குறட்டை விடும் பழக்கம் ஆழ்ந்த உறகத்தின் அறிகுறியாகும். ஒரு நபர் குறட்டை விடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சோர்வு, உடல் பருமன், நோய் பாதிப்பு, மூக்கு அடைப்பு ஆகியவை குறட்டை தொல்லைக்கு காரணங்களாகும். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால் குறிப்பிட்ட நபருக்கு தான் குறட்டை விடுவதே தெரிய வாய்ப்பில்லை. குறட்டை விடும் பழக்கத்தை நாம் சாதாரண விஷயமாக கடந்து செல்லலாம். சில நேரங்களில் குறட்டை தொல்லை உடல்நலன் பாதிப்பை குறிக்கிறது. குறட்டை தொல்லைக்கு பாட்டி வைத்தியத்தை பின்பற்றி தீர்வு காணலாம்.
நாம் தூங்கும் போது தொண்டை பகுதி தசைகள் தளர்வடைகின்றன. அப்போது நாக்கு பிறழ்ந்து தொண்டை குறுகலாகிறது. உள்ளே இழுக்கும் மூச்சு அதிர்வலைகளை உண்டாக்கி குறட்டை சத்தத்தை எழுப்புகிறது. வயது அதிகரித்தால் தொண்டை தசைகள் தளர்வடைய செய்யும். வயதானவர்கள் குறட்டை விடுவதற்கு இதுவே காரணமாகும். கழுத்து பகுதியில் அதிகளவு கொழுப்பு இருந்தாலும் குறட்டை விடுவோம். அதே போல மது அருந்தும் பழக்கம் கொண்ட நபர்களும் குறட்டை விடுவார்கள்.
ஆயுர்வேத சிகிச்சையில் மஞ்சள் உடல்நலன் சார்ந்த பல பிரச்னைகளை தீர்க்க உதவியுள்ளது. குறட்டை தொல்லையை தீர்க்க மஞ்சள் பெரிதளவு உதவும். இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூக்கு அடைப்பு மற்றும் தொண்டை வறட்சியை தடுக்கும். இரவு நேரத்தில் தூங்கும் முன்பாக மஞ்சள் பால் குடிக்கவும். மஞ்சள் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி குறட்டை தொல்லையில் இருந்து தீர்வு தரும்.
ஆன்டிஆக்ஸிடண்ட் பண்புகளை கொண்ட வெங்காயத்தை இரவு நேரத்தில் பச்சையாக சாப்பிடவும். இது குறட்டையில் இருந்து உங்களை விடுவிக்கும். மூக்கு அடைப்பையும் வெங்காயம் சரி செய்யும்.
தொண்டையில் ஏற்படக் கூடிய தொற்றுகளை தேன் குணப்படுத்தும். மூச்சு குழாய் அடைப்பை தேன் குணப்படுத்துவதால் மூச்சு விடுவதில் சிரமம் இருக்காது. தூங்க செல்லும் முன்பாக வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கவும். கண்டிப்பாக குறட்டை விட மாட்டீர்கள்.
இஞ்சியில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் ஆகியவை உடலில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். இஞ்சி சாப்பிட்டால் தசைகள் தளர்வடையும். குறட்டை விடுவதை தடுக்க தூங்க செல்லும் முன்பாக இஞ்சி டீ குடிக்கவும்.
மேலும் படிங்க ஒரு மாதத்திற்கு ஆட்டுக்கால் சூப் குடிச்சு பாருங்க; ஆரோக்கியத்தில் அற்புதம் நிகழும்
குறட்டை விடும் பழக்கத்தை தவிர்க்க ஒரு பக்கமாக தூங்க பழகவும். ஏனெனில் நேராக படுக்கும் போது குறட்டை சத்தம் எழுப்புகிறோம். அதே போல் உடல் பருமனாக இருந்தால் எடையைக் குறைக்க முயற்சிக்கவும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com