தை நீக்குகிறது. வாய்ப் புண்கள் தாமாகவே மறைந்துவிடும்.

மேலும் படிக்க: தினமும் தவறாமல் கோழிக்கறி சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் உடலில் என்ன பிரச்சனைகள் வரும்?
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற உடல்நலம், ஆரோக்கியமான வாழ்வு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil
image source: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com