குளிர்காலத்தில் எழுந்திருக்க சோம்பேறித்தனப்பட்டு உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்ததை கவனிக்க தவறி இருப்போம். கை, கால்களில் தொங்கு சதையும், வயிற்றில் தொப்பை போட்ட பிறகே உடல்நல செயல்பாடுகளை உணர்ந்திருப்போம். உடல் எடையை குறைத்து தோரணையான தோற்றத்திற்கு மாற நினைத்து வீட்டில் இருந்து வெளியே கால் வைத்தால் வெயில் மண்டையை பொளக்கும். கோடை காலத்தில் வெயிலை காரணம் காட்டி உடற்பயிற்சியை தவிர்ப்பது முற்றிலும் சாக்கு போக்கு. வாட்ட சாட்டமான உடல் அமைப்பை பெறுவதற்கு கோடை காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் எவை ? உடற்பயிற்சி நேரம் குறித்து பார்க்கலாம்.
கோடை கால உடற்பயிற்சி
காலையில் 5-6 மணிக்கு ஆரம்பித்து 7 மணி வரை சைக்கிளிங் செல்லவும். சைக்கிளிங் செல்வதால் கால் தசை வலுப்பெறும், கையில் தொங்கு சதை குறையும், உடல் சுறுசுறுப்பு பெறும். காலையில் சைக்கிளிங் செல்லும் போது நன்கு வியர்வை வரும். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும் போது அது நேரடியாக இதய ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும்.
மலையேற்றம்
கை, கால்களை அசைத்து உடற்பயிற்சி செய்வதே கடினம். இதில் மலையேற்றம் செல்வதா எனக் கேட்காதீர்கள். தமிழகத்தில் எத்தனையோ மலையேற்றங்கள் உள்ளன. கோடை காலத்தில் மாதத்திற்கு இரண்டு முறை என 5-6 மலையேற்றங்களுக்கு செல்லுங்கள். மலையேற்றத்தின் போது கிடைக்கும் புத்துணர்வு வேறு எதிலும் கிடைக்காது. உங்களுடைய ஸ்டாமினா அளவை நீங்களே தெரிந்து கொள்ள இது நல்ல வாய்ப்பும் கூட.
நீச்சல் பயிற்சி
வாரத்திற்கு இரண்டு நாள் நீச்சல் பயிற்சிக்கு செல்லுங்கள். தலை முதல் பாதம் வரை அனைத்து உடற்பாகங்களும் செயல்படக்கூடிய பயிற்சி நீச்சல் மட்டுமே. உடலின் நெகிழ்வுத்தன்மைக்கு நீச்சல் பயிற்சி செல்வது மிகவும் நல்லது. நீச்சல் பயிற்சி சென்றால் மன அழுத்தம் குறையும் என்று ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. குழந்தைகள் போட்டி தொட்டியில் குளத்தில் விளையாடாமால் நீச்சல் அடிப்பதில் கவனம் செலுத்தவும்.
தண்டால் எடுத்தல், ஸ்குவாட்ஸ்
வெயில் காலத்தில் வெளியே சென்று பயிற்சி செய்வது கடினம் என நினைத்தால் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம். காலை, மாலை நேரங்களில் தலா மூன்று செட் தண்டால் எடுக்கவும். ஒரு செட் தண்டால் எண்ணிக்கை 20 . அதே போல ஸ்குவாட்ஸ் மூன்று செட். ஒரு செட் ஸ்குவாட்ஸ் எண்ணிக்கை 25. மேலும் ஆயிரம் எண்ணிக்கையில் ஸ்கிப்பிங் குதிக்கவும்.
நடைபயிற்சி
மேற்கண்ட பயிற்சிகளை விட வேறு எதுவும் எளிதாக இருக்கிறதா என கேட்டால் நடைபயிற்சி செல்வது மட்டுமே தீர்வாகும். காலையில் அரை மணி நேரம், மாலையில் கால் மணி நேரம் நடைபயிற்சி செல்லுங்கள். வாரத்திற்கு தவறாமல் 5 நாட்கள் நடைபயிற்சி செல்லவும்.
மேலும் படிங்ககுழந்தை பாக்கியம் பெற அனுமன் ஆசனத்தை 30 நாட்களுக்கு தொடர்ந்து பண்ணுங்க
* காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை உடற்பயிற்சி செய்யாதீர்கள். அந்த நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
* எப்போதும் கையில் தண்ணீர் பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்யும் போது நீரிழப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு. தளர்வான ஆடைகள் அணிந்து உடற்பயிற்சி செய்யவும்.
கோடை காலத்தில் இந்த உடற்பயிற்சிகள் உடல் எடையை குறைப்பதோடு மட்டுமின்றி தொடர்ந்து செய்யும் போது வாட்ட சாட்டமான உடல் அமைப்பையும் கொடுக்கும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation