கடுமையான வெயிலில் உணவு சாப்பிடுவதால் ஏற்படும் குடல் பிரச்சனைகளை தடுக்க உதவும் ஆயுர்வேத முறைகள்

தற்போது நிலவும் வெப்ப அலைகளுக்கு மத்தியில் குடல் சுகாதார பிரச்சினைகள் மிகவும் பொதுவானதாக இருக்கிறது. நீங்கள் ஆரோக்கியமான மகிழ்ச்சியான குடல் மற்றும் சீரான செரிமானத்திற்கு இந்த ஆயுர்வேத குறிப்புகளைப் பின்பற்றவும்.
image

கோடைகாலத்தில் ஆயுர்வேதம் என்பது குடல் ஆரோக்கியத்தையும் செரிமான அமைப்பையும் எளிமையான மற்றும் பயனுள்ள வழிகளில் பராமரிக்க உதவும் ஒரு இயற்கையான பண்டைய இந்திய மருத்துவ முறையாகும். வெப்ப அலைகளின் போது மகிழ்ச்சியான வயிற்றை உறுதி செய்வதற்கான சில ஆயுர்வேத ரகசியங்கள் இங்கே.

கோடையில் ஆயுர்வேத முறையில் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க குறிப்புகள்

  • குளிர்ச்சியூட்டும் பானங்களை உட்கொள்ளுங்கள்
  • வெப்ப அலைகளின் போது நல்ல செரிமானத்திற்கு சரியான நீரேற்றத்தை உறுதி செய்யுங்கள்.
  • ஆயுர்வேதம் முறைபடி கற்றாழை சாறு, கோதுமை புல் சாறு, இஞ்சி மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றால் செய்யப்பட்ட மூலிகை தேநீர் போன்ற குளிர்ச்சியூட்டும் பானங்களை எடுத்துக்கொள்ளலாம்.
  • இந்த பானங்கள் உடலை குளிர்வித்து, உடல் குறைபாடுகளை சமநிலைப்படுத்த உதவுகிறது, வெப்பம் மற்றும் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தி, செரிமான நெருப்பை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.
fruit juice

லேசான மற்றும் புதிய உணவுகளை உண்ணுங்கள்

  • தர்பூசணி, வெள்ளரி, திராட்சை போன்ற பழங்கள் உட்பட லேசான மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். பச்சை இலை காய்கறிகள், சுரைக்காய் மற்றும் அஸ்பாரகஸை போன்ற உணவை சேர்த்துக் கொள்ளுங்கள்
  • உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் கனமான, எண்ணெய் மற்றும் காரமான உணவுகளைத் தவிர்க்கவும்.
  • குளிர்ச்சியூட்டும் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துங்கள்
  • துளசி, வேம்பு மற்றும் சீரகம் போன்ற மூலிகைகள் குடலை குளிர்விக்கும். இந்த மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி புத்துணர்ச்சியூட்டும் மூலிகை தேநீர் தயாரித்து ருசித்துப் பாருங்கள்.

உணவை ஆசையாக சாப்பிடுவதைப் பயிற்சி செய்யுங்கள்

ஆயுர்வேதம் விழிப்புணர்வுடன் சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் சாப்பிட முயற்சி செய்யுங்கள். உங்கள் உணவை நன்றாக மென்று ஒவ்வொரு கடியையும் அனுபவிக்கவும். இப்படி சாப்பிடுவதால் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சினைகளைத் தடுக்கிறது. செயல்முறையை சீராக்க ஆயுர்வேத சூரணங்களையும் உட்கொள்ளலாம்.

Boost Immunity Drinks

மென்மையான உடற்பயிற்சி செய்யவும்

யோகா அல்லது நடைபயிற்சி போன்ற மிதமான உடல் செயல்பாடுகள் அக்னியைத் தூண்டுவதன் மூலம் செரிமானத்திற்கு உதவும். அதிக வெப்பம் மற்றும் நீரிழப்பைத் தடுக்க நாளின் வெப்பமான நேரத்தில் கடுமையான உடற்பயிற்சிகளைத் தவிர்க்கவும்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP