இந்திய சமையலறையில் பல உணவுகளில் தயிர் பயன்படுத்தப்படுகிறது. உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் ஒரு கிண்ணம் தயிர் சாப்பிட்டு வந்தால், பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் கவிதா தேவ்கன் கூறுகையில் தயிர் சுவையால் மட்டும் உங்களை மகிழ்விப்பது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. குறிப்பாக கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: சளி, இருமல் மற்றும் உடல் எடையை முழுமையாக குணப்படுத்தும் பூண்டு தேநீர்
தயிர் தொடர்பான பலன்களை பார்க்கலாம்
தயிரில் இருக்கும் சத்துக்கள்
- புரதம் - 5.25 கிராம்
- கார்போஹைட்ரேட் - 7.05 கிராம்
- கால்சியம்- 185 மி.கி
- மக்னீசியம் - 15 மி.கி
- பொட்டாசியம்- 235 மி.கி
- வைட்டமின் பி-6- 0.049 மி.கி
- வைட்டமின் ஏ - 51IU
- சோடியம் - 70
தினமும் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கிறது
தயிர் சாப்பிடுவதால் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். தயிர் சாப்பிடுவதால் வயிறு தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றல் தயிருக்கு உண்டு. சில புரோபயாடிக்குகள் தயிரிலும் காணப்படுகின்றன அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது
நோயெதிர்ப்பு அமைப்பு வலுவாக இருந்தால் உடல் எந்த வகையான வைரஸ் அல்லது தொற்றுநோயையும் எதிர்த்துப் போராடும் திறன் கொண்டதாக இருக்கும். உணவில் தினமும் தயிரை சேர்த்துக்கொண்டால் உடல் வலுவடைகிறது மற்றும் எந்த தொற்றுநோயையும் எதிர்த்துப் போராடத் தயாராக இருக்கிறது.
எடை குறைப்பதில் நன்மை பயக்கும்
உடல் எடையை குறைக்க பல்வேறு டயட் திட்டங்களை முயற்சித்து அலுப்பாக இருந்தால், அவற்றில் எந்த பலனும் கிடைக்கவில்லை என்றால் தினமும் தயிர் சாப்பிடத் தொடங்குங்கள். தயிரில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், புரதம், வைட்டமின் பி, சி, ஏ, கே மற்றும் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவற்றின் நுகர்வு எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
எலும்புகளை பலப்படுத்தும்
தயிரில் அதிக அளவு கால்சியம் உள்ளது. கால்சியம் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை இருந்தால் தினமும் தயிர் சாப்பிட வேண்டும். மக்னீசியம் தயிரில் நல்ல அளவில் உள்ளதால் எலும்புகளை வலுப்படுத்துகிறது.
இதயத்தை ஆரோக்கியமாக்குகிறது
தயிரில் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவாக இருப்பதால் உடலின் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். உயர் இரத்த அழுத்தம் இருந்தாலும், தயிர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே தயிரை தவறாமல் உட்கொள்ள வேண்டும். இதனால் இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.
தயிர் சாப்பிட சரியான நேரம்
எந்த நேரத்தில் தயிர் சாப்பிடக்கூடாது என்று அறிவியல் ரீதியாக சொல்ல முடியாது. ஆனால் இரவில் தயிர் சாப்பிட்ட பிறகு சளி மற்றும் இருமல் வந்தால், காலை மற்றும் மதியம் உணவில் தயிரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல், கிட்ட நெருங்காமல் இருக்க 5 எளிய வீட்டு வைத்தியம்
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.Image Credit- Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation