ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் தண்ணீர் அத்தியாவசியமான ஒன்று. ஒவ்வொரு நாளும் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் அருந்தும் போது, உடல் ஆரோக்கியம் மேம்படும். அதிலும் வாழ்நாள் முழுவதும் எவ்வித உடல் பாதிப்பும் இன்றி உடல் சீராக இயங்க வேண்டும் என்றால், சுடு தண்ணீரைக் கொஞ்சம் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அப்படி அந்தளவிற்கு சுடு தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகளைப் பெற முடியும் என்பது குறித்த விரிவானத் தகவல்கள் இங்கே.
சுடு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
உடல் நீரேற்றமாக இருத்தல்:
பொதுவாக குளிர்ந்த காலநிலை உங்களது உடலில் உள்ள நீர்ச்சத்துக்களை இழக்க நேரிடும். இந்நேரத்தில் சூடான நீரைக் குடிப்ப,து உடலில் இழந்த திரவங்களை நிரப்ப உதவியாக இருப்பதோடு உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. உடலில் வெப்பநிலையை சீராக்க உதவுவதோடு நீரிழப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவக்கூடும்.
குறையும் மன அழுத்தம்:
வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சில சூழல்கள் மற்றும் கஷ்டங்கள் மட்டும் மன அழுத்தத்திற்குக் காரணமாக அமையாது. உடலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளாலும் மன அழுத்தம் உண்டாகக்கூடும். இதைத் தவிர்ப்பதற்கு தியானம், யோகா, இசை கேட்பது போன்ற பல்வேறு விஷயங்களை மேற்கொள்ளும் அதே வேளையில், சூடான தண்ணீரைக் குடிப்பது நல்லது. ஒரு கப் சூடான தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளும் போது தொண்டை பிரச்சனைகளைக் கட்டுப்படுத்துவதோடு செரிமான அமைப்பையும் சீராக்க உதவக்கூடும். உடலை சுறுசுறுப்பாக்க செய்கிறது.
செரிமானம் மேம்படுதல்:
உடலின் செரிமான அமைப்பு சீராக இயங்குவதற்கு சூடான தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு டம்ளர் அளவிற்காவது சூடான தண்ணீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கும் போது, உடலின் செரிமான அமைப்புக்குத் தேவையான இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. மலச்சிக்கல், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனையும் தவிர்க்கக்கூடும். உணவுக்கு முன்னதாக கொஞ்சமாக சூடான நீர் பருகுவதால் வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும். இதனால் தேவையில்லாத உணவுகளை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்ப்போம்.
மேலும் படிக்க:வெறும் வயிற்றில் இந்த 5 உணவுகளை சாப்பிடக்கூடாது; ஏன் தெரியுமா?
ஒளிரும் சருமம் மற்றும் முடி வளர்ச்சி:
உங்களது வாழ்க்கையில் தினமும் சூடான தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கும் போது முடி வளர்ச்சி உதவக்கூடும். ஆம் சூடான நீர் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு தலைமுடி வளர்ச்சியை சீராக்குகிறது. பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
இதோடு சூடான நீரைப் பருகும் போது சருமத்தில் உள்ள நச்சுகள் மற்றும் அழுக்குகளை அகற்றுவதோடு சருமத்திற்குத் தேவையான இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் சருமம் எப்போதும் ஆரோக்கியமாகவும், சீக்கிரமே வயதான தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கிறது.
நினைவாற்றல் அதிகரிப்பு:
தினமும் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் மூலம் நரம்பு மண்டலத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மூளைக்குத் தேவைப்படக்கூடிய ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்க உதவுகிறது. இதனால் மன அழுத்தம், பதட்டம் குறைவதோடு நினைவாற்றலையும் அதிகரிக்கிறது.
மேலும் படிக்க:பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்சனை; இந்த 5 உணவுகளை சாப்பிட்டால் போதும்
எடை மேலாண்மை:
இன்றைக்கு அதிகரித்த உடல் எடையை எப்படியெல்லாம் குறைக்கலாம்? என்ற தேடல் அதிகளவில் உள்ளது. இதற்காக ஒருபுறம் ஓர்க் அவுட் செய்தாலும் தினமும் உங்களது வாழ்க்கை முறையில் சூடான நீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளவும். சூடான தண்ணீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு உடலில் உள்ள தேவையில்லாத கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது.
Image source - Freep
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation