பசியை அதிகரிக்க செய்யும் உணவுகளின் லிஸ்ட்!

 பசியின்மைக்குத் தீர்வு காண வேண்டும் என்றால் கட்டி பெருங்காயம் அல்லது பெருங்காயத்தூளைத் தேனில் கலந்து சாப்பிடவும்.

hungry foods

நமது வீடுகளில் உள்ள பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பலரும் சந்திக்கக்கூடிய பெரும் பிரச்சனைகளில் ஒன்று பசியின்மை. எனக்கு பசிக்கவே இல்லை வேண்டாம் சாப்பாடு, அப்புறம் சாப்பிடுகிறேன் என்ற வார்த்தைகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் சொல்வதைக் கேட்டிருப்போம். குறிப்பாக பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளுக்கு பசியைத் தூண்டுவதற்காக பல ஆங்கில மருந்துகள் முதல் சில வீட்டு வைத்தியங்களை மேற்கொள்வார்கள். இதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் பசியின்மை பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்.

அதே சமயம் இதுபோன்ற முறைகளைத் தொடர்ச்சியாக பின்பற்றினால் சில உடல் உபாதைகளும் ஏற்படும். எனவே இதைத் தவிர்க்கவும், பசியின்மை பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்றால் உங்களது உணவு முறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யவும். இதோ அவற்றில் சில உங்களுக்காக.

not hungry

பசியின்மையைப் போக்கும் உணவு முறைகள்:

  • தாகம் எடுக்கும் போதும் தண்ணீர் குடித்தாலும் காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் கொஞ்சம் மோர் அதிகமாக குடிப்பது நல்லது. மோர் குடிக்கும் போது உடலில் உள்ள நீரிழப்பைத் தடுப்பதோடு செரிமானத்தை அதிகப்படுத்தும். செரிமானம் அமைப்பு சீரானால் போதும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். மேலும் நல்ல பசி உணர்வையும் தூண்டும்.
  • சாம்பார், பொரியல், புளிக்குழம்பு போன்ற உணவுப் பொருட்களில் மிளகாய் சேர்த்துக் கொள்வது நல்லது. இது செரிமான அமைப்பை சீராக்கும். அதே சமயம் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இது வயிற்றுப் புண் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
  • காலையில் நீர் ஆகாரம் குடிக்கலாம். இல்லையென்றால் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்ற பழச்சாறுகளை அதிகமாக குடித்து வந்தால் பசியைத் தூண்டும்.
  • இஞ்சி அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நமது உடலில் பசியைத் தூண்டுவதோடு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சட்னி, டீ போன்றவற்றில் அதிகளவில் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வதுந நல்லது. ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.
  • பிரண்டையை ஊறுகாய் அல்லது துவையலாக செய்து சாப்பிடவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இயற்கையாகவே பசியைத் தூண்டுவதோடு வாயு மற்றும் செரிமான அமைப்பைச் சீராக்கும்.
  • மேலும் ஓமம், சீரகம், மிளகு, பெருங்காயம் போன்றவற்றைக் கொண்டு செய்யப்படும் பொடியையும் உணவில் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. செரிமானத்தை சீராக்கி பசியையும் அதிகரிக்கும்.
ginger tea ()
  • வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும், பசியின்மைக்குத் தீர்வு காண வேண்டும் என்றால் கட்டி பெருங்காயம் அல்லது பெருங்காயத்தூளைத் தேனில் கலந்து சாப்பிடவும். தொடர்ந்து வாரத்திற்கு இருமுறையாவது இதை மேற்கொள்ள முயற்சி செய்யுங்கள். நிச்சயம் பசியின்மை பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP