herzindagi
trisha saree tips big

பொன்னியின் செல்வன் திரிஷாவை போல ஸ்டைலாக சேலை கட்டி அழகாக இருக்க சூப்பர் டிப்ஸ்!

நீங்களும் புடவையில் திரிஷாவைப் போல அழகாக இருக்க விரும்பினால் இந்த பதிவை படித்தறியலாமே.
Editorial
Updated:- 2022-10-22, 12:23 IST

பெண்கள் எப்போதுமே தங்களை அழகுப்படுத்தி கொள்வர். ஆனால், பண்டிகை நாட்களில் இன்னும் அதிகமாக அலங்கரித்துக்கொள்ள ஆசைப்படுவர்,அவர்கள், தங்களின் அழகை மேலும் மெருகேற்றி கொள்வதை ஒவ்வொரு வாய்ப்பாகவே கருதுகின்றனர். பெண்களின் அலங்காரம் மற்றும் ஆடை, அதிலும் குறிப்பாக புடவையை பற்றி குறிப்பிடாமல், இதனை விவரிக்க முடியாது. இப்போதைய ஃபேஷன், முன்பை விட நிறையவே மாறி விட்டது. ஆனாலும் சேலைக்கு இணையான ஆடை எதுவும் இல்லை என்பதே உண்மை.

நீங்கள் விதவிதமான சேலை அணிய ஆசைக்கொள்கிறீர்கள் எனில், கண்டிப்பாக இந்த பதிவை படித்து பயன்பெறலாம். ஏனென்றால் நீங்கள் விரும்பக்கூடிய, மிக அழகான நடிகை திரிஷா புடவை வடிவமைப்பை இன்று நாங்கள் உங்களுக்குக் காட்டப் போகிறோம்.

காட்டன் ஒயிட் சிக்கன்காரி புடவை

trisha saree tips

இந்த போட்டோவில், திரிஷா அழகாகவும் நேர்த்தியாகவும் வெள்ளை நிற சிக்கன்காரி சேலை அணிந்துள்ளார். திரிஷா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார், அதோடு, இந்தப் புடவை மேலும் அவருக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது. நீங்களும் அப்படிப்பட்ட சேலையை வாங்கி உங்கள் அழகிற்கு அழகு சேர்க்கலாம். நீங்கள் விரும்பினால், இந்த வழிகளிலும் சேலையை கட்டலாம் -

  • வெள்ளை நிறம் மிகவும் அழகாக இருந்தாலும், விரைவில் அழுக்காகிவிடும். அதனால், நீங்கள் மற்ற நிறங்களில் கூட புடவைகளை வாங்கலாம்.
  • நீங்கள் காதுகளில் கனமான, பெரிய காதணிகளை போடலாம், இது உங்களை மேலும் அழகாக்கும்.
  • நீங்கள் விரும்பினால், பல வண்ணங்கள் நிறைந்த வளையல்களை அணியலாம்.

கருப்பு ஜார்ஜெட் புடவை

trisha saree tips

இந்த எளிமையான கருப்பு புடவை திரிஷாவை மேலும் அழகாக்குகிறது. இந்த புடவைக்கு V வடிவ நெக் பிளவுஸ் இன்னும் அழகாக இருக்கிறது. இந்த எளிய அழகான சேலையை நீங்கள் இவ்வாறு கட்டலாம் -

  • சிலர் பண்டிகை நாட்களில் கருப்பு நிற உடைகள் அணிவதை தவிர்ப்பார்கள். நீங்கள் விரும்பினால், வேறு எந்த நிறத்திலும் சேலையை எடுத்து கொள்ளலாம்.
  • நீங்கள் V வடிவ பிளவுசுக்கு பதிலாக வட்டமான அல்லது அகலமான நெக் பிளவுசையும் போடலாம், அதுவும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
  • நீங்கள் காதுகளில் பொருத்தமான காதணிகளை அணியலாம்.
  • திரிஷா தனது தலைமுடியை பின்னாமல், அப்படியே தளர்வாக விட்டுள்ளார், ஆனால் நீங்கள் எளிமையான மெஸ்ஸி பன் எனப்படும் கொண்டையையும் போடலாம்.

மஞ்சள் நிற சிஃப்பான் புடவை

trisha saree tips

இந்த போட்டோவில் திரிஷா எவ்வளவு அழகாக இருக்கிறாரோ, அதே போல உங்களாலும் அழகாக இருக்க முடியும். மஞ்சள் நிறம் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது, எனவே நீங்களும் இதே போன்ற மஞ்சள் புடவையை ஸ்டைலாக அணியலாம். இந்த சேலையில் முத்துக்கள் பொருத்தப்பட்டு, ஃபெதர் வொர்க் செய்யப்பட்டுள்ளதால், இன்னும் அழகாக இருக்கிறது. இந்தப் புடவையை நீங்கள் பல வழிகளில் கட்டலாம் -

  • இந்த புடவையை ஒற்றை மடிப்பில் கட்டினால் நன்றாக இருக்கும்.
  • திரிஷா ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் போட்டுள்ளார், நீங்கள் உங்களுக்கு பிடித்தவாறு பூக்கள் உள்ள ஸ்லீவ்ஸையும் போடலாம்.
  • திரிஷாவைப் போலவே, நீங்கள் உங்கள் காதுகளுக்காக எளிமையான வளையல்கள் மற்றும் எளிமையான காதணிகளை தேர்வு செய்யலாம்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com