குழந்தைக்கு காய்ச்சலா ? என்ன உணவு கொடுக்கணும் ? எதை செய்யக்கூடாது ?

காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள குழந்தையை எவ்வாறு கவனித்து கொள்ள வேண்டும் ? எந்த மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

dos and donts of fever in baby

காய்ச்சல் என்பது நம் உடலில் சில ரசாயன மாற்றங்களால் ஏற்படுகிறது. உடலில் வேறு ஒரு பிரச்சினை இருப்பதை உணர்த்தும் எச்சரிக்கை மணி தான் காய்ச்சல். காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதற்கு கண்ணுக்கு தெரியாத கிருமிகள் மட்டுமல்ல வேறு காரணங்களும் இருக்கின்றன. சுருக்கமாக காய்ச்சலை உடலில் உள்ள இரத்த குழாயின் உஷ்ணம் என குறிப்பிடலாம். உடல் முழுவதும் உஷ்ணம் ஒரே போல இருந்தாலும் தலை பகுதியில் இரத்தம் அதிகமாக உள்ள காரணத்தினால் அங்கு தொட்டவுடன் உஷ்ணம் தெரிந்து விடுகிறது. வெப்பமானியை குழந்தையின் அக்குளில் வைத்து 100 டிகிரிக்கு மேல் காண்பித்தால் காய்ச்சல் என அர்த்தமாகும்.

baby fever and donts

எப்போது கவலைப்படணும் ?

  • காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிறகும் குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பாக விளையாடி, கொஞ்சமாக உணவு உட்கொண்டாலும் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இல்லையென்றால் மருந்து கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது.
  • குழந்தைக்கு காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் உள்ளது, குழந்தை சோர்வாக காணப்படுகிறது, காய்ச்சல் உடன் ஜன்னி இருந்தால் மருந்து கொடுப்பது அவசியம். காய்ச்சலுக்கு பெரும்பாலும் பாராசிட்டமால் மாத்திரை கொடுத்தால் போதுமானது. பிற மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை இன்றி கொடுக்காதீர்கள்.
  • காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஊசி செலுத்த வேண்டிய அவசியமில்லை. குழந்தைக்கு காய்ச்சலுடன் நடுக்கம் ஏற்பட்டால் கூட பெட்ஷீட் கொண்டு சுற்ற வேண்டாம். குழந்தை காற்றோட்டமான இடத்தில் இருக்கட்டும்.
  • சில பெற்றோர் குழந்தையை சுடு தண்ணீரில் மூழ்கிய துணியால் துடைக்க நினைக்கின்றனர். இது காய்ச்சல் பாதிப்புக்கு குறைந்த பலனையே தருகிறது.

என்ன உணவு கொடுக்கலாம் ?

  • குழந்தை மட்டுமல்ல வீட்டில் யார் காய்ச்சலால் பாதிக்கப்பட்டாலும் இட்லி, ரசம் சாதம் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். காய்ச்சலின் போது குழந்தைக்கு ஜீரணம் ஆகாது என்று நினைப்பது தவறு.
  • காய்ச்சலின் போது குழந்தைக்கு அதிக கலோரி, புரதம் நிறைந்த உணவுகளை கொடுக்கவும். காய்ச்சலின் போது உண வு கட்டுப்பாடு தேவையில்லை. அவர்களுக்கு பிடித்தமான உணவையே கொடுக்கலாம்.
  • குழந்தைகள் சரியாக உணவு உட்கொள்ளவில்லை என்றாலும் உடலில் உள்ள கொழுப்பு எரிசக்தியாக மாறி சக்தி கொடுக்கும்.
  • இரண்டு நாட்களாகியும் குழந்தைக்கு காய்ச்சல் குறையவில்லை என்றால் மருத்துவமனை செல்லவும்.
  • அங்கு குழந்தைக்கு இரத்த பரிசோதனை செய்து வேறு உடல்நல பாதிப்பு இருந்தால் கண்டுபிடித்துவிடலாம்.
  • ஒரு குழந்தையிடம் இருந்து மற்றொரு குழந்தைக்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் பள்ளிக்கு அனுப்புவதை தவிர்த்து விடுங்கள். மாத்திரை போட்டு குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. பாராசிட்டமால் மாத்திரை உடலில் உஷ்ணத்தை குறைத்து காண்பிக்கும். ஆனால் காய்ச்சல் பாதிப்பு குறைய குறைந்தது இரண்டு நாட்கள் எடுக்கும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP