பெண்கள் முடியைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள். வானிலை மாறும்போது கூந்தலை பாரமரிப்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இதற்காக நாம் வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்துகிறோம் அதின் விலை உயர்ந்த பொருட்களையும் முயற்சி செய்கிறோம். ஆனாலும் பல சமயங்களில் நம் முயற்சிகள் சரியாக இருப்பதில்லை, இதனால் கவலை அடைகிறீர்களா. நீங்கள் சில எளிய முறைகளைப் பின்பற்றிப் பாருங்கள் முடியைச் சரியாகப் பராமரிக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: முடி கொட்டுதா..! கவலை வேண்டாம் 1 மாதத்தில் நீளமாக வளர வீட்டு வைத்தியம்!
வெளியில் சென்று விதவிதமான கூந்தல் பொருட்களை வாங்கி உபயோகிக்கும் பெண்கள் ஏராளம். ஆனால் நீங்கள் அதை எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஏனெனில் உங்கள் தலைமுடிக்கு சீரம் வீட்டிலேயே தயார் செய்யலாம். இதனால் முடி வறண்டு போகாது. இதைப் பயன்படுத்துவதன் மூலம் தலைமுடியின் பளபளப்பும் நிலைத்திருக்கும். நீங்கள் வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த வேண்டும்.
மாசு மற்றும் வலுவான சூரிய ஒளியின் எதிரொலி நம் தலைமுடியில் தான் விழுகிறது. உயிரற்ற மற்றும் வறண்ட கூந்தலுக்குப் பல முடி பராமரிப்பு நடைமுறைகளைச் செய்கிறோம், பார்லருக்குச் சென்று பணம் செலவழிக்கிறோம். ஆனாலும் எந்த பயனும் இல்லை. கூந்தலை அழகாக்க ஹேர் ஆயில் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் வளர்ச்சியும் நன்றாக இருக்கும், உச்சந்தலையும் வலுவாக இருக்கும்.
சந்தையில் பல வகையான ஹேர் மாஸ்க்குகளை நீங்கள் காணலாம். ஆனால் நீங்கள் கெமிக்கல் இல்லாத ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்துவது நல்லது. நீங்கள் வீட்டில் ஹேர் மாஸ்க் தயாரிப்பதே சிறந்த வழி. இதற்கு தேங்காய் எண்ணெயுடன் ஹேர் மாஸ்க், மருதாணி ஹேர் மாஸ்க், கற்றாழை ஹேர் மாஸ்க், தயிர் ஹேர் மாஸ்க் போன்றவற்றை தடவலாம். அவற்றை தயாரிப்பதும் மிகவும் எளிதானது. உபயோகித்த பிறகு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களுக்கான முடி பராமரிப்பு வழிமுறைகள்
கூந்தல் அழகுக்கு வீட்டு வைத்தியத்தை விட சிறந்த வழி எதுவுமில்லை. நீங்களும் ஒருமுறை முயற்சி செய்து உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க, கீழே உள்ள கருத்துப் பிரிவில் கருத்துத் தெரிவிப்பதன் மூலம் எங்களிடம் கூறுங்கள் மற்றும் எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com