
வாழைப்பழத்தில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின்கள், இரும்புச் சத்து, நார்ச்சத்து போன்ற ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக்கூடிய சத்துக்கள் பல உள்ளன. இது உடலில் ஏற்படும் பல ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குகிறது. அதேசமயம் கால்சியம் சத்துக்கள் நிறைந்த பால் உங்களுடைய ஸ்மூத்தி அல்லது ஷேக்குகளை ஒரு ஆரோக்கியமான பானமாக மாற்றிவிடும்.
பாலும் வாழைப்பழமும் தனித்துவமான பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன. ஆனால் இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதா? இந்த கேள்விக்கான விடையை உணவியல் நிபுணரான ராதிகா கோயல் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க ஒரே ஒரு பீட்ரூட் போதும்!

பலரும் வாழைப்பழ ஷேக் அல்லது வாழைப்பழம் மற்றும் பால் கலவையுடன் தங்கள் நாளை தொடங்குகிறார்கள். நிபுணரின் கருத்துப்படி இயற்கை சர்க்கரை நிறைந்த வாழைப்பழமும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாலும் சேரும்பொழுது உடலுக்கு பல வைட்டமின்களும், தாதுக்களும் கிடைக்கின்றன. இந்த காம்பினேஷனை உடற்பயிற்சிக்கு பின் எடுத்துக் கொள்வது நல்லது.
இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து எடுத்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆயுர்வேதத்தின்படி இந்த கலவையானது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மந்தமாக்கிவிடும். இது செரிமானத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் உணவை ஜீரணிக்க கடினமாக இருக்கலாம். மேலும் இந்த கலவையானது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஆயுர்வேதத்தின்படி பழங்களையும் திரவ உணவுகளையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட கூடாது. இதனால் உடலின் செயல்பாடுகளும் பாதிக்கப்படலாம்.

இது போன்ற விளைவுகளை தடுக்க பாலையும் வாழைப்பழத்தையும் தனித்தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதையோ அல்லது குடிப்பதையோ தவிர்ப்பது நல்லது. இந்த இரண்டு உணவுகளையும் குறிப்பிட்ட இடைவெளிவிட்டு தனித்தனியாக சாப்பிடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: குடைமிளகாயில் இவ்வளவு நன்மைகள் இருக்கா, தெரிஞ்சா அசந்திருவீங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com