தமிழ் சினிமாவில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் கவர்ச்சி கதாபாத்திரங்களுக்காகவே ரசிகர்களின் மனதில் நிலைத்திருப்பவர் நடிகை சோனா. அஜித்தின் பூவெல்லாம் உன் வாசம், விஜய்யின் ஷாஜகான் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். திடீரென தெலுங்கு திரையுலகிற்கு சென்ற அவர் சிவப்பதிகாரம், மிருகம் படங்களில் மூலம் தமிழ் திரையுலகிற்கு திரும்பினார். இதில் மிருகம் படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு பல படங்களில் காமெடி ரோலிலும், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் A படங்களில் முன்னணி கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தார். ஆரம்பத்தில் கச்சிதமான உடல் தோற்றத்தில் கவர்ச்சி காட்டிய நடிகை சோனா சட்டென பன்மடங்கு எடை அதிகரித்து கேமரா ஃப்ரேமிற்குள் அடக்க முடியாத அளவிற்கு சென்றார்.
இந்த நிலையில் சோனா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த நேர்காணலை பார்க்கும் நமக்கே சோனா தானா இது என்ற சந்தேகம் எழுகிறது. ஏனென்றால் அந்த அளவிற்கு உடல் எடையைக் குறைத்துள்ளார். உடல் எடை குறைப்பு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு இது ரகசியமாச்சே சொல்லலாமா வேண்டாமா என யோசித்து அதன் பிறகு உண்மையை உடைக்கிறார்.
தனது உடல் எடை இழப்புக்கு கேரளாவின் ரகசிய பானம் ஒன்றே காரணம் எனக் கூறி அதன் செய்முறையை விளக்கி இருக்கிறார் சோனா. இந்த வீடியோ இரண்டு ஆண்டுகள் பழையது என்றாலும் உடல் எடை இழப்புக்கு இது நல்ல ஆலோசனை தானே... முயற்சித்து பார்க்கலாம் என பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.
சோனாவின் எடை இழப்பு ரகசியம்
- ஒரு டம்ளர் தண்ணீர் கொதிக்கவிட்டு அதில் அரை ஸ்பூன் சுக்கு பவுடர், ஒரு ஸ்பூன் கருஞ்சீரக பவுடர் போட வேண்டும். அடுத்ததாக ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு கொதிக்கும் முன்பாகவே ரசம் போல எடுத்து விடுங்கள் என தெளிவாக கூறுகிறார் நடிகை சோனா.
- இதை வடிகட்டிய பிறகு அரை எலுமிச்சை பழ சாறு சேர்த்து இரவு நேரத்தில் உறங்கச் செல்லும் முன்பாகக் குடித்தால் சல சலவென எடை குறையும் என நடிகை சோனா பரிந்துரைக்கிறார்.
- கொரோனா பேரிடரின் போது அமல்படுத்தப்பட்ட இரண்டாவது ஊரடங்கில் இதை தினமும் குடித்து 7 கிலோ எடை குறைத்ததாகவும் கொழுப்பு குறைந்த பிறகு வாரத்திற்கு இரண்டு முறை குடிப்பதாகவும் சோனா கூறினர்...
வாசகர்களே நீங்கள் சோனாவின் ரசிகராக இருந்தால் இந்த பானத்தை குடித்து பயன்பெறலாம்....
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation