herzindagi
long hair home remedy

Long Hair Home Remedy: முடி கொட்டுதா..! கவலை வேண்டாம் 1 மாதத்தில் நீளமாக வளர வீட்டு வைத்தியம்!

முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்க பல முறைகளை பின்பற்றி தோல்வி அடைகிறோம். ஆனால் இந்த முறைப்படி செய்தால் 1 மாதத்தில் முடி நீளமாக வளரும்.
Editorial
Updated:- 2023-06-05, 17:40 IST

நீளமான அடர்த்தியான மற்றும் கருமையான கூந்தல் பெண்களுக்கு அழகு சேர்க்கிறது. உங்கள் முகம் நன்றாக இருந்தாலும் கூந்தல் மெல்லிதாக இருந்தால் அது உங்களுக்கு அழகாய் இருக்காது. இதனால்தான் பல பெண்கள் வெளியில் கிடைக்கும் பல பொருட்களை வாங்கி மெல்லியதாக இருக்கும் கூந்தலை அடர்த்தியாக இருப்பது போல் காட்டிக்கொள்கிறார்கள்.

இந்த பொருட்களில் உள்ள கடுமையான இரசாயனங்கள் உங்கள் முடியை மேலும் உயிரற்றதாக ஆக்குகிறது. இதன் காரணமாக முடியின் ஊட்டச்சத்து நின்று போகிறது மற்றும் முடியின் வளர்ச்சியும் குறைகிறது. உங்கள் தலைமுடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் வைத்திருக்க விரும்பினால் இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும் உங்கள் தலைமுடியும் 1 மாதத்தில் நீளமாக வளரும்.

இந்த பதிவும் உதவலாம்: முடி உதிர காரணமும் அதை தடுக்கும் முறைகளும்!

அலோ வேரா ஜெல்

aloe vera gel for hair

முடியை நீளமாக்க கற்றாழை ஜெல்லை கூந்தலுக்கு பயன்படுத்தலாம், இது கூந்தலுக்கு ஊட்டமளிப்பதுடன் நன்றாக வளரவும் உதவுகிறது.

பொருட்கள்

  • அலோ வேரா ஜெல் - 2 தேக்கரண்டி
  • முட்டை - 1

செய்முறை


  • ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதில் அலோ வேரா ஜெல் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • பின்னர் இந்த கலவையை உங்கள் தலைமுடிக்கு தடவவும்.
  • 30 நிமிடங்கள் உங்கள் தலைமுடியை அப்படியே விடவும்.
  • இதற்குப் பிறகு, உங்கள் தலைமுடியை ஷாம்பூவுடன் சுத்தம் செய்யுங்கள்.

குறிப்பு: நீங்கள் விரும்பினால் கற்றாழையைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் தலைமுடியை ஸ்ட்ரீம் செய்யலாம்

கறிவேப்பிலை எண்ணெய்

curry leaf oil

அடர்த்தியான மற்றும் நீலமான கூந்தலுக்கு கறிவேப்பிலை எண்ணெய்யைத் தலைமுடிக்கு தடவலாம். இதனால் முடி மிக வேகமாக வளரும்.

இந்த பதிவும் உதவலாம்: தலைமுடிக்கு ஏற்ற மிகச் சிறந்த எசென்ஷியல் ஆயில் எது தெரியுமா?

பொருட்கள்

  • கறிவேப்பிலை - 6 முதல் 7 இலைகள்
  • தேங்காய் எண்ணெய் - 4-5 தேக்கரண்டி

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதனுடன் கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக சூடாக்கவும்
  • பின் இறக்கி விடவும்.
  • பின்னர் வெதுவெதுப்பான எண்ணெய்யைக் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்.
  • ஒரு மணி நேரம் கழித்து ஷாம்புவைப் பயன்படுத்தி தலைமுடியைக் கழுவவும்
  • இப்படி செய்தால் 1 மாதத்தில் முடி நன்றாக வளரலாம்.

குறிப்புகள்: வாரம் ஒருமுறை இதனை முயற்சி செய்யலாம்.

சிறந்த முடி வளர்ச்சிக்கு உங்கள் முடியை சூரியன் மற்றும் தூசியிலிருந்து முடிந்தவரை பாதுகாக்க வேண்டும். இதனால், முடியின் வளர்ச்சி குறைவதுடன் அவை உயிரற்றதாகவும் மாறும். இந்த உதவிக்குறிப்புகளை முயற்சி செய்யுங்கள்.

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க, கீழே உள்ள கருத்துப் பிரிவில் கருத்துத் தெரிவிக்கலாம். இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரையை படிக்க herzindagi-யுடன் இணைந்திருங்கள்.

Images Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com