வெண்டைச் செடி ஒரு கோடை கால பயிராகும். குறைந்தது எட்டு மணி நேரம் சூரிய ஒளி படும் இடத்தில் இதை வளர்க்க வேண்டும். எந்தவொரு செடியுமே ஆரோக்கியமாக வளர்ந்து நல்ல அறுவடையை தருவதற்கு சரியான மண் கலவையும் தரமான விதையும் தேவை. வெண்டை வளர்ப்புக்கு ph மதிப்பு 6-6.5 ஆகும். தலா ஒரு பங்கு செம்மண், தொழு உரம், கோகோ பீட், தலா ஒரு கைப்பிடி வேப்பம் புண்ணாக்கு, சாம்பல், ஒரு டீஸ்பூன் சுண்ணாம்பு சேர்த்து மண் கலவை தயாரிக்கவும். எப்போதுமே விதை தேர்வில் நாட்டு விதைக்கு முன்னுரிமை அளிக்கவும். வெண்டை செடியை பொறுத்தவரை நாற்று விட்டு வளர வேண்டிய அவசியமில்லை. விதைகளை நேரடியாகவே மண்ணில் விதைக்கலாம். 4-5 நாட்களில் விதைகள் முளைக்க தொடங்கும்.
வெண்டை செடி வளர்ப்புக்கு நிறைய தண்ணீர் தேவைப்படும். எனவே காலை, மாலை நேரங்களில் தண்ணீர் ஊற்றவும். வெண்டை வளரும் மண் காயந்து விடக் கூடாது. தண்ணீர் போதுமான அளவு ஊற்றாதபட்சத்தில் பூ உதிர்வு ஏற்படும், பிஞ்சு பிடிக்காது, செடி வளராது. வீட்டில் உள்ள காய்கறி கழிவுகளை ஐந்து நாட்களுக்கு தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி வெண்டை தொட்டியில் ஊற்றலாம். வெண்டை செடியை மாடித் தோட்டத்தில் வளர்க்கும் போது அதிகப்படியான கவனம் தேவை.
30-40 நாட்களில் வெண்டைச் செடியில் பூக்கள் பூக்க தொடங்கும். மஞ்சள் நிறத்தில் இருக்கும். மகரந்த சேர்க்கையில் பிரச்னை இருக்காது. வாரம் ஒரு முறை புளித்த மோரை ஸ்ப்ரே செய்யுங்கள். இதுவே வெண்டைச் செடியின் உரமாகும். பூ பூத்த 10-12 நாட்களில் வெண்டைக் காய் பறிக்கலாம். இரண்டு மாதத்திற்கு வெண்டைச் செடி காய் கொடுக்கும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com