herzindagi
Is buttermilk good for you in the summer

கோடையில் உடல் குளிர்ச்சியாகவும், செரிமானம் சீராகாவும் இருக்க ஹெல்தியான ஆயுர்வேத மோர்

கோடையில் உடலை குளிர்ச்சியாகவும், செரிமானத்தை வலுவாக வைத்திருக்க மோர் உதவுகிறது. அதை மேலும் சுவையாக தயாரிக்க பல பொருட்கள் பயன்படுத்தலாம், எப்படி என்பதை பார்க்கலாம்
Editorial
Updated:- 2024-06-27, 16:47 IST

கோடையில் அஜீரணம் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு மோர் எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மோர் உடலுக்கு குளிர்ச்சியை தருவது மட்டுமின்றி, வயிறு தொடர்பான பிரச்சனைகளையும் போக்குகிறது. ஆனால் மோர் சில மாசலா பொருட்களைக் கலந்து குடித்தால் ஆரோக்கியத்திற்கு இன்னும் பலன் தரும். கோடையில் உடலை குளிர்விப்பதுடன் ஆரோக்கியமாக வைத்திருக்கும் சிறந்த பானங்களை நாம் அடிக்கடி தேடி வருகிறோம். அஜீரணம், வாயு மற்றும் டிஸ்ஸ்பெசியா ஆகியவை வெப்ப அலையின் போது பொதுவானவை. அதனை சரிசெய்ய நிபுணர் பரிந்துரைத்தவற்றை கலந்து மோர் குடிக்கவும். இந்த ஆயுர்வேத மோர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது குறித்து டயட்டீஷியன் மன்பிரீத் தகவல் அளித்தை பார்க்கலாம். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அவர் ஒரு ஹார்மோன் மற்றும் குடல் ஆரோக்கிய பயிற்சியாளர்.

மேலும் படிக்க:  இதயத்திற்கு எதிரியாக மாறும் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் சியா விதை

கோடையில் ஆயுர்வேத மோர் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்

buttermilk inside

  • இந்த மோர் குடிப்பதால் அஜீரணம், வாயு, வீக்கம் மற்றும் டிஸ்ஸ்பெசியா ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • இதை குடிப்பதால் சர்க்கரை பசி குறையும்.
  • தயிர் ஒரு புரோபயாடிக் என்பதால் அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்தை நீக்குகிறது.
  • கொத்தமல்லி இலைகள் குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாவை பராமரிக்கின்றன. இது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி உடலை குளிர்ச்சியாக்கும்.
  • செரிமான பிரச்சனைகளான வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாயுத் தொல்லை, குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கு சீரக பொடி நல்ல தீர்வாக இருக்கிறது. 
  • புதினா இலைகள் வீக்கத்தைக் குறைத்து செரிமான மண்டலத்தின் தசைகளை தளர்த்தும்.
  • கருப்பு மிளகு வயிற்றில் இருக்கும் ஹைட்ரோகுளோரிக் அமில சுரப்பை ஊக்குவிக்க உதவுகிறது. இது செரிமானத்திற்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது.
  • இஞ்சியில் ப்ரீபயாடிக் பண்புகள் காணப்படுகின்றன. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் குடல் அழற்சியைக் குறைக்கிறது.
  • சப்ஜா விதைகள் உடலுக்கு குளிர்ச்சி தரும். இது பித்தத்தை சமன் செய்கிறது.
  • பாதாம் பிசினி உடலைக் குளிர்வித்து மலச்சிக்கலைப் போக்கும்.

ஆயுர்வேத மோர் தயாரிக்க தேவையான பொருள்கள்

buttermilk new inside

  • தயிர் - 2 தேக்கரண்டி
  • புதினா இலைகள் - கைப்பிடி
  • கொத்தமல்லி இலை - கைப்பிடி
  • சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
  • இஞ்சி - அரை அங்குலம்
  • கருப்பு மிளகு தூள் - 1 சிட்டிகை
  • சப்ஜா விதைகள் - 1 தேக்கரண்டி
  • பாதாம் பிசின் - 1 டீஸ்பூன்
  • தண்ணீர் - 200 மி.லி.

செய்முறை

மேலும் படிக்க:  நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் 5 முக்கிய ஆரோக்கிய நன்மைகளை

  • சப்ஜா விதைகள் விதைகள் மற்றும் பாதாம் பிசின் தவிர, மற்ற அனைத்து பொருட்களையும் பிளெண்டரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • இப்போது ஒரு ஜூஸ் கிளாஸில் சப்ஜா விதைகள் மற்றும் பாதாம் பிசின் இரண்டையும் சேர்த்துக்கொள்ளவும்.
  • அதில் மசாலாக்கள் கலந்த மோரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • அதன்பின் போதுமான அளவு உப்பு சேர்த்து குடிக்கலாம், உப்பு சேர்ப்பது கட்டாயம் இல்லை
  • உங்கள் ஆயுர்வேத மோர் தயார்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருக்கவும்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com