herzindagi
eye blinking

Eye twitching: அடிக்கடி கண் துடிக்க காரணம் என்ன? அதை தடுப்பது எப்படி?

ஒரு சில நபருக்கு அடிக்கடி கண்கள் துடிக்கும். இது எதனால் ஏற்படுகிறது என்றும் இதை தவிர்ப்பது எப்படி என்பது குறித்தும் பார்க்கலாம்.
Editorial
Updated:- 2024-03-22, 12:21 IST

நம்மில் சிலருக்கு அடிக்கடி கண்கள் துடித்து கொண்டே இருக்கும். இதனை சிலர் அதிர்ஷ்டம் வரப்போகுது அதனால் தான் கண் துடிக்கிறது என்று கூறுவவர். இன்னும் சிலர் ஏதேனும் கேட்டது நடக்க போகுது என்று நினைப்பார்கள். ஆனால் உண்மையில் இந்த கண் துடிப்பு பிரச்சனை எதனால் ஏற்படுகிறது என்று யாருக்கும் தெரியாது. 

நம் உடலில் ஏற்படும் சில மாற்றங்களினால் இந்த கண் துடிக்கும் பிரச்சனை ஏற்படும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது. இதன் காரணங்கள் மற்றும் இதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கண் துடிப்பு ஏற்பட காரணம் என்ன?

eye blink

இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம். உங்கள் தினசரி உணவில் அதிக அளவு டீ காபி குடிக்கும் பழக்கம், இரவில் போதுமான தூக்கமின்மை போன்றவை கண் துடிப்புக்கு முதல் காரணம் ஆகும். மேலும் மது அருந்துதல், பிரகாசமான லைட் வெளிச்சம், அதிக உடலுழைப்பு, புகை பிடித்தல், மாசு படிந்த காற்று, அடிக்கடி தலை சுற்றுவது போன்ற உணர்வு, அதிக அளவு மருந்துகள் சாப்பிடுதல் ஆகியவையும் கண்ணிமை துடிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது.

கண் இமை துடிப்பது ஆபத்தானதும் அல்ல. பல நேரங்களில் இது தானாகவே நின்று விடும். இருப்பினும் சில நேரத்தில் நீண்ட நேரம் வரை கண் துடித்தால் என்ன செய்யலாம் என்று நம்மில் பலருக்கும் உள்ள ஒரு கேள்வி தான். இதனை உடனடியாக நிறுத்த என்ன செய்வது?

மேலும் படிக்க: தலை சுற்றும் பிரச்சனையா? இந்த வீட்டு வைத்தியத்தை செய்து பாருங்க!

கண் துடிப்பு நிறுத்த இதை செய்து பாருங்க:

  • டீ அல்லது காஃபி போன்ற காஃபைன் நிறைந்த பானங்களை குடிப்பது, காஃபைன் கலந்த சாக்லேட் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளலாம் அல்லது முற்றிலும் நிறுத்தி விடுங்கள். ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் காஃபைனை நிறுத்திவிட்டு பாருங்கள் கண்ணிமை துடிக்கிறது குறைந்து விடும்.
  • சிலருக்கு கண்கள் துடிப்பதற்கு மது அருந்துதல் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். எனவே அவ்வவ்போது சில நேரங்களில் அளவாக குடிக்கலாம்.
  • குறிப்பாக பலருக்கும் சரியான தூக்கம் இல்லை என்றாலும், கண் தொடர்ந்து அதிகமாக துடித்து கொண்டே தான் இருக்கும். ஒரு நபருக்கு இரவு தூக்கமானது ஏழு முதல் எட்டு மணி நேரம் இருக்க வேண்டும். மேலும் இரவில் நன்றாக ஆழ்ந்து உறங்குங்கள். ஆழ்ந்த துக்கம் பெறுவதற்கு முதலில் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு தொலைக்காட்சி மற்றும் மொபைல் போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
  • இன்னொரு முக்கிய காரணம், உடலில் தேவையான அளவு நீர்ச்சத்து குறைபாட்டினால் கூட இந்த கண் துடித்து கொண்டே இருக்கும். எனவே தினசரி உங்கள்  உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்துங்கள்.
  • மெக்னீசியம் போன்ற சத்துகள் நம் உடலில் குறைவதும் கண்ணிமை துடிப்பை உருவாக்கக் கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மெக்னீசியம் சத்து நிறைந்துள்ள பாதாம், அத்தி பழம், கீரை, அவகாடோ, உருளைக்கிழங்கு, பால் போன்ற உணவுகளை சாப்பிட்டு வரலாம்.
  • உடனடியாக இந்த கண் துடிப்பை நிறுத்த கையின் நடுவிரலை கண் இமைகள் மேல் வைத்து, விரலை வட்டவடிவமாக சுழற்றி குறைந்தது அரை நிமிட நேரத்துக்கு மென்மையாக மசாஜ் செய்யலாம்.இது இமைகளில் இரத்த ஓட்டத்தை தூண்டுவதோடு கண் தசைகளை வலுவாக்க உதவும்.

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com