ஒரு நபருக்கு உணவு தேவைப்படுகிறது என்றால், அதனை உணர்த்த தன்னுடைய உடல் கொடுக்கும் இயற்கையான அறிகுறி தான் பசி. பசிக்கும் போது, ஒருவருக்கு வெறும் வயிற்றுடன் இருத்தல், தலைவலி, கோபம், எரிச்சலூட்டும் உணர்வு அல்லது கவனம் செலுத்துவதில் சிக்கல் போன்றவை ஏற்படும். இவற்றை நாம் அனைவரும் உணர்ந்திருப்போம். இருப்பினும், சாப்பிட்ட பிறகு அடுத்த பல மணி நேரத்திற்கு பசி எடுக்காது.
ஆனால் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் பசி எடுத்தால், அதை நாம் லேசாக எடுத்துக் கொள்ள கூடாது. எல்லா நேரமும் பசியுடன் இருப்பது நல்ல அறிகுறி அல்ல. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். சில சமயங்களில் இது மிக ஆபத்தாகவும் இருக்கலாம். உங்கள் உணவில் புரதம், நார்ச்சத்து மற்றும் கொழுப்பு பற்றாக்குறை இருந்தால் கூட பசி ஏற்படலாம். போதுமான அளவு தூக்கம் இல்லை என்றாலோ அல்லது மன அழுத்தத்தில் இருந்தாலோ அதுவும் பசியை உண்டாக்கும். எனவே இன்று இந்த பதிவில் ஒரு நபர் எப்போதும் பசியுடன் இருப்பதற்கான காரணங்கள் குறித்து நாம் பார்ப்போம்.
அதிக மன அழுத்தத்துடன் இருத்தல்
ஒருவருக்கு மன அழுத்தம் அதிகரிக்கும் போது அவரது உடலில், கார்டிசோல் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது. இந்த ஹார்மோன் அதிகரிப்பதன் விளைவாக, ஒரு நபரின் உடல், சர்க்கரை மற்றும் அதிக கொழுப்பு நிறைந்த உணவுக்காக ஏங்குகிறது. மன அழுத்தம் ஒரு நபரை அதிகமாக சாப்பிட தூண்டுகிறது, அதோடு ஒரு நபரை அதிக பசியுடன், உடனடியாக ஏதாவது சாப்பிட வேண்டும் எனவும் நினைக்க வைக்கிறது.
தைராய்டு பிரச்சனை இருத்தல்
அதிகப்படியான பசிக்கு தைராய்டு அதிகம் இருப்பதும் காரணமாக இருக்கலாம். உங்கள் தைராய்டு சுரப்பி அதிகமாக செயல்பட்டால், நீங்கள் ஹைப்பர் தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். தைராய்டு ஹார்மோனின் அளவு மிக அதிகமாக இருக்கும்போது, எதிர்பார்த்ததை விட மிக வேகமாக ஆற்றலை இழக்கிறீர்கள். இதனால், அந்த நபருக்கு மீண்டும் மீண்டும் பசி எடுக்கும். ஹைப்பர் தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது. மாறாக, கலோரிகளை மிக வேகமாக எரிப்பதால் எடையை இழப்பர்.
குறைந்த இரத்த சர்க்கரை அளவு இருத்தல்
இதனை ஹைபோகிளைசிமியா என்றும் அழைப்பர். உடலில் குளுக்கோஸின் அளவு மிகவும் குறைந்து பசியை தூண்டுகிறது. மூளை செயல்பட ஆற்றல் தேவை, ஆனால் உங்கள் இரத்த ஓட்டத்தில் சர்க்கரை அளவு குறையும் போது, உங்கள் மூளையின் சக்தியும் குறைந்துவிடுகிறது. இதனையடுத்து மூளை, உடலுக்கு உணவு தேவை என்று சிக்னல் கொடுக்கிறது. எனவே உங்களுக்கு மீண்டும் பசிக்கிறது.
போதுமான தூக்கம் இல்லாது இருத்தல்
போதுமான அளவு தூக்கம் இல்லாதவர்கள் எப்போதும் பசியுடன் இருப்பார்கள். ஏனென்றால், இரவில் சரியான தூக்கம் இல்லையென்றால் அது பசி தொடர்புடைய இரண்டு ஹார்மோன்களை பாதிக்கும். இது பசியைத் தூண்டும் கிரெலின் என்ற ஹார்மோனின் அளவை அதிகரிக்க செய்யும். மேலும், லெப்டினின் அளவு குறைவதால், சாப்பிட்ட பிறகும் நிறைவாக உணர மாட்டார்கள்.
சர்க்கரை வியாதி இருத்தல்
டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டு வகையான சர்க்கரை வியாதியுமே அடிக்கடி பசியை தூண்டும். சாதாரணமாக நம் உடல், உணவில் உள்ள சர்க்கரையை குளுக்கோஸாக மாற்றுகிறது. ஆனால் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, உடலில் உள்ள சர்க்கரை திசுக்களை சென்றடையாது. இதனால் உங்கள் தசைகள் மற்றும் திசுக்களுக்கு அதிகமாக பசி ஏற்படுகிறது. இதனால் உங்களுக்கு பசிக்கிறது. அதிகமாக பசி எடுப்பதோடு மட்டுமல்லாமல், அதிகமாக தாகம் எடுக்கவும் செய்யும். மேலும், அடிக்கடி சிறுநீர் கழித்தல், எடை இழப்பு அல்லது சோர்வாக இருப்பது போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். எனவே உங்களுக்கும் எல்லா நேரமும் பசி எடுத்தால், கண்டிப்பாக இந்த காரணங்களை ஒருமுறை சரிபார்க்கவும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Image Credit: shutterstock
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation