ஒலிகுரியா என்பது உடலில் இருந்து குறைவான சிறுநீர் வெளியேற்றத்தை குறிக்கும் மருத்துவச் சொல் ஆகும். உடலில் சிறுநீர் உற்பத்தியாகவில்லை என்றால் அது அனூரியா என்றழைக்கப்படுகிறது. ஆரோக்கியமான நபர் ஒருவர் பொதுவாக 24 மணி நேரத்தில் 6 முறை சிறுநீர் கழிப்பார். சராசரியாக ஒரு நாளில் உடலில் 1.5 லிட்டர் சிறுநீர் உற்பத்தி ஆகும். கோடை காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க தவறும் போது உடலில் சிறுநீர் உற்பத்தி குறையக்கூடும். உடலில் ஒலிகுரியா அல்லது அனூரியா பிரச்னை இருந்தால் மருத்துவ கவனம் தேவை. குறைவான சிறுநீர் வெளியேற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளன.
சிறுநீர்ப்பை ஆரோக்கியத்தில் வெயிலின் தாக்கம்
கோடையில் வழக்கத்தை விட அதிகமாக உடலில் இருந்து வியர்வை வெளியேறும். எனவே வியர்வையில் இழக்கும் திரவங்களை உடல் ஈடுகட்ட வேண்டியிருக்கும். தினமும் போதுமான மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமானது. கோடையில் தளர்வான காற்றோட்டமான ஆடைகளை அணியவும். அதிகளவு தண்ணீர் குடிப்பதால் உடலில் சிறுநீர் வழியாக பாக்டீரியாகள், பூஞ்சைகள் அகற்றப்படும்.
கோடையில் சிறுநீர் பிரச்சனைக்கு இயற்கை வைத்தியம்
இப்பிரச்னையை தீர்ப்பதற்கு எளிமையான வீட்டு வைத்தியம் போதும். கோடை காலத்தில் தண்ணீர் மற்றும் மோர் குடிப்பதை அதிகரிக்கவும். புரோபயாட்டிக் உணவுகள் குடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் பெருக்கத்தை அதிகரிக்க உதவுகின்றன. உடலில் வைட்டமின் சி அளவை அதிகரிக்க ஏராளமான சிட்ரஸ் பழங்களை சாப்பிடுங்கள். தினமும் ஒரு பூண்டு சாப்பிடுங்கள்.
நீரிழப்பு
சிறுநீர் வெளியீடு குறைவதற்கு நீரிழப்பு மிகவும் பொதுவான காரணமாகும். வயிற்றுப்போக்கு, வாந்தி அல்லது வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு உடலில் திரவங்களை இழப்பதால் ஈடுசெய்ய முடியாதபோது நீரிழப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக சிறுநீரகங்கள் திரவத்தை தக்கவைத்துக் கொள்கின்றன.
தொற்று
தொற்று காரணமாக உடலில் ஒருவிதமான அதிர்ச்சியில் ஏற்படும். இது உங்களுடைய உறுப்புகளில் இரத்த ஓட்டத்தைக் குறைக்கும். இதற்கு உடனடி மருத்துவ கவனம் தேவை.
சிறுநீர் பாதை அடைப்பு
சிறுநீர் சிறுநீரகத்தை விட்டு வெளியேற முடியாதபோது சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுகிறது. சிறுநீர் சரியாக வெளியேறவில்லை என்றால் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்படும். இது சிறுநீர் வெளியேற்றத்திற்கு வழிவகுக்கும்.
மேலும் படிங்க அயோடின் பற்றாக்குறையினால் நீங்கள் எதிர்கொள்ளும் ஆரோக்கிய பிரச்னைகள்
சிறுநீரக செயலிழப்பு
சிறுநீரக செயலிழப்பு என்பது சிறுநீர் வெளியீடு குறைவுக்கு பொதுவான காரணங்களில் ஒன்றாகும். சிறுநீரக செயலிழப்பு அபாயம் உள்ளவர்கள், நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் காலப்போக்கில் குறிப்பிடத்தக்க சிறுநீரக செயலிழப்பை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம்.
சிறுநீர் வெளியீடு குறைவுடன் தலைச்சுற்றல், துடிப்பு அதிகரிப்பு, தலைச்சுற்றல் ஆகியவை ஹைபோவோலீமியா (உடலில் குறைந்த திரவம்) அல்லது நிலையற்ற இரத்த அழுத்தத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation