அன்பின் வெளிப்பாடாக பிடித்தமான நபருக்கு முத்தம் கொடுப்பது இயல்பே. முத்தம் கொடுப்பது உணர்வு ரீதியான நெருக்கத்தை அதிகரிப்பதோடு உடல் மற்றும் மனநலனுக்கு நன்மைகளை தருகிறது. சாதாரண முத்தம் உடலில் ஒரு நிமிடத்தில் மூன்று கலோரிகளை குறைக்கும், உதட்டு முத்தம் கொடுப்பது 20 கலோரிகளுக்கு மேல் குறைக்கும். முத்தும் கொடுத்தால் மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும். இது உடலில் இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு செக்ஸ் உணர்வையும் தூண்டுகிறது. முத்தம் கொடுப்பதில் பல நன்மைகள் அடங்கி இருந்தாலும் உடலில் வேறு சில விஷயங்களும் நடக்கும். அடிக்கடி முத்தமிடும் நபரானால் முத்தத்தின் தாக்கத்தை தெரிந்து கொள்வது அவசியம். மருத்துவரின் தகவல் பெற்று இந்த பதிவு எழுதப்பட்டுள்ளது.
முத்தம் கொடுத்தவுடன் நம் உடலில் சில மாற்றங்களை உணரலாம்.
உதட்டு முத்தம் கொடுக்கும் போது வாயின் எச்சியில் இருந்து ஒருவருக்கு ஒருவர் பாக்டீரியா, வைரஸ் அதிகளவில் பரவியிருக்கும். நீண்ட நேரம் முத்தமிடுவது நோய்களை கடத்தும். காய்ச்சல், சளி எளிதில் பரவும். கண்ணுக்கு தெரியாத பல கிருமிகள் முத்தத்தின் வழியாக பரிமாற்றப்படும். வாய் சுகாதாரம் காக்க தவறி முத்தம் கொடுத்தால் அது மோசமான அனுபவமாக மாறலாம்.
முத்தமிடுவதால் பல் சொத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் கடத்தப்படலாம். இந்த பாக்டீரியாக்கள் எச்சில் வழியாக பரவிவிடும். சில நேரங்களில் ஒவ்வாமை ஏற்படும். அனாபிலாக்சிஸ் என்ற கடுமையான ஒவ்வாமையால் பாதிக்கப்படுவீர்கள்.
குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் முத்தம் கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். முத்தமிடும் பழக்கத்தால் நோய் எதிர்ப்பு சக்தி மேலும் குறையலாம். பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தாத பாக்டீரியாக்களை கூட எதிர்த்து உடல் போராடாது.
முத்தம் கொடுப்பது பல நன்மைகளை கொண்டிருந்தாலும் அதன் முழு சாதக பாதக விஷயங்களை தெரிந்துகொள்வது முக்கியம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com