herzindagi
this herbal powder will remove blackness of teeth mai

இந்த மூலிகை பொடி பற்களின் கருமையை நீக்கும் தெரியுமா?

பற்களின் கருமையை நீக்கும் மூலிகை பொடி தயாரிப்பதை இப்போது பார்ப்போம்.
Editorial
Updated:- 2023-01-18, 14:54 IST

தினமும் பல் துலக்கிய பிறகும் உங்கள் பற்கள் கருப்பாகத் தெரிந்தால், இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள மூலிகைப் பொடி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தினமும் பல் துலக்கிய பிறகும் பற்கள் கெட்டு, புழுப் பிரச்சனை ஏற்படுவது பல நேரங்களில் நடக்கும். பலவீனமான பற்கள், உணவு உண்பதில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, நமது பெர்சனாலிட்டியை கெடுக்கவும் செய்கிறது. பலருக்கு பற்களில் புழுக்கள் இருப்பதால், வலியும் ஏற்படுகிறது. மேலும் பற்கள் வேகமாக உடைந்து விடுகிறது.

ஆனால், இப்பிரச்சனையில் இருந்து விடுபட, பற்களை வெண்மையாக்க, மூலிகைப் பொடி, டூத்பேஸ்ட் போன்ற பல கிடைக்க ஆரம்பித்துவிட்டன. ஆனால் இவற்றைப் பயன்படுத்தியும் பலன் கிடைப்பதில்லை, இதனால் மக்கள் பல வகையான மருந்துகளை வாங்கி சாப்பிடுகின்றனர். இருப்பினும், மருந்து உட்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த பிரச்சனை மீண்டும் வந்து விடுகிறது.

உங்களுக்கும் இதே நிலை ஏற்பட்டால், நீங்கள் கவலைப் பட தேவையில்லை, ஏனென்றால் இலவங்கப்பட்டையின் உதவியுடன் நீங்கள் தயாரிக்கக்கூடிய, பற்களை சுத்தம் செய்வதற்கான இயற்கையான பொடி ஒன்றை இன்று நாம் பார்க்கவிருக்கிறோம். எப்படி செய்வது? தெரிந்து கொள்வோம்.

தேவையானவை

this herbal powder will remove blackness of teeth

  • வேப்பிலை - 1 கப் (நசுக்கியது)
  • பெண்டோனைட் களிமண் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
  • உப்பு - அரை டீஸ்பூன்
  • இலவங்கப்பட்டை - 2 டீஸ்பூன்

எப்படி செய்வது

this herbal powder will remove blackness of teeth

  • இலவங்கப்பட்டையிலிருந்து பொடி தயாரிக்க, முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து, அதனுடன் காய்ந்த வேப்பிலைகளைச் சேர்க்க வேண்டும்.
  • பின் அதனுடன் உப்பு, பென்டோனைட் களிமண் பொடி, இலவங்கப்பட்டை போன்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பிறகு ஒரு மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும். இவ்வாறு தூள் தயாரிப்பதில் சிக்கல் இருந்தால், நீங்கள் கடைகளில் இருந்து பொடியை வாங்கி கொள்ளலாம்.
  • அனைத்து பொருட்களையும் நன்றாக அரைத்ததும், கண்ணாடி ஜாடியில் போட்டு சேமித்து வைக்கவும்.

இந்த பதிவும் உதவலாம்-சளி மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும் மூலிகைகள்!!!

மூலிகை பொடியை எப்படி பயன்படுத்துவது?

this herbal powder will remove blackness of teeth

  • முதலில், உங்கள் வாயை ஈரப்படுத்தி, கைகளை கழுவவும்.
  • பின்னர் ஒரு சுத்தமான ஸ்பூனால் ஜாடியிலிருந்து பொடியை எடுத்து, உங்கள் கைகளில் வைக்கவும்.
  • இன்னொரு கையால் பல் துலக்குங்கள். நீங்கள் டூத் பிரஷையும் பயன்படுத்தலாம், ஆனால் மென்மையான பிரஸ்ஸல்ஸ் கொண்ட பிரஷை மட்டுமே பயன்படுத்தவும்.
  • இப்போது உங்கள் பற்களை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யுங்கள், ஆனால் நீங்கள் மிகவும் சூடான நீரைப் பயன்படுத்த வேண்டியதில்லை.

பற்களுக்கு இலவங்கப்பட்டையின் நன்மைகள்

பற்களை சுத்தம் செய்ய வாரத்திற்கு 3 முறை இந்த பொடியை பயன்படுத்தலாம். ஏனெனில் இலவங்கப்பட்டை பற்களில் உள்ள மஞ்சள் நிறத்தை நீக்குவதோடு, பூச்சிகள் உண்டாவதையும் தடுக்கிறது. இதில் ஐசோடின், சர்பிடால் போன்ற தனிமங்கள் இருப்பதாகவும், அவை பற்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அறியப்படுகிறது.

மற்ற பொருட்களின் நன்மைகள்

this herbal powder will remove blackness of teeth

  • வேப்பிலைகள் குறிப்பாக பற்களில் வலி ஏற்படும் போது பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் ஈறுகளை உள்ளே இருந்து தளர்த்தும்.
  • இந்த தூள் பற்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இதில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் இயற்கையானவை.
  • பெண்டோனைட் களிமண் தூளில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள், உங்கள் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
  • உப்பில் ஐசோடின் மற்றும் சர்பிடால் போன்ற கூறுகள் உள்ளன. அவை பற்களின் மஞ்சள் நிறத்தை நீக்கும்.

குறிப்பு- உங்களுக்கு ஏதேனும் உடல் ரீதியான பிரச்சனை இருந்தால், இதைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்-இயற்கையாகவே உடலை கதகதப்பாக வைத்துக்கொள்வது எப்படி என தெரியுமா?

இந்த உதவிக்குறிப்புகள் மற்றும் டிப்ஸ் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்து பகிரவும். மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credits : Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com