பெண்கள் ஒவ்வொருவரும் தங்களது வாழ்நாளில் சந்திக்ககூடிய ஹார்மோன் மாற்றங்களில் ஒன்று தான் மாதவிடாய். இந்த சமயத்தில் பல பெண்களுக்கு வயிற்று வலியுடன் முடிவதில்லை, சில நேரங்களில் மாதவிடாய் காலத்திற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே மார்பக பகுதிகளில் வலி, கால் வலி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இது அவர்களை மிகவும் சோர்வடைய செய்வதோடு பல நேரங்களில் எந்தவொரு வேலையையும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளிவிடுகிறது.
எப்போது வலி ஆரம்பிக்கும்?
பெண்களுக்கு மாதவிடாய் காலத்திற்கு ஒரு சில மணி நேரம் முதல் ஒரு நாள் முன்னதாகக் கூட வலி ஏற்படும். இதைத் தவிர கால் குடைச்சல், வலி போன்ற பாதிப்புகளையும் அவர்கள் சந்திக்க நேரிடும். இதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக பெண்களுக்கு 24 மணி நேரம் முதல் 48 மணி வரை கூட வலி நீடிக்கும். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் எண்டோமெட்ரியோடிக் வலி மிகவும் கடுமையானதோடு ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை வலி நீடிக்கும். இதற்கு எவ்வித மருத்து உதவி எதுவும் தேவைப்படாது என்றாலும், சில வீட்டு வைத்தியங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதோ மாதவிடாய் காலத்தில் கால் வலியைக் குணப்படுத்துவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இங்கே விரிவாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
வீட்டு வைத்திய முறை:
- மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வலியைக் குறைக்க வேண்டும் என்றால் பெண்கள் சூடான தண்ணீரைக் கொண்டு கால்களுக்கு ஒத்தனம் வைக்க வேண்டும். அல்லது வலி அதிகமாக இருக்கும் போது சூடான தண்ணீரில் குளிக்க வேண்டும். இது தசைகளில் ஏற்படக்கூடிய வலியைக் குறைக்க உதவியாக இருக்கும்.
- மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வலியைக் குறைக்க வேண்டும் என்றால், சுமார் 30 நிமிடங்களுக்கு மெதுவாக வாக்கிங் செல்ல வேண்டும்.
- மாதவிடாய் சுழற்சியின் போது சரியான நீரேற்றத்தை உறுதிப்படுத்த வேண்டும். இது உங்களை சோர்வாகமால் பார்த்துக் கொள்ளும். எனவே இளநீர் அல்லது தண்ணீர் அதிகளவு பருக வேண்டும்.
- மாதவிடாய்க்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக உப்பு, மசாலா மற்றும் சர்க்கரை உட்கொள்ளலைக் குறைக்கவும். இது தசைகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும், இதன் விளைவாக மாதவிடாய் காலத்தில் வலி குறைவாகவோ அல்லது வலி இல்லாமலோ இருக்க உதவியாக இருக்கும்.
இதுபோன்ற முறைகளை நீங்கள் மேற்கொண்டாலும், மாதவிடாய் காலத்தில் கடுமையான வலி ஏற்படும் பட்சத்தில் மருத்துவரின் ஆலோசனைப் பெறுவது நல்லது. மேற்கூறியுள்ள முறைகளை நீங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டாலே மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய கால் வலியைக் குறைக்க முடியும் என்பதில் நினைவில் வைத்துக் கொள்ள மறந்துவிடாதீர்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation