herzindagi
Benefits of ice bath after workout

யாருக்கெல்லாம் ஐஸ் குளியல் நன்மையை தருகிறது, பாதகத்தை ஏற்படுத்துகிறது தெரியுமா?

விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களுக்கு ஐஸ் குளியல் நன்மை பயக்கும். இருப்பினும், அவற்றை உங்கள் வழக்கத்தில் சேர்ப்பதற்கு முன் சரியான நுட்பத்தை தெரிந்துக்கொள்ளவேண்டும். <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2024-07-31, 13:25 IST

தொழில்முறை விளையாட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டுகளுக்குப் பிறகு ஐஸ் குளியல் எடுப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம் அல்லது உடற்பயிற்சி ஆர்வலர்கள் குளிர்ந்த நீரில் இருப்பது தெரியும். இந்த குளிர்ந்த நீரில் மூழ்குவது ஒரு வகையான கிரையோதெரபி ஆகும், இது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்க்க குளிர் வெப்பநிலையைப் பயன்படுத்துகிறது. தி வெல்னஸ் கோ.வின் மூத்த ஒருங்கிணைந்த ஆரோக்கியம் & பயோஹேக்கிங் நிபுணரான டாக்டர் கரிமா கௌருடன் கூறுகையில். இது ஆரம்பத்தில் பயமுறுத்துவதாகத் தோன்றினாலும். இந்த குளியல் சில தீங்குகளை கொண்டுள்ளது.

மேலும் படிக்க: ஒரு நாளைக்கு நீங்கள் எவ்வளவு சர்க்கரை உட்கொள்ள வேண்டும் என்பது தெரியுமா?

ஐஸ் குளியல் என்ன என்பது தெரியுமா? 

ice bath inside

குளிர்ந்த நீரில் மூழ்குவதை பொதுவாக ஐஸ் பாத் என்று அழைக்கப்படுகிறது, இது ஒரு மீட்பு நுட்பமாக செயல்ப்பட்டு வருகிறது. கடுமையான உடற்பயிற்சிக்கு பின்னர் 10 முதல் 15 நிமிடங்கள் குளிர்ந்த நீர் தொட்டியில் மூழ்கி இருப்பதாகும். லெப்ரான் ஜேம்ஸ் போன்ற தொழில்முறை விளையாட்டு வீரர்கள் முதல் லேடி காகா போன்ற உலகளாவிய ஐகான்கள் வரை இந்த நடைமுறை பலரிடையே பிரபலமடைந்துள்ளது.

தசை வலிக்கு நன்மை தரும் ஐஸ் குளியல் 

தீவிர உடற்பயிற்சிகளுக்குப் பிறகு தசை வலியைக் குறைக்க விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் ஐஸ் குளியல் எடுத்துக்கொள்கிறார்கள். குளிர்ந்த வெப்பநிலை இரத்த நாளங்களை சுருக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், தசைக் கோளாறுகளை தீர்க்கவும் மாற்றக் கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது.

மீட்பு துரிதப்படுத்துகிறது

வீக்கம் மற்றும் தசை வலியைக் குறைப்பதன் மூலம் ஐஸ் குளியல் மீட்பு செயல்முறையை விரைவுபடுத்தும். இது விளையாட்டு வீரர்களுக்கு அடிக்கடி பயிற்சி அளிக்கவும், அதிக செயல்திறன் நிலைகளை தக்கவைக்கவும் உதவுகிறது.

வீக்கத்தைக் குறைக்கிறது

ice bath new inside

குளிர்ந்த நீரில் மூழ்குவது இரத்த நாளங்களை சுருக்கி, பாதிக்கப்பட்ட பகுதிக்கு இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் வீக்கம் மற்றும் திசு சேதத்தை குறைக்க உதவுகிறது. இந்த குளியால் இரத்த நாளங்களின் சுழற்சி விரிவாக்கம் மற்றும் சுருக்கத்தை உள்ளடக்கியது, நுண் சுழற்சியை ஆதரிக்கிறது மற்றும் வீக்கத்தை நிர்வகிக்க உதவுகிறது.

ஐஸ் குளியல் ஏற்படுத்தும் பக்க விளைவுகள்

  • மிகவும் குளிர்ந்த நீரின் வெளிப்பாடு அல்லது ஐஸ் கட்டிகளுடன் நேரடியாக தொடர்புகொள்வது உறைபனிக்கு வழிவகுக்கும். இதைத் தடுக்க நீரின் வெப்பநிலை 50-59°F (10-15°C) க்கு இடையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். ஐஸ் கட்டிகளை நேரடியாக தோலில் வைப்பதைத் தவிர்க்கவும்.
  • இந்த குளியல் இதயம் மற்றும் இரத்த நாளங்களுக்கு அழுத்தம் கொடுக்கலாம், குறிப்பாக இருதய நோய் உள்ளவர்களுக்கு. இதயம் தொடர்பான பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால். குளியல்களில் ஈடுபடுவதற்கு முன் சுகாதார நிபுணரை அணுகுவது முக்கியம்.

பாதுகாப்பான மற்றும் பயனுள்ள ஐஸ் குளியல் குறிப்புகள்

மேலும் படிக்க: ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்ற மாதுளை ஜூஸை இந்த நபர்கள் குடிக்கக்கூடாது

  • ஐஸ் குளியலில் ஈடுபடும் நிலையில் முதலில் கீழ் உடலை மூழ்கடித்து மெதுவாக மேலே செல்லுங்கள். இந்த அணுகுமுறை உங்கள் உடலை குளிர்ச்சியுடன் படிப்படியாகப் பழக்கப்படுத்த உதவுகிறது மற்றும் ஆரம்ப அதிர்ச்சியைக் குறைக்கிறது.
  • ஐஸ் குளியல் 10-15 நிமிடங்களுக்கு வரம்பிடவும் மற்றும் நீர் வெப்பநிலை 50-59 ° F (10-15 ° C) க்கு இடையில் இருப்பதை உறுதி செய்யவும். சரியான வெப்பநிலையைக் கண்காணிக்கவும் பராமரிக்கவும் ஒரு தெர்மோமீட்டரைப் பயன்படுத்தவும்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com