herzindagi
image

தொடை இடுக்கில் அரிப்பு நீங்க; இந்த இயற்கை வைத்தியங்களை ட்ரை செய்து பாருங்க

ஆண்களை விட பெண்களே இந்தப் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் எடை அதிகம் உள்ள பெண்களுக்கு தான் இந்த நிலை அதிகம் காணப்படுகிறது. இந்த பாக்டீரியா தொற்று சம்பந்தப்பட்ட பிரச்சனையை வீட்டிலேயே சரி செய்ய சில எளிய வழிகள் உள்ளன. 
Editorial
Updated:- 2025-05-23, 10:47 IST

கோடை காலத்தில் தொடைப்பகுதியில் ஏற்படும் அரிப்பு பெரும்பாலான பெண்களுக்கு மிகவும் வேதனையான ஒரு அனுபவம். இது குறிப்பாக இரவு நேரங்களில் தூக்கம் கெடுக்கும் அளவுக்கு தீவிரமாக இருக்கும். தொடை இடுக்குப் பகுதிகளில் சிவப்பு தடிப்புகள் தோன்றி பெரும் வலியை ஏற்படுத்தும். ஆண்களை விட பெண்களே இந்தப் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் எடை அதிகம் உள்ள பெண்களுக்கு தான் இந்த நிலை அதிகம் காணப்படுகிறது. இந்த பாக்டீரியா தொற்று சம்பந்தப்பட்ட பிரச்சனையை வீட்டிலேயே சரி செய்ய சில எளிய வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இந்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

கற்றாழை ஜெல்:


கற்றாழையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அரிப்பை குறைக்க உதவுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் கற்றாழை ஜெல்லைப் பூசினால், தொடை அரிப்பு கட்டுப்பாட்டுக்குள் வருவதோடு வலியும் படிப்படியாக குறையும்.


தேங்காய் எண்ணெய்:


தொடை இடுக்குகளில் ஏற்படும் அரிப்புக்கு தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த தீர்வு. இதில் உள்ள ஆன்டிசெப்டிக் மற்றும் ஈரப்பதம் அளிக்கும் பண்புகள் எரிச்சல் மற்றும் அரிப்பைக் குறைக்கும். மேலும் நன்மை பெற தேங்காய் எண்ணெய்யுடன் மஞ்சள் கலந்தும் பயன்படுத்தலாம்.

coconut-oil-732x549-thumbnail (1)

பேக்கிங் சோடா:


தொடையில் அரிப்பு மற்றும் ஒவ்வாமை ஏற்பட்ட இடங்களில் பேக்கிங் சோடாவை தண்ணீரில் பேஸ்ட் ஆக்கி கலந்து பூசவும். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அரிப்பு மற்றும் வீக்கத்தை குறைக்கும். மேலும் இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.

நீரேற்றம்:


சருமத்தில் நீரேற்றம் இல்லாமை தொடையில் ஏற்படும் அரிப்புக்கு முக்கிய காரணம். எனவே அதிக அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைப்பதன் மூலம் இந்த பிரச்சனையை தடுக்க உதவும்.


சூடு மற்றும் குளிர் ஒத்தடம்:


தொடை அரிப்பு தாங்க முடியாத அளவிற்கு இருந்தால், சுடு தண்ணீரில் மஞ்சள் கலந்து பாதிக்கப்பட்ட பகுதியை கழுவவும். பின்னர் 10 அல்லது 15 நிமிடங்கள் அந்த இடத்தில் ஐஸ் பேக் வைத்து ஒத்தடம் கொடுக்கவும்.

cold pack knee teaser

காற்றோட்டமான துணிகளை அணியுங்கள்:


தொடைப்பகுதியில் அதிக வியர்வை அரிப்பை ஏற்படுத்தும். எனவே காற்றோட்டம் உள்ள காட்டன் துணிகள் அணிவது இந்த பிரச்சனையை தடுக்கும்.


உப்பு தண்ணீரில் கழுவுதல்:


சுடு தண்ணீரில் உப்பு கலந்து தொடையில் ஏற்படும் அரிப்பு பகுதிகளை சுத்தம் செய்யவும். பின்னர் மருத்துவரின் ஆலோசனைப்படி அரிப்பு மருந்து பயன்படுத்தவும்.

தொடை அரிப்பை தடுக்கும் முறைகள்:

 

  • பொதுவாகவே வெயில் காலங்களில் தொடை அரிப்பு அதிகம் ஏற்படுவதால், இறுக்கமான ஆடைகள் மற்றும் லெக்கின்ஸ் அணிவதை தவிர்க்கவும்.
  • பொது கழிப்பறைகளை பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள். பயன்படுத்திய பின்னர் பிறப்புறுப்பு பகுதிகள் மற்றும் தொடைகளை நன்றாக சுத்தம் செய்யவும்.
  • இந்த எளிய வீட்டு முறைகளை பின்பற்றி தொடை அரிப்பு மற்றும் பாக்டீரியா தொற்றுகளிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Image source: googl

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com