tips to reduce high bp in tamil

Home Remedies for High Blood Pressure in Tamil: குளிர் காலத்தில் இரத்த அழுத்தம் உயர்வதை கட்டுப்படுத்த அருமையான வீட்டு வைத்தியம்

இரத்த அழுத்தத்தை குறைக்க&nbsp; நிபுணர்கள் பரிந்துரைத்த&nbsp; இந்த 3 வீட்டு குறிப்புகளை பின்பற்றி பயன்பெறுங்கள். <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2023-02-01, 09:55 IST

தட்பவெப்ப நிலை குறையும் போது, நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகும். குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, மூட்டு வலி மற்றும் ஆஸ்துமா, போன்ற பிரச்சனைகள் குளிர் காலத்தில் மேலும் மோசமாகும். இதை தவிர, குளிர் காலத்தில் அச்சுறுத்தும் மற்றொரு பிரச்சனை தான் உயர் இரத்த அழுத்தம்.

வெளியே வெப்ப நிலை குறையும் போது, ஏற்கனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் உள்ளவர்களின் இரத்த அழுத்தம் எகிறி விடும். இந்த பிரச்சனை வயது முதிர்ந்தவர்களை அதிகமாக பாதித்து மாரடைப்பு மற்றும் வேறு இதய பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

இதுவும் உதவலாம்:குங்குமப்பூ நீரின் 4 அற்புத நன்மைகள்

குளிர் காலத்தில் இரத்த அழுத்தம் ஏன் உயர்கிறது?

குளிர்ந்த வெப்ப நிலையானது நம் இரத்த குழாய்கள் மற்றும் தமனிகளை குறுகலாக மாற்றும். இந்த நிலையில், உடலில் உள்ள இரத்தம் வெவ்வேறு பகுதிகளுக்கு செல்ல அதிக அழுத்தம் தேவையாகி விடும். இதனால் தான் இரத்த அழுத்தம் உயர்கிறது.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் இந்த காலநிலை மாற்றங்களால் ஏற்படும் இரத்த அழுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இத்துடன் உடல் எடை அதிகரிப்பு, குளிர் காலத்தில் உடற்பயிற்சி செய்வதை அதிகப்படுத்துவது ஆகியவை இரத்த அழுத்தம் திடீரென உயர்வதற்கு காரணம் ஆகிறது. குளிர் காலத்தில் உங்கள் இரத்த அழுத்தத்தில் ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். இரத்த அழுத்தத்தை பழைய நிலைக்கு கொண்டு வர இங்கு கொடுக்கப்பட்ட சில வழிமுறைகளை பின்பற்றலாம். கிளினிக் உணவியல் நிபுணர் திரிஷ்டி பரேக் அவர்கள் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

இளநீர் மற்றும் எலுமிச்சை

இளநீர், எலுமிச்சை இவை இரண்டையும் சேர்த்து குடிப்பதால் இரத்த அழுத்தம் குறையும். இவற்றில் எக்கச்சக்கமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன , குறிப்பாக பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ், வைட்டமின் C, B, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இளநீர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இளநீர் குடித்தால் இரத்த அழுத்தம் குறையும் என்று ஏற்கனவே ஒரு ஆய்வு தகவல் அளித்தது. நீங்கள் இரத்த அழுத்தத்திற்கு மருந்துகள் சாப்பிட்டு கொண்டு இருக்கிறீர்கள் என்றால் இளநீர் பருக வேண்டாம். இது உங்கள் இரத்த அழுத்தத்தை மேலும் குறைத்து விடும்.

வெண் பூசணி ஜூஸ்

இதை வெறும் வயிற்றில் குடித்தால், அதிகப்படியான நன்மையை பெறலாம். இதில் உள்ள பொட்டாசியம் சத்தானது இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும். இந்த ஜூஸில் நம் உடலுக்கு தேவையான முக்கிய செயல்கள் செய்ய போதுமான தாதுக்கள் உள்ளது. உடலில் உள்ள தண்ணீர் அளவையும் சரியான படி தக்க வைக்கிறது.

செம்பருத்தி டீ

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு செம்பருத்தி டீ தான் அனைவராலும் பரிந்துரைக்கப்படும் ஒன்று. இது உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இரத்த அழுத்தம் 10% சிஸ்டோலிக் மற்றும் 12% டையஸ்டோலிக் முறையில் குறைகிறது. இரண்டு வாரங்களுக்கு இந்த டீ குடித்து வர, நல்ல கண்கூடான மாற்றம் தெரியும். இரத்த அழுத்தத்தை குறைக்கும் மாத்திரை காப்டோப்ரில்லை போன்ற அதே அளவு சக்தி செம்பருத்தி டீயில் உள்ளது. எத்னோஃபார்மகாலஜி எனப்படும் மாத இதழ் செய்த ஆய்வின்படி செம்பருத்தி பூவில் ஆன்டி ஹைபர்டென்சிவ் மற்றும் மார்பக வியாதிகளை தடுக்கும் தன்மைகள் கொண்டது. இவை உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளவர்களுக்கும் மிகவும் நன்மை செய்கிறது.

இதுவும் உதவலாம்:அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதும் ஆபத்தா?

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com