நம் உடல் எடை அதிகரிப்புக்கு இரண்டு வகையான கொழுப்பு முக்கிய காரணமாகும். அதில் உள்ளுறுப்பு கொழுப்பு (Visceral fat) மிகவும் ஆபத்தானது. உள்ளுறுப்பு கொழுப்பு உறுப்புகளை சுற்றியிருக்கும். இது நம் உடலில் வளர்சிதை மாற்றத்தை குறைக்கும். உடலில் பல நோய்கள் ஏற்படுவதற்கு காரணமும் கூட. உள்ளுறுப்பு கொழுப்பை குறைப்பதற்கு சில முக்கிய விஷயங்களை பின்பற்றினால் போதுமானது.
இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிட்டால் குளுக்கோஸ், கார்டிசால் மற்றும் இன்சுலின் அளவு அதிகரிக்கும். இவை உடலில் உள்ளுறுப்பு கொழுப்பை உயர்த்தும். எனவே அன்றாடம் சாப்பிடும் உணவில் 70 விழுக்காடு அளவை மதியம் 3 மணிக்கு முன்பு சாப்பிட்டு விடுங்கள்.
வாரத்திற்கு 2-3 முறை குளிர்ந்த நீரில் குளியுங்கள். ஏனெனில் இது உடலில் பழுப்பு கொழுப்பை தூண்டிவிடும். பழுப்பு கொழுப்பு (Brown Fat) என்பது உடல் குளிர்ந்தால் கதகதப்பாக உணர வைக்ககூடியது. இது கலோரிகளை உள்ளுறுப்பு கொழுப்பில் இருந்து பெற்று எரித்திடும். இதனால் இடுப்பு பகுதி அளவு குறைந்திடும்.
நடையிற்சி, சைக்கிள் ஓட்டுவது போன்ற பயிற்சிகளால் உள்ளுறுப்பு கொழுப்பு குறையும். ஜிம்மில் செய்யும் கார்டியோ பயிற்சியை விட இவை இரண்டு சிறந்த உடற்பயிற்சியாகும்.
சாப்பிடுவதற்கு முன்பாக ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து குடித்தால் உடலில் கொழுப்பு தேங்குவது குறைந்திடும்.
தினமும் 9 மணி நேரம் தூங்குவது உடலில் உள்ளுறுப்பு கொழுப்பை குறைக்க உதவும். இரவு நேரத்தில் குறைவான தூங்கினால் உள்ளுறுப்பு கொழுப்பு அதிகரிக்கும். தூங்க செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன் எலக்ட்ரிக் சாதனங்களை பயன்படுத்தாதீர்.
காலை உணவிலேயே 30 கிராம் புரதச்சத்து எடுக்க முயற்சிக்கவும். இதனால் அடுத்த 24 மணி நேரம் பசி கட்டுக்குள் இருக்கும். சோயா பீன் எண்ணெய் போன்வற்றை சமையலுக்கு பயன்படுத்தாதீர்கள். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுங்கள்.
பளுதூக்குதல் பயிற்சியால் உடலில் உள்ளுறுப்பு கொழுப்பு எரிக்கப்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உங்களுடைய உடல் எடைக்கு ஏற்ப பளுதூக்குதல் பயிற்சி செய்யவும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com