காய்கறிகளின் ராஜா என்று அழைக்கப்படும் கத்திரிக்காய் சாப்பிட்டு வந்தால் நல்ல கொழுப்பு அதிகரிக்க செய்யும்

கத்தரிக்காய் என்பது உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு காய்கறி. இவற்றை அப்படி சாப்பிட்டால் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்யலாம் என்பதை பார்க்கலாம்
image

நமது உடலுக்கு கொலஸ்ட்ரால் மிகவும் அவசியம். இது இரண்டு வகையாகும், நல்லது மற்றும் கெட்டது, மருத்துவ மொழியில் கூறினால் LDL மற்றும் HDL என்று அழைக்கப்படுகிறது. உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்தால் பல கடுமையான நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கு கத்திரிக்காய் உணவில் சேர்த்து வந்தால் உடலில் நல்ல கொழுப்பு அதிகரிக்க செய்யலாம்.
கத்திரிக்காய் சாப்பிடுவதால் நல்ல கொழுப்பை அதிகரிக்க நன்மை பயக்க முடியும். சிலருக்கு அதன் சுவை பிடிக்காவிட்டாலும், இவற்றை எடுத்துக்கொள்வதால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கத்தரிக்காயில் வைட்டமின் பி3 காணப்படுகிறது, இது HDL அளவை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உடலில் நல்ல கொழுப்பு அதிகரிக்கும் போது கெட்ட கொழுப்பை தானாகவே கட்டுப்படுத்த முடியும். இது இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது. கத்தரிக்காயில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, அவை இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் எடை குறைக்கவும் உதவுகின்றன.

உணவில் கத்திரிக்காய் எடுத்துக்கொள்ளும் வழிகள்

கத்தரிக்காய் குழம்பு
கத்தரிக்காய் பொரியல்
கத்தரிக்காய் சாம்பார்
கத்தரிக்காயை சுட்டதாகவோ அல்லது கிரில்லாகவோ சாப்பிடலாம்

இதய நோயை குறைக்க உதவுகிறது

கத்திரிக்காயில் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் காரணமாக இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. அதேவேலையில் கத்திரிக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்வதால் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்குகிறது. குளோரோஜெனிக் அமிலம் கொட்ட கொழுப்பின் அளவை குறைக்கவும் உதவும். அதிக அளவு LDL கொழுப்பு உடலில் இருந்தால் இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்க செய்யும்.

heart care

கத்திரிக்காயில் குறைந்த கலோரி இருக்கிறது

குறைந்த கலோரி இருக்கும் உணவை சாப்பிட நினைப்பவர்களுக்கு கத்தரிக்காய் ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். இதில் குறைத்த அளவிளான கலோரிகள் உள்ளன மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. சுமார் ஒரு கப் கத்தரிக்காயில் வெறும் 35 கலோரிகள் மட்டுமே இருப்பதால் இதை தேர்வு செய்து சாப்பிடலாம்.

_brinjal

புற்றுநோயை தடுக்க உதவுகிறது

அடர் ஊதா நிற கத்தரிக்காயில் நாசுனின் உள்ளதால் உயிரணு சவ்வுகளைப் பாதுகாத்து பாதுகாக்க உதவுகிறது. செல்களை தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கலை பாதுகாக்க செய்கிறது.

மேலும் படிக்க: கனமான மார்பகங்கள் இருக்கும் நபர்கள் இறுக்கமான பிரா அணிவதால் தோல்களில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தெரியுமா?

அதேவேலையில் உங்கள் கொழுப்பு கணிசமாக அதிகரித்தால் ஒரு மருத்துவரை அணுக வேண்டும். சிலருக்கு கத்தரிக்காய் ஒவ்வாமையும் இருக்கும், எனவே அதை உங்கள் உணவில் சேர்ப்பதற்கு முன், நிச்சயமாக ஒரு மருத்துவரை அணுகவும்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP