Beautiful Lips: பார்க்கும்போதே ஈர்க்க செய்யும் உதடுகள் வேண்டுமா... இப்படி ட்ரை பண்ணிப்பாருங்க

உங்கள் உதடுகள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும். உதடு ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் இருக்கும்

anatural lips big image

மாறிவரும் பருவத்தில் சருமத்தை நாம் அதிகம் கவனித்துக் கொள்ளும் அதே வேளையில் உதடுகளை பராமரிப்பதும் அவசியம். உதடுகள் வறண்டு அல்லது விரிசல் ஏற்பட்டால் உதடுகளில் சரியான உதட்டுச்சாயம் பூச முடியாது மேலும் பார்பதற்கு அழகாகவும் தெரியாது. அத்தகைய சூழ்நிலையில் உதடுகளுக்குச் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்த கட்டுரையில் உதடுகளை பராமரிக்க நீங்கள் பின்பற்றக்கூடிய சில குறிப்புகளை பார்க்கலாம்.

மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம்

moist inside

முகத்தில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தும்போது போல் உதடுகளையும் ஈரப்பதமாக வைத்திருப்பது அவசியம். மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவதால் உதடுகளை ஈரப்பதமாக்குவது ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் உதடுகளின் வெடிப்பு பிரச்சனையை குறைக்கிறது.

தேங்காய் எண்ணெய்

உதடுகளை ஈரப்பதமாக்க தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெயில் பல ஆரோக்கிய பண்புகள் உள்ளது. இந்த பண்புகள் அனைத்தும் முடி, சருமம் மற்றும் உதடுகளுக்கு நன்மை பயக்கும். உதடுகளில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது உதடுகளின் வெடிப்பு பிரச்சனையிலிருந்து விடுபட உதவும். மேலும் உதடுகள் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும்.

தேன்

honey lip inside

உதடு வெடிப்புகளை குணப்படுத்த தேனை பயன்படுத்தலாம். தேனில் சருமத்திற்கு நன்மை செய்யும் பல சத்துக்கள் உள்ளன. உதடு வெடிப்புக்கும் தேன் சிறந்த தீர்வாகும். தூசி மாசுபாட்டால் உதடுகள் வெடிப்பது பல நேரங்களில் நடக்கும். வெளியே செல்லும் போது லிப் பாம் பயன்படுத்துவது அவசியம். லிப் பாம் பயன்படுத்துவது உதடுகளில் ஒரு அடுக்கை உருவாக்குகிறது இது உதடுகளை தூசி மற்றும் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கும்.

உதடு பாரபரிப்பில் இந்த விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்

  • சருமத்தின் நிறத்திற்கு ஏற்ப லிப் பாம் மற்றும் மாய்ஸ்சரைசர் வாங்கவும்.
  • வாரத்திற்கு 2 முதல் 3 முறை உதடுகளை மசாஜ் செய்யவும்.
  • நிபுணரின்றி எந்த மருந்தையும் பயன்படுத்த வேண்டாம்.

இந்த உதவிக்குறிப்பு கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP