உடல் எடையைக் அதிகரிக்க செய்வது போல எடையைக் குறைப்பது எளிதான காரியம் அல்ல. எடை குறைப்பது என்பது மிகவும் கடினமான பணி. எனினும் எடையைக் இழக்க முடிவெடுத்தால் அதற்கு சில விளையாட்டுகள் உங்களுக்கு உதவலாம்.
உடல் எடையைக் குறைக்க ஜிம்மிற்கு செல்வது மட்டுமே ஒரே வழி என நம் மனதில் தவறான எண்ணம் உள்ளது. ஜிம்மில் சேர்ந்தவுடன் உடனடியாக ஆர்வமிகுதியில் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடுகிறோம். இதனால் முதுகில் காயங்கள், தசைநார் சிதைவு மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகிறோம். எடை இழப்பு என்பது மனித உடலில் வளர்சிதை மாற்றம் மற்றும் கலோரி செலவினங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஜிம் செல்லும் பல நபர்கள் இதை கவனிப்பதில்லை. இதற்கு பதிலாக சில விளையாட்டுகளில் ஈடுபடுவது எடை இழப்புக்கு பயனளிக்கும். இது உங்களது எடை இழப்பு முயற்சிக்கு நல்ல பலன்களை தரும். அதே நேரம் நீங்கள் ஜிம்மிற்கு செல்லும் செலவும் குறைகிறது.
நம் உடலின் பல முக்கிய தசைகளை தூண்டிவிடும் தீவிரமான விளையாட்டுகளில் ஒன்றாக நீச்சல் கருதப்படுகிறது. நீச்சலில் கைகள், கால்கள், உடற்பகுதி மற்றும் வயிறு ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் விரைவாக எடை குறைக்க முடியும். நீச்சல் விளையாட்டு இரண்டு மடங்கு நன்மைகளை வழங்குகிறது. இது கலோரிகளை எரிப்பது மட்டுமல்லாமல் சில மணி நேரத்தில் நமது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது.
மேலும் படிங்க ஆயுள் அதிகரிக்க வேண்டுமா ? தினமும் காலையில் மூச்சுப் பயிற்சி செய்யுங்க!
எடை இழப்புக்கு பயனுள்ள உடற்பயிற்சியின் சிறந்த வடிவமாக சைக்கிள் ஓட்டுதல் பார்க்கப்படுகிறது. இது உங்கள் இதயத் துடிப்பை சீராக வைத்திருக்கிறது. ஜாகிங் அல்லது ஓட்டப் பயிற்சியுடன் ஒப்பிடும்போது முழங்கால்கள், கணுக்கால் மற்றும் மூட்டுகளில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சைக்கிள் ஓட்டுவதால் கணிசமான அளவு கலோரிகளை குறைக்க முடியும்.
எடையைக் குறைக்க உதவும் மற்றொரு பிரபலமான விளையாட்டு கூடைப்பந்து. இது கலோரிகளை எரிக்க பெரிதும் உதவுகிறது. இந்த விளையாட்டில் நீங்கள் வெவ்வேறு திசைகளில் குதிக்க, ஒட மற்றும் நகர வேண்டி இருக்கும். இந்த விளையாட்டில் உங்களது முழு உடலும் ஈடுபடுகிறது. கலோரிகளை விரைவாக எரிக்க கூடைப்பந்து உதவுகிறது.
குழந்தை பருவத்தில் நாம் அனைவரும் விரும்பிய விளையாட்டுகளில் பேட்மிண்டனும் ஒன்று. கலோரிகளை எரிப்பதில் இது பயனுள்ளதாக இருக்கும் என்பது பலருக்கும் தெரியாது. உடல் முழுவதும் உள்ள அனைத்து சக்கரங்களும் இந்த விளையாட்டில் தூண்டப்படுகின்றன. பேட்மிண்டன் இதயத் துடிப்ப சீராக்கி மூச்சு திணறலை குறைக்கிறது. பேட்மிண்டன் விளையாடுவதால் உங்கள் ஆயுள் இரண்டு வருடம் கூடுகிறது.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com