குளிர்காலத்தில் சருமத்துடன் முடியின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக ஏற்கனவே வறண்ட முடியை கொண்டிருப்பவர்கள் இந்த குளிர்காலத்தில் இன்னும் அதிகமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கூந்தலின் ஆரோக்கியம் கெட்டுப்போவதைக் கண்டு பதற்றமடைந்து மார்க்கெட்டில் விற்கப்படும் முடி சார்ந்த பொருட்களை பயன்படுத்துவதை பொதுவாக பார்க்க முடிகிறது. மார்க்கெட்டில் கிடைக்கும் பொருட்கள் மட்டுமின்றி, சமையலறையில் இருக்கும் சில பொருட்களை கூந்தலில் பயன்படுத்துவதன் மூலமும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
அந்த மாதிரியான 3 பொருட்களை பற்றி தான் இன்று உங்களிடம் சொல்ல போகிறோம். உங்கள் கிச்சனில் இவை எளிதாக கிடைக்கும். அதே சமயம் உங்கள் தலைமுடிக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பால்
குளிர்காலத்தில் பாலை முடிக்கு தடவுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. NCBI அறிக்கையின்படி பாலில் அதிக புரதம் உள்ளது. கேசீன் என அழைக்கப்படும் புரதம் பாலில் இருப்பதால் இது முடியை மென்மையாக்குவது மட்டுமல்லாமல் அதை வலுவாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகிறது. மறுபுறம் பாலில் கால்சியத்தின் அளவும் மிக அதிகமாக இருப்பதால் இது முடி வளர்ச்சியை மேம்படுத்தி முடி உதிர்வை தடுக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் தலைக்கு குளிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்!
பாலில் வைட்டமின்-டி உள்ளது. இது புதிய முடிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதனால் புதிய முடி உற்பத்தியாகிறது. பாலில் வைட்டமின்-ஏ, பி6 மற்றும் பொட்டாசியம்உள்ளது. இது முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.
நீங்கள் பாலை நேரடியாக தலைமுடிக்கு பயன்படுத்தலாம். உங்களின் முடி எண்ணெய் பசையாக இருந்தால் பச்சை பாலுக்கு பதிலாக கொதிக்க வைத்த பாலை பயன்படுத்தவும் தேன், கற்றாழை போன்றவற்றை பாலில் சேர்த்து பயன்படுத்தினால் அது கூந்தலுக்கு கூடுதல் பலனை தரும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தின் பாரம்பரிய மற்றும் மருத்துவ பயன்பாடு குறித்து Journal Of Pharmacognosy And Phytochemistry வெளியிடப்பட்ட ஆய்வின் படி, வாழைப்பழத்தை முடியில் தடவுவதால் பல நன்மைகள் கிடைத்துள்ளன. வாழைப்பழம் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசர், இது கூந்தலுக்கு பொலிவைத் தருவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எனவே இதை கண்டிஷனராகவும் பயன்படுத்தலாம்.
குறிப்பாக பொடுகு பிரச்சனை இருந்தால் வாழைப்பழம் அதை குறைத்து முடியை மென்மையாக்குகிறது. அதுமட்டுமின்றி வாழைப்பழம் முடியின் வெடிப்புகளையும் சரிசெய்கிறது. இதில் இருக்கும் சிறந்த விஷயம் என்னவென்றால் வாழைப்பழம் முடியின் உறுதித்தன்மையை அதிகரிக்க செய்கிறது. குளிர்காலத்தில் உங்கள் தலைமுடி வறண்டிருந்தால் மதிய நேரத்தில் துருவிய வாழைப்பழத்தை தயிருடன் சேர்த்து தலைமுடியில் தடவி 30 நிமிடங்களுக்குப் பிறகு ஷாம்பூ தேய்த்து குளித்து பாருங்கள். இதன் பலனை பார்ப்பீர்கள்.
நெய்
வீட்டு கிச்சனில் நெய் எளிதில் கிடைக்கும். சுத்தமான பசு நெய்யை முடிக்கு தடவுவதால் பல நன்மைகளை பெறலாம். ஹெல்த்லைன் தளத்தின்படி, நெய்யில் வைட்டமின்-ஈ மற்றும் வைட்டமின்-ஏ உள்ளது, இது முடியை சீராக்குகிறது. தலைமுடி அதிகம் உதிர்ந்தால் குளிர்காலத்தில் உங்கள் தலைமுடிக்கு நெய் தடவுவது சிறந்த தேர்வாக இருக்கும்.
மிகவும் மெல்லிய கூந்தலுக்கு நெய் ஒரு வரப்பிரசாதம். இதனால் தலைமுடி அடர்த்தியாக இருப்பதுடன் கூந்தலும் அடர்த்தியாக தெரியும். உச்சந்தலை பராமரிப்புக்கும் நெய் மிகவும் நல்லது. நீங்கள் நெய்யை நேரடியாகவும் கூந்தலுக்கு தடவலாம் மற்றும் கற்றாழை அல்லது ரோஸ் வாட்டருடன் கலந்து முடிக்கு சிகிச்சையும் அளிக்கலாம். இது கூந்தலுக்கு பளபளப்பைக் கொண்டு வந்து முடியை மென்மையாகவும் மாற்றுகிறது, ஆனால் எண்ணெய் வைத்த தலையில் நெய்யை தடவ கூடாது.
இந்த பதிவும் உதவலாம்: சலூன் ஸ்டைலில் வீட்டிலேயே முடிக்கு கலர் செய்வது எப்படி?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik