மார்பக அளவை குறைக்க உதவும் உணவுகள்
பெண்கள், தங்களின் மார்பக அளவை அதிகரிப்பதற்கும், குறைப்பதற்கும் பல காரணங்கள் உள்ளன. எனினும், இது அவரவர்களின் மனநிலை பொறுத்த தனிப்பட்ட விருப்பமாகும். ஒரு சில பெண்கள் மார்பகம் சிறிதாக இருப்பதையே விரும்புகின்றனர். சிலருக்கு மார்பகம் பெரிதாக இருப்பதே பிடிக்கும். மார்பகம் பெரிதாக இருக்கும் பெண்கள் பலவித பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.தோள்பட்டை வலி, முதுகு வலி, கழுத்து வலி போன்றவையும் இதில் அடங்கும்.
மார்பக அளவு குறித்து கவலை கொள்கிறீர்களா? மார்பக அளவை குறைக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? இந்த தலைப்பு குறித்து, ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் உணவுமுறை நிபுணருமான அனுபமா அவர்கள் கூறுகையில், ‘பெண்கள் தங்கள் மார்பகம் பெரிதாக இருப்பதை விரும்பவில்லை எனில், ஒரு சில உணவை உண்டு வரலாம்.’ என்கிறார். நீங்கள் சாப்பிடும் உணவினால், உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிந்திருப்பீர்கள். மார்பகம் பெரிதாக உள்ள பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுமுறை குறித்து விளக்குகிறது இந்த பயனுள்ள பதிவு.
மார்பகம் பெரிதாக இருப்பதற்கான காரணம்
- மார்பக அளவு அதிகரிப்பதற்கான முதல் காரணம் கர்ப்பம் தான். இந்தக் கால கட்டங்களில் பெண்களின் உடலில் பலவித மாற்றங்கள் நிகழும். மார்பக திசு, பெண்களின் உடம்பில் பால் சுரப்பதற்கான வேலையை செய்கிறது. இந்த ஹார்மோன் மாற்றங்கள் உடலில் நிகழும்போது, திசு விரிவடையும். இதனால், காலப்போக்கில் மார்பகங்களின் அளவும் அதிகரிக்கிறது.
- உங்களுக்கு உடல்நிலை சரியற்று இருக்கும்போது மருந்துகளை எடுத்துக்கொள்வீர்கள். தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொண்டாலும், சில பக்க விளைவுகள் உண்டாகும். எனவே, பெரிய மார்பகங்களுக்கு மருந்துகளும் ஒரு காரணமாகின்றன.
- மார்பக அளவு அதிகரிப்பதற்கு மரபணுக்களும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆளி விதைகள் அளிக்கும் நன்மைகள்
ஆளி விதைகளினால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா? இவை உடல் மற்றும் சருமம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
உடலில் எஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருக்கும்போது, மார்பகத்தின் அளவு அதிகரிக்கும். இது போன்ற சூழலில், எஸ்ட்ரோஜன் அளவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான உணவினை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
இதற்காக, உங்கள் உணவு முறையில் ஆளிவிதையை சேர்த்துக்கொள்ளவும். இதனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது லிக்னான்களின் சிறந்த ஆதாரமும் கூட.
சாப்பிடுவது எப்படி?
- அரை கப் தண்ணீரில் 1 டீஸ்பூன் ஆளிவிதைகளை இரவே ஊறவைத்து விடவும்
- அடுத்த நாள் காலையில் தண்ணீருடன் சேர்த்து ஆளிவிதைகளை உட்கொள்ளவும்
- ஆளிவிதைகள் சூட்டை கிளப்பக்கூடியவை என்பதை மறவாதீர். சூடான உடல் வெப்பநிலை உடையவர்கள், அளவுக்கு அதிகமாக ஆளிவிதைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. எனவே தான் ஊறவைத்து சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.
நார்ச்சத்து நிறைந்த உணவு மார்பக அளவை குறைக்குமா?
நார்ச்சத்து, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். இது உடலில் உள்ள எஸ்ட்ரோஜன் அளவை குறைக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இதன் மூலம் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களையும் தடுக்கலாம். மார்பகம்
பெரிதாக இருப்பதை நினைத்து நீங்கள் கவலைப்பட்டால், நார்ச்சத்து நிறைந்த பழங்களையும், தானியங்களையும் உங்கள் அன்றாட உணவோடு சேர்த்துக்கொள்ளலாம். இதற்கு நீங்கள் ஆப்பிள் மற்றும் அவகேடோவை சாப்பிடலாம். மேலும், கொண்டைக்கடலை, பட்டாணி, சிவப்பு காராமணி மற்றும் பயறு வகைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவற்றை உட்கொள்வது மார்பக அளவை குறைப்பதோடு மட்டுமல்லாமல், எண்ணற்ற நன்மைகளையும் தருகிறது.
இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation