பெண்கள் பலருக்கும் காலையில் தூங்கி எழுந்தவுடன் முதுகு வலி அல்லது இடுப்பு வலி ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனை. காலையில் தூங்கி எழுந்தவுடன் உடல் சோர்வாக இருக்கும், கால்களை தரையில் வைத்து எழுந்துக்கவே முடியாத நிலை, இடுப்பு பகுதியில் இருந்து கால் வரை வலி பரவுகிறது என்று பெண்கள் சிலர் கூறுகிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. மோசமான தூக்க நிலை பொருத்தம் இல்லாத மெத்தை அல்லது தலையணை அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது உடல் பருமன் அல்லது சில உடல் நல பிரச்சனைகள் இதற்கு காரணமாக இருக்கலாம். பெண்களுக்கு காலையில் தூங்கி எழுந்தவுடன் இடுப்பு வலி வர என்ன காரணம் என்றும் அதை குணப்படுத்த உதவும் சில வீட்டு வைத்தியம் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
முதுகின் நடுப்பகுதியில் அல்லது அடிப்பகுதியில் வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. நாற்காலியில் உட்காரும்போது முன்புறமாக குனிந்து உட்காருதல், வலது அல்லது இடது பக்கம் சாய்ந்து உட்காருதல், நடக்கும்போது குனிந்த நிலையில் நடத்தல் போன்ற தவறான உடல் நிலைகள் இந்த வலிக்கு முக்கிய காரணங்களாகும்.
சீரான தூக்க நிலை:
ஒரே பக்கமாக பக்கவாட்டில் தூங்குவது அல்லது மல்லாந்து படுத்து கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்குவது, உங்கள் முதுகுக்கு நல்லது இல்லை. குறிப்பாக வயிற்றில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இது முதுகு தண்டில் அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே தினமும் இரவு தூங்கும் போது சமமான நிலையில் நேராக படுத்து தூங்குங்கள். அதேபோல மிக உயரமான தலையணை வைத்து தூங்க கூடாது. முடிந்தவரை தலையணை இல்லாமல் தூங்க பழகுங்கள், இது உங்கள் முதுகு தண்டுக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உட்காரும் நிலையை சரிசெய்யவும்:
இந்த இடுப்பு வலியைக் குறைக்க, உட்காரும் போது நிமிர்ந்து உட்கார வேண்டும். முன்புறமாக வளைந்து அல்லது பக்கவாட்டில் சாய்ந்து உட்காரும் பழக்கத்தை தவிர்க்கவும். சரியான உடல் நிலை முதுகுவலியை குறைக்கும்.
ஐஸ்கட்டி ஒத்தடம்:
20 முதல் 30 நிமிடங்களுக்கு ஒரு ஐஸ்கட்டியை வலி உள்ள இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுக்கவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம். இதனால் வீக்கம் குறைந்து, இடுப்பு வலி கட்டுப்படும்.
சூடான நீரில் குளித்தல்:
தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும் அல்லது சூடான நீரில் உட்காரவும். இது தசைகளை ஆறுதலாக்கி, முதுகு வலியைக் குறைக்க உதவும்.
உடற்பயிற்சிகள்:
ஒரு உடல் சிகிச்சை நிபுணரின் வழிகாட்டுதலின்படி, முதுகு மற்றும் இடுப்பு பகுதிக்கான நீட்சி பயிற்சிகளை கற்றுக்கொள்ளலாம். இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்வது வலியை நிரந்தரமாக குறைக்கும்.
மலச்சிக்கலைத் தவிர்க்கவும்:
முதுகுவலி இருக்கும்போது மலச்சிக்கல் ஏற்பட்டால், இடுகப்பு வலி அதிகரிக்கும். எனவே நார்ச்சத்து மிக்க உணவுகள் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் சாப்பிடவும். அதே போல நிறைய தண்ணீர் குடிக்கவும்.
மேலும் படிக்க: இருமினாலோ தும்மினாலோ சிறுநீர் கசிவு ஏற்படுகிறதா? இதை எப்படி குணப்படுத்துவது?
இந்த இடுப்பு வலி 4 வாரங்களுக்குள் குறையும். ஆனால், சில சமயங்களில் 8 முதல் 10 வாரங்கள் வரை ஆகலாம். இதற்குப் பிறகும் இடுப்பு வலி குறையவில்லை என்றால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation