நாள் முழுவதும் உற்சாகத்துடனும், சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும் என்றால் சில உடற்பயிற்சிகளைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். தினமும் அரை மணி நேரம் நடந்தால் வாழ்நாளின் ஆயுளைக் கூடிக் கொள்ள முடியும் என மருத்துவர்கள் கூறுவார்கள். அந்தளவிற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது வாக்கிங். குறிப்பாக தினமும் காலையில் 30 நிமிடங்கள் நடந்தால், உடலில் உள்ள பல கடுமையான நோய்களைக் குணப்படுத்த முடியும். அவற்றில் முக்கியமான சில உங்களுக்காக.
30 நிமிடங்கள் வாக்கிங் செல்வதால் கிடைக்கும் நன்மைகள்:
இதய ஆரோக்கியம்:
காலையில் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக நடைபயிற்சி மேற்கொள்வார்கள். மனதை ஒருமனப்படுத்துவதோடு வேகமாக ஒரு 30 நிமிடங்களுக்கு நடக்கும் போது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைந்து இதயம் சீராக இயங்குவதோடு வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கும்.
உயர் இரத்த அழுத்தம்:
இன்றைக்கு நம்மில் பலர் சந்திக்கும் முக்கிய உடல் நல பிரச்சனைகளில் முக்கியமானது பிபி எனப்படும் உயர் இரத்த அழுத்தம். டென்சன், பணிச்சுமை போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடிய உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், தினமும் 30 நிமிடங்கள் கட்டாயம் நடைபயிற்சிமேற்கொள்ள வேண்டும்.
உடல் எடையைக் கட்டுப்படுத்துதல்:
தினமும் 30 நிமிடங்கள் நடப்பதன் மூலம் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால்கள் குறைவதற்கு உதவியாக உள்ளது. உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகளைக் கரைக்கவும் நடைபயிற்சிகட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் சர்க்கரை நோய் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் குறைந்தது தினமும் 30 நிமிடங்கள் வாக்கிங் மேற்கொள்ள வேண்டும். அதிலும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை டயட்டில் எடுத்துக் கொண்ட பின்னதாக மேற்கொள்ளப்படும் வாக்கிங் நிச்சயம் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தாக அமைகிறது.
- மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் தினமும் 30 நிமிடங்கள் காலையில் வாக்கிங் மேற்கொள்ள வேண்டும். கொஞ்சம் வேகமாக நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது. தசைகள் வலுப்படுவதோடு மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க:வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடியுங்க; உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் இதோ
- காலை நேரத்தில் வாக்கிங் மேற்கொள்ளும் போது மனதிற்கு இதமான சூழலை அமைவதோடு அதிக கோபத்தைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.
- தினமும் வாக்கிங் மேற்கொள்ளும் போது தசைகள் வலுப்பெறுவது போன்று எலும்புகள் வலுப்பெற உதவக்கூடும். இதற்காக அதிக நேரம் வாக்கிங் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. ஆரம்பத்தில் ஒரு நிமிடங்களுக்கு நடந்தால் போதும்.
- இதோடு மட்டுமின்றி காலை நேரத்தில் வாக்கிங் செல்லும் போது வைட்டமின் டி சத்துக்கள் அதிரிப்பதோடு நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்பெற உதவுகிறது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation