ஒரு வாரத்தில் 3 கிலோ எடையைக் குறைப்பதற்கு உடலில் கலோரி பற்றாக்குறையை உருவாக்குவது அவசியம். சற்று கடினமான உடற்பயிற்சிகள் மற்றும் குறிப்பிட்ட உணவுமுறையை தவறாமல் பின்பற்றினால் 3 கிலோ எடை குறைப்பு என்பது சாத்தியமே. நாம் எல்லோருமே உடலை ஆரோக்கியத்துடனும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க விரும்புவோம். சில சமயங்களில் 6 மாதத்திற்கு முன்பாக எடுத்த துணி கூட சேராமல் போய்விடும். எனவே வேகமாக உடல் எடையைக் குறைத்து உடலை கட்டுக்கோப்பாக மாற்றும் எண்ணம் ஏற்படும். உடல் எடை குறைப்புக்கு பொறுமை மிக அவசியமானதாகும். விரைவாக உடல் எடை சாத்தியமே. எனினும் எடை குறைப்புக்கு நேரமும், நிலைத்தன்மையும் அவசியம்.
சாப்பிடும் உணவுகளில் உப்பு அளவை குறைக்கவும். உடலில் உள்ள நீர் எடையை குறைக்க நீர் தக்கவைப்பை தவிர்க்க வேண்டும். எனவே உடலில் நீர் தக்கவைப்பை உறுதி செய்யும் சோடியம் பயன்பாட்டை குறைக்கவும்.
இந்த ஒரு வார காலத்தில் மது அருந்துதல், குளிர்பானங்களை குடிப்பது போன்ற பழக்கங்களை தவிர்க்கவும். இவற்றில் ஊட்டச்சத்து ஏதும் கிடையாது. ஆனால் அதிக கலோரிகள் கொண்டவை. மது அருந்தும் பழக்கத்தை தவிர்க்க முடியாத பட்சத்தில் 30 மில்லி மட்டும் குடிக்கலாம். 3 கிலோ எடையை குறைப்பதற்கு இவற்றை நீங்கள் கட்டாயம் அருந்தக் கூடாது.
ஒரு வாரத்தில் மூன்று கிலோ எடையைக் குறைக்க கலோரி பற்றாக்குறை உணவுமுறையே சிறந்த தீர்வாகும். எத்தனை கிலோ எடையைக் குறைக்க நீங்கள் முயற்சித்தாலும் கலோரி பற்றாக்குறை உணவுமுறைக்கு மாற வேண்டும். நீங்கள் 2 ஆயிரம் கலோரிகளை எரிக்க வேண்டுமானால் அதை விட குறைவான அளவு கலோரி உணவுமுறையை பின்பற்றவது அவசியம். கலோரி பற்றாக்குறை ஒரு வாரத்தில் எடை குறைப்பில் நல்ல பலனை தரும்.
தினமும் 10 ஆயிரம் அடிகள் நடைபயிற்சி செல்லவும். ஒரு மணி நேரத்தில் விறுவிறுப்பாக 5 கிலோ மீட்டர் தூரம் நடக்க முயற்சிக்கவும் அல்லது அரை மணி நேரம் எங்கும் நிற்காமல் ஜாக்கிங் செல்லுங்கள். ஸ்கிப்பிங் பயிற்சி செய்யவும்.
மேலும் படிங்க ஒரு வாரத்தில் 2 கிலோ எடையை குறைக்க இதை மட்டும் முயற்சி பண்ணுங்க... பலன் உண்டு
நீங்கள் பட்டினி கிடக்க வேண்டும் என அவசியம் கிடையாது. புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடவும். இவை உங்களை முழுமையாக உணர வைத்து பசியற்ற நிலையை உருவாக்கும். உடலில் வளர்சிதை மாற்றமும் உக்குவிக்கப்படும். பருப்பு வகைகள், சிக்கன், பனீர், சோயா, முட்டை, பிரவுன் ரைஸ் ஆகியவை உங்களுக்கு உதவும்.
இந்த ஒரு வாரத்தில் நீங்கள் ஆணாக இருந்தால் 3.5 லிட்டர் தண்ணீரும், பெண்ணாக இருந்தால் 2.7 லிட்டர் தண்ணீரும் குடிக்கவும். குறைந்தது 8-9 மணி நேரம் உறங்கினால் 3 கிலோ எடையை தாராளமாக இழக்கலாம்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com