மாறிவரும் காலநிலையில் சருமம் தொடர்பான பல பிரச்சனைகள் கூடவே வருகின்றது. சூரிய ஒளி மற்றும் வியர்வையால் சருமம் பொலிவை இழக்க நேரிடும். இந்த கோடைக்கால பருவத்தில் சூரிய ஒளி காரணமாக சருமம் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த சீசனில் வறண்ட சரும பிரச்சனையும் எழுகிறது. இந்த பருவத்தில் வறண்ட சருமத்தை ஈர பதமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். இந்த கட்டுரையில் வறண்ட சரும பிரச்சனையிலிருந்து விடுபட பின்பற்றக்கூடிய சில வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்க: வளைவு நெளிவுமாக இருக்கும் கூத்தலை ஸ்ரெயிட் முடியாக மாற்ற அரிசி வீட்டு வைத்தியம்
கோடைக் காலத்தில் வியர்வை காரணமாக சருமத்தை மீண்டும் மீண்டும் சுத்தம் செய்கிறீர்கள். இதனால் கூட சருமம் வறண்டு போகலாம். கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி வறண்ட சரும பிரச்சனையிலிருந்து விடுபடலாம். கற்றாழை ஆண்டிசெப்டிக், பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு போன்ற பல பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் இந்த பண்புகள் அனைத்தும் சருமத்திற்கு நன்மை பயக்கும். அதேசமயம் அலோ வேரா ஜெல் உலர்ந்த சருமத்தை போக்க பயன்படுத்தலாம்.
குளித்த பிறகு அல்லது முகத்தை சுத்தம் செய்த பிறகு சிறிது அளவு கற்றாழை ஜெல்லை எடுத்து உடலிலும் மற்றும் முகத்திலும் மசாஜ் செய்யலாம். இரவு தூங்கும் முன் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம்.
வறண்ட சருமத்திற்கு கிளிசரின் பயன்படுத்தலாம். இரவு மற்றும் பகலில் கிளிசரின் பயன்படுத்தலாம். கிளிசரின் வறண்ட சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது. ரோஸ் வாட்டரில் கிளிசரின் கலந்து சருமத்தில் தடவலாம்.
மேலும் படிக்க: பார்க்கும்போதே ஈர்க்க செய்யும் உதடுகள் வேண்டுமா... இப்படி ட்ரை பண்ணிப்பாருங்க
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com