வயிற்று வலி ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும் பல நேரங்களில் வாய்வு பிரச்சனை தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. வாய்வு உண்டாகும் போது வயிறு வீக்கம் ஏற்பட்டு வயிற்று வலி தொடங்கி விடுகிறது. பெண்களுக்கு தான் இந்த பிரச்சினை அதிகம் உண்டாகிறது, பொதுவாக வாய்வு பிரச்சினைக்கு காரணம் தவறான உணவுப் பழக்கம் தான். இந்த பிரச்சினை இருப்பவர்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
வாய்வை உண்டாக்கும் உணவுகளை தவிருங்கள்
வாய்வை உண்டாக்கும் உணவுகளை உண்பது தான் இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம். நீங்கள் வாய்வு பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்க நினைத்தால் வாய்வை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்க வேண்டும். பீன்ஸ், பட்டாணி, சிட்ரஸ் பழங்கள், காலிஃப்ளவர், முட்டைகோஸ்,உருளை கிழங்கு, கிழங்கு வகைகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
இதுவும் உதவலாம் : இரவு உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி செய்வதில் இவ்வளவு நன்மைகளா
சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்
எப்போதும் பரபரப்பாக இருப்பதால் பெண்கள் தங்கள் சாப்பாடு விஷயத்தில் கவனத்தை செலுத்துவது இல்லை. சில சமயம் அதிக வேலைப்பளு காரணமாக அவர்கள் நீண்ட நேரம் பசியோடு சாப்பிடாமலே இருப்பார்கள். இது போல் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால் வாய்வு கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பல பெண்களுக்கு காலையிலேயே எழுந்து விட்டு, வயிற்றுக்கு எதுவும் சாப்பிடாமல் வேலை செய்யும் பழக்கம் உள்ளது. நீங்கள் காலையில் கண் விழித்த ஒரு மணி நேரத்துக்குள் உணவு உண்ணாமல் போனால், உங்களுக்கு வாய்வு பிரச்சனை ஏற்படும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதனால் தான் காலை சாப்பாடு மிகவும் அவசியம். இதோடு மட்டும் அல்ல, சில சமயம் அவசர அவசரமாக சாப்பாட்டை சரியாக மென்று சாப்பிடாமல் விழுங்குவோம். இப்படி அவசர அவசரமாக சாப்பிடும் போதும் வாய்வு ஏற்படுகிறது. எனவே இந்த பழக்கத்தை சரிசெய்து கொள்ளவும்
காரமான உணவு உண்பதை தவிருங்கள்
அதிகப்படியான காரம் வயிற்றில் வாய்வு கோளாறை உண்டாக்கும். குறிப்பாக உங்கள் உணவில் அதிக காரம் அல்லது எண்ணெய் பொருள் இருந்தாலும் வாய்வு கோளாறு ஏற்படுகிறது
கஃபீனை தவிர்க்க வேண்டும்
நீங்கள் அதிகமான கஃபீனை உட்கொண்டு வந்தாலும் இந்த கோளாறு ஏற்படுகிறது. ஏனென்றால் கஃபீன் அசிடிட்டியை உருவாக்குகிறது. குறிப்பாக நீங்கள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி, டீ போன்ற பானங்களை குடிக்கும் பழக்கம் இருந்தால் அதை மாற்றி கொள்ளுங்கள்.
வாய்வு பிரச்சனைக்கு சில எளிமையான வீட்டு குறிப்புகள்
வாய்வு பிரச்சனையை உடனடியாக குறைக்க மிக சிறந்த கஷாயம் சீரக கஷாயம் தான், இதை செய்வதற்கு
தேவையான பொருட்கள்
- சீரகம் - 2 ஸ்பூன்
- வெல்லம் - 1 ஸ்பூன்
- தண்ணீர் - 2 கப்
செய்முறை
- 1 ஸ்பூன் சீரகத்தை எண்ணெய் ஊற்றாமல் பொன்நிறமாக வறுத்து கொள்ளவும்.
- பின்பு வறுத்துவைத்த சீரகத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
- கடைசியாக பொடித்த வெல்லம் சேர்க்கவும்
- 5-7 நிமிடங்கள் கொதிக்க வைத்து பாதியாக வற்றிய பின்பு அடுப்பை அணைக்கவும்.
- வெதுவெதுப்பான சூட்டில் பருகவும், இது சிறந்த நிவாரணம் அளிக்கும் .
சில கூடுதல் குறிப்புக்கள்
- கருப்பு மிளகு உட்கொண்டு வந்தால் செரிமான பிரச்சினை நீங்கி விடும். இதனால் வாய்வு ஏற்படாது. இந்தப் பிரச்சினை சரியாக, பாலுடன் கருப்பு மிளகு சேர்த்து பருகலாம்.
- வெதுவெதுப்பான நீரில் பெருங்காயத்தை சேர்த்து பருக இந்த பிரச்சினை ஓடி விடும். அதிகமாக வாய்வு கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பயிற்சியை ஒரு நாளைக்கு 3 முறை செய்ய நிவாரணம் கிடைக்கும். இதை தவிர, வெறும் சுடு தண்ணீரை அடிக்கடி குடித்தாலும், வாய்வு கோளாறு தீரும்.
- வயிற்றில் எரிச்சல் இருந்தால் கொத்துமல்லி இலைகளை பச்சையாக சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். இதே போல, கொத்துமல்லி இலைகளை வதக்கி மோரில் கலந்து குடிக்க வாய்வு கோளாறு அறவே நீங்கி விடும்.
- இலவங்கப்பட்டை கூட வாய்வு கோளாறை நீக்க வழி வகுக்கிறது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இலவங்கப்பட்டையை நீருடன் கொதிக்க விடவும், பின் அதை ஆற விட்டு, வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வாய்வு கோளாறு ஓடி விடும். இதை தேனுடன் கலந்து குடிக்கலாம். பூண்டு வாய்வு கோளாறை சரி செய்கிறது.
- பூண்டை சீரகம், தனியாவுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி குடிக்க நல்ல தீர்வு கிடைக்கும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம்.
- 2-3 ஏலக்காய் தினமும் சாப்பிட செரிமான கோளாறு நீங்கி விடும். வாய்வு பிரச்சனையும் காணாமல் போகும். இவற்றை தவிர, ஒரு துண்டு இஞ்சியை மெல்ல வாய்வு தொல்லை கட்டுப்படும்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
குறிப்பு : கர்ப்பிணிகள்,பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவ ஆலோசனை பெற்ற பின்பு மட்டுமே உட்கொள்ள வேண்டும். தொடர்ந்து வலி இருந்தால் மருத்துவர் ஆலோசனை அவசியம், இந்த வீட்டு குறிப்புகள் மருத்தவ ஆலோசனைக்கு மாற்றல்ல.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation