herzindagi
image

மன அழுத்தம், கவலையில் இருந்து விடுபட டென்னிஸ் வீரர் ஜோகோவிச் பயிற்சியை பின்பற்றுங்க

டென்னிஸ் ஜாம்பவான் நோவாக் ஜோகோவிச் போட்டியின் போது மன அழுத்தத்தில் இருந்து விடுபட களத்திலேயே வித்தியாசமான பயிற்சி ஒன்றை செய்கிறார். இது அவரை மன அழுத்தம் மற்றும் கவலையில் இருந்து விடுபட செய்து போட்டியில் முழு கவனத்தை செலுத்த உதவுகிறது. நீங்களும் அந்த பயிற்சியை செய்து மன அழுத்தம், கவலையில் இருந்து விடுபடலாம்.
Editorial
Updated:- 2025-07-12, 14:41 IST

எந்த ஒரு விளையாட்டிலும் களத்தில் மோதும் எதிராளியை விட சுற்றுப்புற சூழ்நிலையும், பருவநிலையும் வீரர்களுக்கு கடும் சவாலை அளிக்கும். போட்டியில் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்ற நிலையில் ரசிகர்களின் கூச்சல் கூட அசெளகரியத்தை ஏற்படுத்தும். டென்னில் விளையாட்டில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரான நோவாக் ஜோகாவிக் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் போட்டி தொடங்கும் முன்பாக செய்த வித்தியாசமான பயிற்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஜோகோவிச்சின் பயிற்சி மன அழுத்தம், கவலையில் இருந்து விடுபட உதவும் எனக் கூறப்படுகிறது. அந்த பயிற்சியை எப்படி செய்வது என பார்ப்போம்.

கவலை நீ ஜோகோவிச் பயிற்சி

போட்டி தொடங்கி இறுதி புள்ளியை பெற்று வெற்றியடையும் வரை முழு கவனமும் களத்திற்கு இருக்க வேண்டும் என்பதால் ஜோகோவிச் இந்த பயிற்சியை செய்வதாக கூறப்படுகிறது. மேலும் எதிராளியின் ரசிகர்களின் கூச்சல், வெறுப்பு ஏற்றும் செயல்களால் போட்டியில் இருந்து கவனம் விலகிச் செல்லக் கூடாது. இதற்காகவே களத்தில் அந்த பயிற்சியை செய்கிறார். நாமும் அந்த பயிற்சியை செய்து மன அழுத்தம், கவலையில் இருந்து விடுபடலாம்.

மன அழுத்தம், கவலை நீங்க பயிற்சி

  • முதலில் நேராக நிற்கவும். அதன் பிறகு வலது காலை இடது கால் தாண்டி(கிராஸ்) வைக்கவும். வலது கை இடது கை அக்குளுக்கு கீழ் வைக்கவும்.
  • இடது கையை சுழற்றி வலது தோல்பட்டையை பிடிக்கவும். அடுத்ததாக கழுத்தை இடது பக்கம் நோக்கி திருப்புங்கள்.
  • உடலை வலது பக்கம் நோக்கி சற்று திருப்பி மூன்று முறை ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து விடவும். இப்போது உடலை இடது பக்கமாக திருப்பி மூன்று முறை மூச்சை இழுத்து உள்ளே விடவும்.
  • இதே போல இடது காலை வலது கால் தாண்டி வைக்கவும். அடுத்தடுத்த படிகளை தொடரவும்.
  • செர்பிய நாட்டை சேர்ந்த உடற்பயிற்சியாளர் இந்த பயிற்சியை விளக்கி உடலில் மன அழுத்தம், கவலை குறைவதாக தெரிவித்துள்ளார். நீங்களும் இதை வீட்டில் முயற்சி செய்யலாம்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com