herzindagi
image

Fennel Seeds Plant: எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட சோம்பு; எளிய முறையில் வீட்டிலேயே வளர்க்கும் முறைகள்!

சமையலில் மிக முக்கிய பங்கு வகிக்கும் சோம்புவை வீட்டிலேயே எளிமையான முறையில் வளர்க்க முடியும்.
Editorial
Updated:- 2025-09-17, 12:29 IST

சைவ உணவுகள் முதல் அசைவ உணவுகள் வரை அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது சோம்பு. மசாலா பொருட்களில் மிகவும் முக்கிய ஒன்றான சோம்புவில் நார்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி. பொட்டாசியம் மற்றும் மெக்னீசயம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் செரிமான பிரச்சனை முதல் மாதவிடாய் வலி, கண் ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவுகிறது. இப்படி ஊட்டச்சத்துக்களின் கூடாராமாக விளங்கும் சோம்புவைக் கடைகளில் வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டிலேயே மிகவும் எளிமையாக வளர்க்க முடியும். எப்படி என்பது குறித்த முழு விபரம் இங்கே.

சோம்பு செடி வளர்க்கும் முறைகள்:

  • வீட்டிலேயே எளிய முறைகளில் சோம்பு செடியை வளர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் செம்மண் மற்றும் தொழு உரம் போன்ற இரண்டையும் சரிபாதியாக கலந்து மண்கலவை தயார் செய்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் இந்த மண்கலவையை ஒரு சாக்கு அல்லது உபயோகித்த வாளியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் கலந்துக் கொள்ள வேண்டும்.
  • இதையத்து மணற்கலவையின் மேற்பரப்பில் சோம்வைத் தூவி மண்ணைப் போட்டு மூடிக் கொள்ளவும்.
  • அதிகமாக தண்ணீர் ஊற்றினால் சோம்பு வளராது என்பதால் தினமும் லேசாக தண்ணீர் தெளித்து வரவும். அதிகமாக தண்ணீர் தெளித்தால் சோம்பு வளராது என்பதால் தண்ணீரின் அளவைக் கொஞ்சமாகப் பயன்படுத்த வேண்டும்.

 

  • இவ்வாறு நடவு செய்த சோம்பு விதைகள் தட்ப வெப்பநிலைக்கு ஏற்றவாறு 5 முதல் 15 நாட்களில் வளர்ச்சி அடைய ஆரம்பித்துவிடும்.
  • தினமும் நீங்கள் ஊற்றும் தண்ணீரின் அளவைப் பொறுத்து செடிகள் பாதுகாப்பாக இருக்கும். விதைகள் ஊன்றிய 60 நாட்களில் இலைகள் நன்கு வளர்ச்சியடையும்.
  • 100 நாட்களில் செடி முழுவதும் மஞ்சள் நிற பூக்களாக மாறும். மஞ்சள் நிற பூவின் அடிப்பகுதியில் சோம்புகள் வளரும். 150 நாள்களில் காய துவங்கும்.
  • சோம்பின் விதைகள் நன்கு வளர்ச்சி அடைந்தவுடன் பறிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இவ்வாறு பறித்து காய வைக்கும் போது அதிக நறுமணம் இருக்காது. செடியிலேயே காய வைக்கும் போது சுவையும் நறுமணமும் அதிகளவில் இருக்கும். இவ்வளவு தான் வீட்டிலேயே எளிமையான முறையில் சோம்பு செடிகளை வளர்க்கலாம்.

 

  • ஒருவேளை உங்களது வீட்டின் அருகாமையில் இடங்கள் இருந்தால் தரைப்பரப்பில் சோம்புவைத் தூவி விட்டு வளர்க்க ஆரம்பிக்கலாம். விலையுயர்ந்த மசாலாப் பொருட்களில் ஒன்றான சோம்புவை இனி மேற்கூறிய முறைகளில் எளிமையாக வீட்டிலேயே வளர்க்க முயற்சி செய்யுங்கள்.
  • செடிகள் வளர்க்கும் போது பூச்சி தாக்குதல் அதிகளவில் இருக்கும். குறிப்பாக மாவூப்பூச்சி, அஸ்வினிப்பூச்சிகளால் செடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். இவற்றைத் தடுக்க வேண்டும் என்றால் வேப்பண்ணெய் கரைசலைக் கரைத்து செடிகளில் தெளித்து விடவும். இதே போன்று மோர்க்கரைசலையும் தெளித்துவிடும் போது பூச்சித் தாக்குதல் இருக்காது.

Image Credit - Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com