தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு செல்லும் எல்லோருமே குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் முன்பு கெத்தாகவும் ஆரோக்கியமாகவும் தோற்றமளிக்க விரும்புவோம். கொஞ்சம் கன்னம் உப்பிவிட்டால் உடல் எடை அதிகரித்துவிட்டது போல் தெரிகிறதே என்று கேட்பார்கள். தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே இருந்தாலும் 2 கிலோ வரை எடையை இழந்து தோற்றமளிக்க முடியும். எடையை இழப்பு பயணம் எப்போதுமே சவாலான ஒன்று தான், எனினும் ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றினால் 2 கிலோ என்ன கூடுதலாகவே எடையை இழக்கலாம். இந்த பதிவில் 7 நாட்கள் அதாவது ஒரு வாரத்தில் 2 கிலோ எடையை உணவுமுறையின் மூலம் இழப்பது எப்படி என பார்க்கலாம். இதில் சைவமும் அசைவமும் உண்டு. ஏனென்றால் உடல் எடையை சரிவிகித ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு குறைக்க வேண்டும்.
7 நாள் உணவு திட்டத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, கார்போஹைட்ரேட்ஸ் நிறைந்திருக்கும்.
காலை உணவு : 100-150 கிராம் ஓட்ஸ் சாப்பிடுங்கள். அதோடு வாழைப்பழம், ஆப்பிள் மற்றும் பெர்ரி பழங்களை உட்கொள்ளவும். ஓட்ஸ் நார்ச்சத்து நிறைந்ததாகும்.
காலை ஸ்நாக் : ஒரு கைப்பிடி அளவிற்கு பாதாம் அல்லது வால்நட்ஸ் சாப்பிட்டு உடலில் ஆற்றலை தக்க வைக்கவும்
மதிய உணவு : பருப்பு சூப் குடிக்கவும். கீரை, கேரட், வெள்ளரி, தக்காளி அடங்கிய காய்கறி சாலட் சாப்பிடவும்
மாலை ஸ்நாக் : வறுத்த உப்புக்கடலை அல்லது ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்
இரவு உணவு : குயினோவா புலாவ் மற்றும் வேகவைத்த காய்கறிகளை உட்கொள்ளுங்கள். குயினோவா புரதம் நிறைந்ததாகும். அசைவம் சாப்பிடும் நபராக இருந்தால் சிக்கன் அல்லது மீன் சாப்பிடலாம்.
காலை : கீரை, வாழைப்பழம், தேன் மற்றும் பால் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஸ்மூத்தி குடிக்கவும். இதில் ஊட்டச்சத்து நிறைந்திருக்கிறது. அரை கப் பப்பாளி அல்லது ஒரு பீஸ் தர்பூசணி சாப்பிடுங்கள்
மதிய உணவு : பிரவுன் ரைஸ் சமைத்து காய்கறி குழம்பு செய்து சாப்பிடவும். பிரவுன் ரைஸ் நார்ச்சத்து நிறைந்தது. செரிமானத்திற்கு உகந்தது.
மாலை ஸ்நாக் : கிரீன் டீ மற்றும் நார்ச்சத்து நிறைந்த பிஸ்கட்
இரவு : பனீர் டிக்கா அல்லது சிக்கன் டிக்கா சாப்பிடுங்கள். பனீரில் புரதச்சத்து அதிகம்.
காலை : அவல் பயன்படுத்தி போஹா தயாரித்து சாப்பிடுங்கள். இதில் பட்டாணி, கேரட், உருளைக்கிழங்கு இடம்பெற வேண்டும். ஒரு கிளாஸ் மோர் அல்லது இளநீர் குடிக்கவும்.
மதிய உணவு : இரண்டு கோதுமை ரொட்டியை கொண்டைக்கடலை குருமாவுடன் சாப்பிடவும்
மாலை ஸ்நாக் : 100 கிராம் முளைகட்டிய பயிர் சாப்பிடுங்கள்
இரவு உணவு : வேகவைத்த பிரவுன் ரைஸுடன் வறுத்த பனீர், காய்கறிகளை மிக்ஸ் செய்து சாப்பிடவும்.
மேலும் படிங்க நீங்கள் தினமும் சாப்பிடும் கத்திரிக்காயின் நன்மைகள் தெரியுமா? -இனிமேல் அதை தூக்கி எறியாதீர்கள்!
காலை : 4 வேகவைத்த முட்டைகளை சாப்பிடவும். அதோடு 200 கிராம் வெள்ளரிக்காய்.
மதிய உணவு : சப்பாத்திக்கு மசூர் பருப்பு வைத்து சாப்பிடவும்.
மாலை ஸ்நாக் : கிரீன் டீ
இரவு உணவு : பிரவுன் ரைஸ் மற்றும் பாசிப்பருப்பு பயன்படுத்தி கிச்சடி செய்து சாப்பிடவும். வெங்காயத்திற்கு பதில் வெள்ளரிக்காய் ரைதா செய்யவும்,
காலை : கோதுமை பேன்கேக் மற்றும் ஆப்பிள், திராட்சை, மாதுளை சாப்பிடுங்கள்
மதிய உணவு : காய்கறிகள் நிறைந்த ஓட்ஸ் உப்பும. ஓட்ஸ் குடலுக்கு நல்லது.
மாலை ஸ்நாக் : இரண்டு கேரட் அல்லது ஒரு வெள்ளரிக்காய்
இரவு : குயினோவா அல்லது சிக்கன் வறுவல்
காலை : யோகர்ட், கீரை, வாழைப்பழம், சீயா விதை மற்றும் பெர்ரி கொண்டு தயாரிக்கப்பட்ட ஸ்மூத்தி சாப்பிடுங்கள். ஆப்பிள் ஜூஸ் அல்லது ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம்.
மதிய உணவு : தானிய வகை பயன்படுத்தி செய்யப்பட்ட கிச்சடி. தானியங்களில் கலோரிகள் குறைவு ஆனால் ஊட்டச்சத்து அதிகம்.
மாலை ஸ்நாக் : 50 கிராம் உப்புக்கடலை
இரவு உணவு : கோதுமை பிரெட் மற்றும் காய்கறி சூப். சூப்களில் கலோரி மிகக் குறைவு.
காலை : உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வெள்ளரிக்காய், புதினா, எலுமிச்சை, கீரை கொண்டு தயாரிக்கப்பட்ட ஸ்மூத்தி. இவை உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும்.
மதிய உணவு : வேகவைத்த காய்கறிகள்
மாலை ஸ்நாக் : வறுத்த பூசணி விதைகள் சாப்பிடவும்
இரவு உணவு : 4 வேகவைத்த முட்டை அல்லது வறுத்த மீனோடு இரவு உணவை நிறைவு செய்யவும்
இந்த ஆரோக்கியமான உணவுமுறையோடு நீங்கள் தினமும் ஒரு மணி நேரம் அல்லது 5 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சி சென்றால் கட்டாயமாக 2 கிலோவை விட கூடுதலான எடையை இழந்திருப்பீர்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com