
தென்னிந்திய பகுதிகளின் உணவு, கலாச்சாரம் மற்றும் கோவில்கள் உலகளவில் பிரபலமானது. அதிலும் நம் பாரம்பரிய ஆடைகள் தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தையே பிடித்துள்ளன. வருடம் முழுவதும் மாடர்ன் உடைகளை அணிந்தாலும், வீட்டு விஷேசங்கள் மற்றும் பண்டிகை நாட்களுக்குப் பாரம்பரிய ஆடைகள் அணியவே பலரும் விரும்புகின்றனர்.
குறிப்பாக குழந்தைகள் பட்டுப் பாவாடை, வேஷ்டி சட்டை, பாவாடை தாவணி போன்ற பாரம்பரிய ஆடைகள் அணியும் போது, அது அவர்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கும். இந்த வகையில் வரும் பொங்கல் திருநாள் அன்று, உங்கள் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான பாரம்பரிய ஆடைகள் அணியலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

உங்கள் குழந்தைக்குப் பரம்பரியமான, அதே சமயம் சௌகரியமான ஆடையைத் தேடுகிறீர்கள் என்றால் இந்த பட்டுப் பாவாடை மிகவும் பொருத்தமாக இருக்கும். ஒரிஜினல் ஜரிகை கொண்ட காஞ்சி பட்டுத் துணியை வாங்கி, உங்கள் குழந்தையின் அளவுக்கு ஏற்ப பட்டுப் பாவாடை தைக்கலாம். இது விலை உயர்ந்ததாக இருந்தாலும் பார்ப்பதற்கு நேர்த்தியாக இருக்கும். ஆனால் இப்போது குழந்தையின் வயதுக்கு ஏற்ப பட்டுப் பாவாடைகள் கிடைகின்றன். இவை 500 ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கின்றன. பட்டு பாவாடை தைக்க நேரமில்லை எனில், இது போன்ற ரெடிமேட் பட்டுப் பாவாடைகளை உங்கள் குட்டி தேவதைக்கு வாங்கலாம்.
இவ்வகை ஆடைகள் குழந்தைகள் மற்றும் இளம் வயது பெண்கள் விரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடர்த்தியான எம்பிராய்டரி அல்லது கண்ணாடி வேலைப்பாடுகளுடன் பிரகாசமான வண்ணங்களில் கிடைகின்றன. பல அடுக்குகளைக் கொண்ட லேஹங்கா இப்போது மிகவும் பிரபலமாக உள்ளது. இதற்கு ஏற்ற அணிகலன்களுடன் உங்கள் செல்ல மகள் தேவதைபோல இருப்பார்.

இது பெண்களுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது. காட்டன், பட்டு, சந்தேரி போன்றவற்றில் உங்களுக்கு விருப்பமான துணியால் இதை நீங்கள் வடிவமைத்துக் கொள்ளலாம். இது கணுக்கால் வரை நீண்டு இருக்கும். இதற்கு ஏற்ற மேட்சிங் லெக்கிங்ஸ் அல்லது பேண்ட் இணைத்துக்கொள்ளலாம். மடிப்புகள் நிறைந்த அனார்கலி ஆடை அணிந்து குழந்தை சுற்றும் போது பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.
குழந்தையின் வயதிற்கு ஏற்ப வேஷ்டி சட்டை வாங்கி கொள்ளலாம். நல்ல அடர் நிற சட்டைகளை தேர்வு செய்தால் வேஷ்டியுடன் அணிய பொருத்தமாக இருக்கும். ஒரு சில கடைகளில் இதற்கு ஏற்ப மைனர் செயின், காப்பு மற்றும் ஸ்டைல் ஆன மூக்கு கண்ணாடியும் செட் ஆகக் கிடைக்கின்றன. உங்கள் சுட்டி குழந்தைக்கு இந்த பொங்கலுக்கு இது போன்ற பாரம்பரிய ஆடையைத் தேர்வு செய்யலாம்.

பண்டிகை முதல் வீட்டு விஷேசங்கள் வரை எல்லா நிகழ்வுகளுக்கும் ஏற்றது இந்த குர்த்தா பைஜாமா. இவை பார்க்க நேர்த்தியாகவும், அழகாகவும் இருப்பதுடன் அவர்கள் அணிந்து கொள்ள சௌகரியமாகவும் இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: சிம்பிள் புடவைகளில் ஸ்டைலாக தெரிவது எப்படி?- இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்
இது ஒரு புது காம்பினேஷன். கொஞ்சம் நீளமான குர்தா போன்ற மேல் சட்டைக்கு ஏற்றவாறு தோத்தி வடிவமைக்கப்படிருக்கும். இதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா? பேண்ட் மற்றும் வெட்டியின் கலவையான தோத்தி பேண்ட் தான். இது குழந்தைகள் அணிய மிகவும் வசதியாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: பொன்னியின் செல்வன் திரிஷாவை போல ஸ்டைலாக சேலை கட்டி அழகாக இருக்க சூப்பர் டிப்ஸ்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com