herzindagi
Rice keratin big image

Rice Keratin: வளைவு நெளிவுமாக இருக்கும் கூத்தலை ஸ்ரெயிட் முடியாக மாற்ற அரிசி வீட்டு வைத்தியம்

உங்கள் தலைமுடியும் வளைவு நெளிவுமாக இருந்தால் அதை போக்க வீட்டு வைத்தியம் பயன்படுத்தலாம்
Editorial
Updated:- 2024-04-27, 23:40 IST

முடியை சரியான முறையில் பராமரிக்க அனைவரும் முக்கியத்துவம் கொள்கிறோம். எனவே நம் தலைமுடிக்கு எதையாவது தடவும்போது அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு நம் முடியின் அமைப்பை கண்டிப்பாக கவனித்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் முடியை கெடுக்கும் பல விஷயங்கள் உள்ளது. ஆதே போல முடியை ஸ்ட்ரெய்ட்னிங் செய்யும்போது பார்லரும் கடைக்கு சென்று சிகிச்சை பெறுவதையே விரும்புகிறோம். நீங்கள் கெரட்டின் சிகிச்சை மூலம் உங்கள் தலைமுடியை நேராக்க விரும்பினால் அதை வீட்டிலேயே செய்யலாம்.

மேலும் படிக்க: கோடையில் முடி அதிகமாகவும், நீளமாகவும் வளர இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!!

அதன் ஒரு வழிமுறையை டாக்டர் ரேணு மகேஸ்வரி நம்மிடம் பகிர்ந்துள்ளார். இதில் மீதியுள்ள அரிசியைக் கொண்டு வளைந்த முடியை நேராக்குவது பற்றி கூறியுள்ளார். அவர் ஒரு அழகு நிபுணர் என்று சொல்லலாம். அவற்றின் வைத்தியம் பற்றி கூறியுள்ளார்.

அரிசி மற்றும் ஆளி விதைகளால் முடியை ஸ்ட்ரெய்ட்னிங் செய்யும் வழிகள் 

rice water inside

இரவில் வீட்டில் மீதமாகும் சாதம் மற்றும் ஆளி விதைகளைப் பயன்படுத்தி உங்கள் வளைந்த முடியை நேராக்கலாம். அரிசியில் உள்ள புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் முடியை வலுப்படுத்த வேலை செய்கின்றன. ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இவை இரண்டையும் சேர்த்து உபயோகித்தால் முடியை நேராக்கலாம். இந்த வகையான சிகிச்சையை வீட்டிலேயே செய்துகொள்வதன் மூலம் உங்களுக்கு குறைந்த பணச் செலவாகும்.

முடி ஸ்ட்ரெய்ட்னிங் செய்யும் பொருட்கள்

  • இரவு மிச்சமான சாதம்
  • ஆலிவ் விதைகள் - 50 கிராம் 

ஹேர் க்ரீம் செய்யும் முறை

  • இதற்கு முதலில் அரிசியை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும்.
  • பிறகு ஒரு மிக்சி ஜாடியை எடுத்து அதில் சாதம் போடவும்.
  • இப்போது அதனுடன் ஊறவைத்த ஆளி விதைகளை சேர்த்து கெட்டியான பேஸ்ட் செய்யவும்.
  • இதற்குப் பிறகு உங்கள் தலைமுடியில் தடவவும்.
  • பின்னர் ஒரு துண்டை தலையில் கட்டி முடியை உலர வைக்கவும்.
  • இந்த கிரீம் தடவி சுமார் 1 மணி நேரம் விடவும்.
  • இதற்குப் பிறகு தலைமுடியை தண்ணீரில் சுத்தம் செய்யுங்கள்.
  • இது உங்கள் வளைந்த முடியை ஸ்ட்ரெய்ட்னிங் செய்துவிடும்.

இந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்

rice water inside

  • அதைப் பயன்படுத்துவதற்கு முன் முடியை தண்ணீரில் சுத்தம் செய்த பிறகு பயன்படுத்துங்கள்.
  • தலை முடியில் வேர்க்குரு போன்ற புள்ளிகள் அல்லது பொடுகு பிரச்சனை இருந்தால் அதை தடவ வேண்டாம்.
  • நிபுணர் ஆலோசனையின்படி பொருட்களைப் பயன்படுத்துங்கள் இதனால் உங்கள் தலைமுடி நேராகவும் பட்டுப் போலவும் மாறும்.

மேலும் படிக்க: ஒரே மாதத்தில் முடி உதிர்வை குறைத்து நிலமாக வளர செய்யும் 4 உணவு பொருள்கள்!

டாக்டர் ரேணு மகேஸ்வரி கூறும் முறையை மாதம் இருமுறை முயற்சி செய்து வந்தால் முடி நேராக மாற ஆரம்பிக்கும். அதைப் பயன்படுத்திய பிறகு, நீங்கள் பார்லருக்குச் சென்று பணம் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் உங்கள் தலைமுடியின் அமைப்பு என்ன என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஹேர் க்ரீம்களை தலைமுடியில் பயன்படுத்தும்போது தலைமுடி சேதமடையாது.

முக்கிய குறிப்பு: முடிக்கு எதையும் பயன்படுத்துவதற்கு முன், நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com