அன்னாசிபழம் சாப்பிட்டால் உடலில் எதிர்ப்பு சக்தி, சுவாச மண்டலம், செரிமான தன்மை அனைத்துமே பலமாகும். இத்துடன் சேர்ந்து நம் உடல் எலும்புகளை பலப்படுத்துகிறது, வீக்கத்தை குறைக்கிறது, சளி மற்றும் இருமலை விரட்டுகிறது. இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுப்புகள் அதிகம் உள்ளன. பொட்டாசியம், செம்பு, மாங்கனீஸ், கால்சியம், மக்னீசியம், வைட்டமின் C , பீடா கரோட்டின், தயாமின், வைட்டமின் B6,ஃபோலேட் மற்றும் பிரோமிலேன் ஆகியவை அடங்கிய பழம் தான் அன்னாசி. கூடுதலாக இதில் கரையும் நார்ச்சத்து மற்றும் கரையாத நார்ச்சத்து ஆகியவை உள்ளன. இந்த அன்னாசி பழத்தின் நன்மைகளை பற்றி நாம் இன்று காணலாம்
ஆர்த்தரிடிஸ் நோய்க்கு தீர்வு கிடைக்கிறது
நம் தசைகள் மற்றும் மூட்டுக்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வை குறைக்கிறது. குறிப்பாக ஆர்த்தரிடிஸ் பிரச்சினை உள்ளவர்கள் அன்னாசிபழம் சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். பிரோமிலேன் எனப்படும் ஒரு அரிய வகை என்சைம் அன்னாசிபழத்தில் இருக்கிறது. இது கலவை புரதத்தை உடைக்க உதவுகிறது மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. தொடர்ந்து அன்னாசி சாப்பிட ஆர்த்தரிடிஸ் பிரச்சனை நீங்கும்.
இதுவும் உதவலாம் :பலா பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
ஒரு முறை அன்னாசி சாப்பிடுவது என்பது தினசரி உங்களுக்கு தேவையான வைட்டமின் c சத்தினை 130 % பூர்த்தி செய்கிறது. அஸ்கார்பிக் எனப்படும் அமிலத்துக்கு உறைவிடமாக இருப்பது அன்னாசிபழம். வைட்டமின் C சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இதன் மூலம் நோய்களை விரட்டி அடிக்கிறது மற்றும் இரத்த வெள்ளை அணுக்களின் செயல்களை தூண்டுகிறது. மேலும் இது ஃப்ரீ ராடிகல்ஸ் எனப்படும் பொருளை நீக்கி விடுகிறது. இந்த ஃப்ரீ ராடிகல்ஸ் எனப்படுவது நமது முக்கிய அங்கங்களை பாதிக்கும் மற்றும் நல்ல செல்களை புற்று செயல்களாக மாற்றும் தன்மை கொண்டது
புண்களை விரைவில் குணமடைய செய்யும்
அன்னாசியில் உள்ள வைட்டமின் C யின் முக்கிய செயல் உடலில் கொலாஜனை உற்பத்தி செய்வது தான். அதனால் தான் இதை புண் ஆற்றும் வைட்டமின் என்று கூறுவார்கள். நம்முடைய இரத்த நாளங்களின் சுவர்களுக்கும், சருமத்திற்கும், அங்கங்களுக்கும் மற்றும் எலும்புகளுக்கும் தேவையான புரதத்தை கொலாஜன் வழங்குகிறது. எனவே வைட்டமின் C சத்து உடலில் அதிகப்படியாக இருக்கும் போது, உடலில் ஏற்படும் புண் மற்றும் காயங்களை விரைவில் ஆற்றும் தன்மை உண்டாகிறது. மேலும் நம் உடல் தொற்றுகளில் இருந்தும் காப்பாற்றப்படும்.
புற்று நோய் அபாயம் தடுக்கப்படுகிறது
அன்னாசியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன. இது நமக்கு ஏற்படும் வாய் புற்று நோய், தொண்டை புற்று நோய் மற்றும் மார்பக புற்று நோய் வராமல் தடுக்கிறது. இதில் வைட்டமின் A, பீடா கரோட்டின், பிரோமிலேன், ஃபிளாவனாயிட் கலவை மற்றும் மாங்கனீஸ் அதிக அளவில் உள்ளது.
செரிமானத்திற்கு உகந்தது
அன்னாசிபழம் உண்பதால் மலச்சிக்கல், வயிற்று போக்கு, குடல் எரிச்சல், இரத்த கட்டு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் நீங்கும். அதிக அளவில் நார்ச்சத்து அன்னாசியில் இருக்கிறது. இதனால் உண்ணும் உணவு செரிமான குழாயில் நல்ல முறையில் எளிமையாக செரிமானம் ஆகிறது. இது மட்டுமல்லாமல், இது வாய்வு மற்றும் செரிமானம் ஏற்படுத்தும் திரவங்களை உமிழ்கிறது. இந்த திரவங்கள் உணவு எளிதில் செரிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, இது மலத்தை இலக்குகிறது. எனவே வயிற்று போக்கு பிரச்சனை இல்லாமல் போகிறது.
வாயின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியது
வாயில் ஏற்படும் புற்று நோயை அன்னாசியில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் வர விடாமல் தடுக்கிறது. இது ஆஸ்ட்ரிஞ்சன்ட் தன்மை உடையது. இதனால் பற்கள் மற்றும் ஈறுகள் பலமாகிறது. ஆஸ்ட்ரிஞ்சன்ட் தன்மையானது நம் உடல் திசுக்களை இறுக்குகிறது, உடலை பொலிவாக்குகிறது. எனவே பல் இழப்பு, முடி உதிர்வு, தசை பலவீனம் மற்றும் சருமம் தளர்வடைதல் ஆகியவை ஏற்படாது.
சளி மற்றும் இருமலை தீர்க்கும்
அன்னாசியில் பிரோமிலேன் மற்றும் வைட்டமின் சி சத்து இருப்பதால், இதை சாப்பிட சுவாச மண்டலம் சம்பந்தப்பட்ட வியாதிகள் அண்டாது. ஒரு வேளை சுவாசம் சம்பந்தப்பட்ட நோய் இருந்தாலும், அது நீங்கி விடும். பிரோமிலேன் எனப்படும் கனிமம் வைட்டமின் சி யில் இருக்கிறது. உங்களுக்கு சளி மற்றும் இருமல் பிரச்சனை இருந்தால், அதை நீக்கி விடும். இதனால் உங்கள் சுவாசப் பாதை மற்றும் சைனஸ் குழாய் திறந்து இருக்கும். உங்களுக்கு சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விடுதலை தரும்.
இதுவும் உதவலாம் :நம்பமுடியாத ஆரோக்கிய நன்மைகளை தரும் பச்சை பீன்ஸ்
நம் எலும்புகளை பலமாக்கக்கூடிய கால்சியம் சத்து அன்னாசியில் அதிகமாக உள்ளது. எலும்புகளின் வளர்ச்சி மற்றும் எலும்பு பிரச்சினைகளை தீர்க்க தகுந்த மாங்கனீஸ் சத்தும் இதில் அதிகம் காணப்படுகின்றன. இது தான் மிக முக்கியமாக இதில் உள்ள தாது. உங்கள் அன்றாட தாதுப்புகள் தேவையில் 70% பூர்த்தி செய்கிறது.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation