Obesity Causes: உடல் பருமன் ஏற்பட முக்கிய காரணம் என்ன தெரியுமா?

உடல் பருமன் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

obesity side effects
obesity side effects

நம் உடலில் உண்டாகும் பல்வேறு நோய்களுக்கு முதன்மையான காரணம் என்ன தெரியுமா? உடல் பருமன். இது உடலை மட்டுமல்ல நம் மனதையும் பாதிக்கும் ஒரு வித நோய். உடற்பருமன் என்பது தேவைக்கு அதிகமாக உள்ள உடல் எடையை குறிக்கும். நாம் தினசரி சாப்பிடும் உணவில், நமது தேவைக்கு அதிகமாக கலோரிகள் இருந்தால் அல்லது வெளியே செலவிடும் கலோரிகள் குறைவாக இருந்தாலும் மீதியுள்ள கலோரிகள் படிப்படியாக நம் உடலில் படிந்து நாளடைவில் உடல் எடையை அதிகரிக்கும்.

உங்கள் எடை சரியாக உள்ளதா என்று கண்டுபிடிக்க:

ஒரு நபர் பருமனா இல்லையா என்று கண்டுபிடிக்க பாடி மாஸ் இண்டெக்ஸ் (BMI) என்ற முறை உதவுகிறது. இந்த பி.எம்.ஐ அட்டவணையில் 17-27 நார்மல் எடை, 27-32 அதிக பருமன், 32க்கு மேல் மிக அதிக பருமன் என்று கூறப்படுகிறது. இதை கணக்கிடுவது எப்படி? உங்கள் உடல் உயரத்திற்கு ஒரு அங்குலத்திற்கு ஒரு கிலோ எடை இருக்க வேண்டும். உதராணமாக உங்கள் உயரம் 5 அடி 7 அங்குலம் இருந்தால் அதாவது மொத்தம் 67 அங்குலம். அப்போது உங்கள் உயரம் 67 அங்குலம் இருந்தால் உங்கள் உடல் எடை 67 கிலோ இருக்க வேண்டும். மேலும் இது பெண்களுக்கு ஒரு அங்குலத்திற்கு 900 கிராம் எடை இருக்க வேண்டும். ஒருவேளை 67 கிலோவை தாண்டி இருந்தால் உடல் பருமனாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உடல் பருமன் ஏற்பட காரணம் என்ன?

உடல் உழைப்பு, உடற்பயிற்சி இன்மை, மதிய நேரம் நன்றாக சாப்பிட்டு தூங்குவது, கொழுப்பு நிறைந்த உணவு, வாழ்க்கை முறைகள், இனிப்பு வகைகளை அதிகம் உண்பது, தவறான உணவுப்பழக்கம் போன்றவைகள் தான் உடல் பருமன் ஏற்பட முக்கிய காரணம்.

obese

உடற்பருமன் ஏற்பட்டால் உடலில் சேர்ந்த கொழுப்பு, இதயம், சிறுநீரகம், கல்லீரல் இவற்றை பாதிக்கும். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆர்த்தரைட்டீஸ் போன்ற நோய்கள் உண்டாக உடல் பருமன் முக்கிய காரணம். மேலும் இது அஜீரண கோளாறுகளை ஏற்படுத்துகிறது. ஒரு நபர் குண்டாக தோன்றினாலும், உண்மையில் சக்தி குறைவானவராக தான் இருப்பார். ஜீரண மண்டலத்தை பொறுத்தவரை வரை உடற்பருமனால் அஜீரணம், பௌத்திரம், மூலம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆயுர்வேதத்தில் உடற்பயிற்சி, உலர் பொடியால் மசாஜ் செய்வது, எண்ணை மசாஜ் என்று மூன்று சிகிச்சை முறையில் உடல் பருமனை கட்டுப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க: ஒயிட் டீ தெரியுமா? இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

உடல்பருமனை கட்டுப்படுத்த:

ஒரு டேபிள் ஸ்பூன் திரிபால சூரணம் தேனுடன் குழைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் பாத்துக்க உதவும். அதே போல உங்கள் உணவில் உப்பை குறைக்கவும். உணவுக்கட்டுப்பாடு உடல் பருமனை குறைக்க பெரிதும் உதவுகிறது. 5 இட்லி சாப்பிடுபவராக இருந்தால் உணவு அளவை சற்று குறைத்து 3 இட்லி சாப்பிடலாம். அடிக்கடி பசி எடுக்கும் நேரங்களில் நார்ச்சத்து நிறைந்த பழங்கள், நட்ஸ் வகைகளை சாப்பிட்டு வரலாம். முக்கியமாக நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கும் கலோரிகளை விட, அதிக கலோரியை உடல் உழைப்பில் செலவழிக்க வேண்டும். நம் உடல் வியர்வை மூலம் கலோரிகள் வெளியேற்ற படுகிறது. மேலும் உடல் எடை அதிகரிப்பு பெருமளவு மனதையும் பாதிக்கும். எனவே நம் உடல் பருமன் ஆகாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP