Summertime Skin Rashes: கோடைக்காலத்தில் ஏற்படும் சரும அரிப்புகளை ஈஸியா கையாளலாம்!!

உங்கள் சரும பராமரிப்பு வழக்கத்தைத் தவிர, உங்கள் சருமத்தைப் பாதுகாக்க பல பழக்கங்களை மாற்றலாம்.

skin rashes big image

கோடைக்காலம் தொடங்கிவிட்டது இந்த சீசனில் அடிக்கடி முகம் மற்றும் உடல் பகுதிகளில் சருமம் அரிப்புகள் மற்றும் வெடிப்புகள் ஏற்படும். பெரும்பாலும் இவை அக்குள், முழங்கைகள், முழங்கால்கள், கழுத்து போன்ற உடலின் மூலை பகுதிகளில் அதிகமாக ஏற்படும்.

பல நேரங்களில் நாம் சில பழக்கங்களை புறக்கணிக்கிறோம் இதன் காரணமாக சரும அரிப்புக்கான ஆபத்து அதிகரிக்கிறது. எனவே கோடை காலத்தில் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகளை தவிர்க்க நாம் உடனடியாக மாற்ற வேண்டிய பழக்கங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

கோடையில் அணிய வேண்டிய ஆடைகள்

cotten inside

கோடைக்காலத்தில் சருமத்தைப் பராமரிப்பதற்கும் பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன் ஒரு பகுதியாக சருமத்திற்கு உகந்த துணியால் செய்யப்பட்ட ஆடைகளை அணிவது அவசியம். பருத்தி துணியால் செய்யப்பட்ட சருமத்திற்கு ஏற்ற ஆடைகளை அணியலாம். இது மிகவும் மெல்லியதாகவும் தோலில் மிகவும் மென்மையாகவும் இருக்கும். ஃபேன்ஸி லுக் பெறுவதற்காகத் தெரியாமல் உடலுக்கு அரிப்புகளை உண்டாக்கும் அடைகள் அணிவதை தவிர்க்கலாம்.

குளித்த பின் சருமத்தை பராமரிக்கும் முறை

குளித்த பிறகு உடலை ஒரு துண்டு கொண்டு சுத்தம் செய்கிறோம். ஆனால் சில சமயங்களில் அவசரம் காரணமாக உடலை சரியாக சுத்தம் செய்வதில்லை, இதன் காரணமாக உடலின் மூலைகளிலோ அல்லது விளிம்புகளிலோ தண்ணீர் தேங்கி நிற்கிறது. மூலைகளில் நீர் தேங்குவதால் பல வகையான சரும நோய்த்தொற்றுகளைப் பெறலாம். இந்த சரும தொற்று உங்கள் உடலில் தோல் வெடிப்புகளை ஏற்படுத்தும் இதைச் செய்வதைத் தவிர்க்கவும்.

கைக்குட்டை

handkerchief inside

கோடையில் அதிகமாக வியர்வை ஏற்படும் அதை சுத்தம் செய்ய மீண்டும் மீண்டும் அதே கைக்குட்டையை பயன்படுத்துவோம். வியர்வையில் இருந்து வெளியேறும் கிருமிகள் தோலுடன் தொடர்பு கொண்டு சருமத்தில் தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே சருமத்தைப் பராமரிக்க அதிகம் ஈரப்பதத்தை உறிஞ்சக்கூடிய துடைப்பான்களைப் பயன்படுத்துங்கள். உங்கள் சருமத்தை சுத்தப்படுத்தும்.

மேலும் படிக்க: முடி வரண்டு கொத்து கொத்தாய் கொட்டுவதை தடுக்க வீட்டு சீரம்

தோல் வெடிப்புகளைத் தவிர்ப்பதற்கான எளிய உதவிக்குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால், இந்த கட்டுரையைப் பகிர மறக்காதீர்கள். இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

Image Credit- freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP